[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மதம் தோன்றிய விதம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
இறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.

மதம் தோன்றிய விதம்

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூன் 12th, 2014, 8:13 pm

"என் மதம்! உன் மதம்!! நம் மதம்!!!"

Image

உண்மையிலே கடவுள் என்பவர் இருந்தால் இந்த மனிதர்களை பார்த்து கோபப்படுவதா? இல்லை பரிதாபபடுவதா? என யோசிப்பார்...

மனிதன் அவ்வளவு மதங்களை உருவாக்கி இருக்கிறான். மதங்களை கடந்த அன்பு என்பது அரிதாகவே உள்ளது.

"மனிதர்களிடம் அன்பு செலுத்த முடியாது போனால், கண்ணால் காண முடியாத இறைவனிடம் எங்ஙனம் அன்பு செலுத்த முடியும்" என்ற அன்னை தெரசாவின் கூற்று எவ்வளவு உண்மையான கூற்று. மதங்களை கடந்த மனிதநேயத்தை யாரும் மதிப்பதில்லை...

சரி இந்த மதங்கள் எப்படி தான் உருவானது என யோசித்தால் நமக்கு ஒரு சின்ன கற்பனை கதை தேவைப்படுகிறது.

ஆதியில் மனிதன் பேசிய மொழி எங்கள் மொழி தான் என பல மொழி அறிஞர்கள் விவாதங்களும், பட்டிமன்றங்களும் வைத்து சண்டை போட்டு கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஆதியிலே மனிதன் பேசிய மொழி என்னவாக இருக்கும் என்றால் வெறும் சைகைகளும் மற்றும் சங்கேத ஒலிகள் மட்டுமே. தோலாடைகள் மற்றும் இலைகளை கோர்த்து அணிந்து கொண்டு குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். இடி, மின்னல், மழை, வெள்ளம் மற்றும் பூமி அதிர்ச்சி வரும் காலங்களில் வேறுவேறு இடங்களுக்கு சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தான். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்தனர். அந்த காலங்களில் அவன் பயந்தது இயற்கைக்கு மட்டுமே.

ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.

வயதான பெண் ஒருத்தி ஒருநாள் இந்த கூட்டத்தை விட்டு பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்க துவங்கினாள். இனம் புரியாத எண்ணங்கள் அவளுடைய மனதில் தோன்றின. அவள் மனதில் எழுந்த நிறைய கேள்விகளுக்கு பதில் அங்கு கிடைத்தது. புதுப்புது சிந்தனைகளால் வானின் நட்சத்திரங்களை கணக்கெடுத்தாள். பூமியின் சுயற்சியை கண்டுகொண்டாள். செடி, கோடி வளர்ப்பதை தெரிந்து கொண்டாள்.

தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்க பழகினாள். கோள்களின் பாதையை புரிந்து கொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும், உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கை பற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்து போனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதை போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களை பார்த்ததும் கை, கால்களை அசைத்து ஒருவகை நாட்டியம் ஆடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

அந்த நாட்டியத்திற்கு அர்த்தம் புரியவில்லை என சைகை செய்தனர்.

"உண்மைகளை அறிந்து கொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"செல்லொண்ணா பேரின்பம்" என்றாள்.

"பைத்தியக்காரி" என்றனர்.

"ஆமாம் அசாதாரண சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள் தான்" என்றாள்.

"அவளை விடுங்கள்" பெரியவர் ஒருவர் முன்வந்தார். "உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது சொல் அதை எங்களுக்கும்" என்றார்.

"இயற்கை" என்றாள்.

"விளக்கு" என்றார்.

அவளுக்கு புரிந்ததை சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்" என்றனர்.

கதைகளாய் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்" என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எரிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்க சொன்னார் பெரியவர்.

Image

"அந்த சூரிய கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது"

இயற்கை வழிபாடு:

மதங்கள் என்பது காட்டுமிராண்டிதனமாக வாழ்ந்த மனிதனை நெறிமுறைபடுத்த உருவாக்கப்பட்டவையே... கடவுள் என்று யாரும் வந்து நான் இப்படி தான் இருப்பேன் என்று யாருக்கும் தரிசனம் தந்ததும் கிடையாது, யாரிடமும் பேசியதும் கிடையாது. இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி! மதங்கள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே. இன்று இருக்கும் மதங்களில் அறிவியலும் மூடநம்பிக்கைகளும் கலந்தே இருக்கின்றன.

ஆதி கால மக்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தர்கள் குறிப்பாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பூமி, மழை, வானம், அக்னி, மர வழிபாடு மற்றும் சூரிய வழிபாடு போன்ற வழிபாடுகளே நடைபெற்று வந்துள்ளது. நாளடைவில் கல் வழிபாடு தோன்றியது. இந்த கல் வழிபாடு என்பது பல விதமான வேறுபாடுகளில் இன்றும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாது மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் ஒரு சிலது பயத்தின் அடிப்படையிலும் எழுந்தன. மிருக வழிபாடு ஆரம்ப காலங்களில் பயத்தின் அடிப்படையிலும் பிறகு மிருக வதை தடுப்பதற்கும் கூட உருவாகி இருக்கலாம்.
*இடி,
*மின்னல்,
*மழை,
*சூரிய வழிபாடு,
*கொடிய விலங்குகள் ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுக்கல் வழிபாடு:

இந்த நடுக்கல் என்பது தமிழகத்தின் கிராமங்களில் ஊருக்கு வெளியிலேயோ அல்லது ஊருக்கு மத்தியிலேயோ வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான விசேஷ தினங்களில் அதற்கு படையல் வைத்து கும்பிடுவார்கள். இப்படிப்பட்ட நடுக்கற்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஜாத்திரை நடத்துவார்கள். இந்த ஜாத்திரை என்பது ஒரு வாரம், பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் கூட இன்றும் பல கிராமங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. எனக்கு தெரிந்து திருப்பதியில் மட்டும் பதினைந்து நாட்கள் நடுக்கல்லிற்கு ஜாத்திரை நடத்துகிறார்கள். இந்த நடுக்கல் வழிபாடு மற்றும் அதற்கு ஜாத்திரை எதற்கு நடத்துகிறார்கள் என்பதை அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம். இந்த நடுக்கல் வழிபாட்டை சக்திக்கல் வழிபாடு என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.
* கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்
* தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.


நன்றி இணையம்
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: மதம் தோன்றிய விதம்

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » ஜூன் 12th, 2014, 8:38 pm

நல்ல வரலாற்று பதிவு நன்றி பகிர்வுக்கு
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: மதம் தோன்றிய விதம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 12th, 2014, 8:45 pm

மதம் உருவான விதம் பற்றிய பகிர்வு பயனுள்ள பதிவு :-gd :-gd
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to இறைவழிபாடுகள் (Worships)

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 47 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron