[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி

வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]by பாலா » மே 26th, 2014, 12:47 pm

Image
இப்பிரபஞ்சத்தில் நாம் உறுதியாக அறிந்த ஒரேயொரு புத்திக் கூர்மை மிக்க உயிரின வாழ்க்கையாக நமது பூமியில் நிகழும் மனித வாழ்க்கையைக் கூறலாம்.

இந்நிலையில் மனிதன் தன்னைப் போல் புத்திக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக வாசிகள் யாரும் இப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகின்றனரா என்று மேற்கொள்ளும் ஆராய்ச்சி அவனுக்கே சாபக் கேடாக அதாவது மனித இனத்தின் அழிவுக்கே வழி வகுக்கலாம் என விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலைக் கூறுகின்றனர்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவது 'பெரிய வடிகட்டி' என்று பொருள் படும் Great Filter தத்துவம். அதாவது இப்பிரபஞ்சத்தில் புத்திக் கூர்மை மிக்க உயிரினங்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தைத் தாண்டி வளர்வதை ஒரு மர்ம வேலி போன்ற சக்தி தடுத்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். Great Filter என அழைக்கப் படும் இவ்வேலி மனித வாழ்க்கையின் கடந்த காலத்தில் இருந்திருக்கும் என்றும் வருங்காலத்தில் நாம் எதிர் நோக்க வேண்டிய சவாலாகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.

நாம் இப்பிரபஞ்சத்தில் வேறு ஏதும் புத்திக் கூர்மை மிக்க உயிரினங்களைக் கண்டு பிடித்தால் இந்த Great Filter இன் விளைவை நாம் சந்திக்க நேரிடும் எனப்படுகின்றது. அதாவது மனித இனம் உட்பட இப்பிரபஞ்சத்தில் ஏதேனும் பாகத்தில் வசிக்கும் ஏனைய தொழிநுட்ப அறிவு மிக்க அனைத்து உயிரினங்களின் நாகரீகங்களும் தமது அண்டத்தில் (Galaxy) இருந்து இன்னொரு அண்டத்துக்கு பயணிப்பதை இந்த Great Filter இன் செயற்பாடு தடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதனால் நாம் மட்டுமல்லாது வேற்றுக் கிரகவாசிகளும் கூட தமது நாகரீகத்தின் உச்சத்தில் அதாவது அறிவின் உச்சத்தினை அடையும் போது பேரழிவை விரைவில் சந்திக்கும் கட்டத்தில் இருப்போம் என விஞ்ஞானிகள் எச்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த Great Filter தத்துவம் பிரபஞ்சத்தில் நிச்சயம் செயற்படுகின்றது என்பதற்கு சான்றாக இந்த வாதத்தை விஞ்ஞானிகள் முன் வைக்கின்றனர். அதாவது விஞ்ஞான வானியல் ஆராய்ச்சி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் மனிதன் தற்போது நமது சூரிய குடும்பத்தைப் போன்ற நூறு பில்லியன்களுக்கும் மேற்பட்ட நட்சத்திர மண்டலங்கள் பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பதை அறிவான். இந்நிலையில் நமது பூமியைத் தவிர்த்து இந்த பில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்களில் பூமியைப் போன்றே உயிர் வாழ்க்கையின் பரிணாமத்துக்கு உதவக் கூடிய சூழல் அமைந்திருக்கும் பல கிரகங்கள் அடையாளம் காணப்பட்ட போதும் இதுவரை நம்மைப் போன்ற உயிரினங்களை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதே இவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. Fermi Paradox என்று அழைக்கப் படும் இந்தக் கேள்விக்கான பதிலாக Great Filter தத்துவம் கூறப்படுகின்றது.

விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத UFO எனும் பறக்கும் தட்டு பற்றிய கட்டுக் கதைகளைத் தவிர்த்துப் பார்த்தால் enrico Fermi என்ற பௌதிகவியலாளர் கூறும் Fermi Paradox ஞாயமானதாகவே தோன்றுகின்றது. இதேவேளை பூமியில் மனித வாழ்க்கை தோன்றி 200 000 வருடங்களில் நாம் பல சூப்பர் எரிமலைகள், விண்கற் தாக்குதல்கள் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களில் இருந்து தப்பி வந்துள்ளோம் என்றும் விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 26th, 2014, 4:47 pm

விபரீதமாக நடக்காமல் ஆய்வு மேற்கொள்ளுங்கப்பா........
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவியல்

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 69 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]