[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » மே 18th, 2014, 4:11 pm

Image
விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்காக, விஞ்ஞானிகள் ஐந்து வகை யான வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து அதன் சிறகுகளின் முப்பரிமாண உள்ள மைப்பு ஏடுகளை அறிய X - கதிர் ஒளிச் சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் கைராய்டு எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பி லானது எனவும், இந்த கைராய்டுகள் கிரிஸ் டல்கள் (படிகம்) போல செயல்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்து கிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை இரு பரிமாண எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளை கொண்டு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த ஆய்வில் ஒரு உறுதியான முன்னேற்றமின்றி இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் சிறப்பாக காணமுடிகிறது. அதுசரி இந்த கைராய்டுக்கு வருவோம். இந்த கைராய்டு என்பது மின்விசிறியின் இலை போன்றது. தானாக பொருந்தக்கூடிய, நான்கு அடுக்கு களில் ஒன்று. இது நன்கு உறுதியான சிடின் என்னும் ஸ்டார்ச்சினால் ஆனதாகும். இந்த கைராய்டு அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் அமைந்துள்ள செல் ஏடு சவ்வானது வளர்ந்து செல்களின் உள்ளே மடித்து வைக்கப் படுகிறது. இந்த மடித்து வைக்கப்படும் சவ்வானது இரு கைராய்டுகளாக உருவாகிறது. வெளி மற்றும் உட்புற செல்களின் சவ்வு களானது இந்த இரு கைராய்டுகளையும் கண்ணாடி அமைப்புடைய வலைதளமாக மாற்றுகிறது. சிடின் வெளிப்புற கைராய்டில் சேமிக்கப்படுகிறது. இதனால் அது ஒரு திடப் படிகமாக மாறுகிறது.

பின்னர் அந்த செல் இறந்துபோவதால் ஒரு மிக நுண்ணிய அமைப்பினைக் கொண்ட ஒளி ஊடுருவும் தன்மையுடன் படிகம் உருவாகிறது. இந்த படிகம் போன்ற அமைப்பு ஒன்றை மற்றும் எதிரொளித்துவிட்டு ஒளியின் மற்ற எல்லா அலைநீளங்களையும் அதனுள் கடத்திவிடுகிறது.

கைராய்டின் அளவு நிறத்தை தீர்மானிக் கிறது. அதன் அமைப்பு சுருங்கும்போது நிறம் மங்கலாகவும் விரிவடையும் போது சிவப்பாகவும் மாறுகிறது. மேலும் பல நீண்ட காலம் நீடித்து நிலைக்கக் கூடியதும், மங்க லாகாததுமாகும் இதன் நிறம். இவ்வாறுதான் பட்டாம்பூச்சிகள் நிறத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பண்பினால், ஒற்றை கைராய்டுகள் நுட்பத்தை கண்ணாடிகளிலும் சூரிய ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்திலும் பயன் படுத்தலாம். இதே நுட்பத்தை சிறந்த கண்ணாடி பொருள்கள் தயாரிப்பிலும், மிகச்சிறந்த சோலார் செல்கள் உருவாக்குவதிலும் பயன் படுத்தமுடியும்


நன்றி:இணையம்
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » மே 18th, 2014, 4:18 pm

வண்ணத்து பூச்சியின் வண்ணம் பற்றிய அறிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி .. :-gd :-gd :-gd
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to அறிவியல்

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 56 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron