[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி

ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 7th, 2014, 9:18 am

Image


திருச்சி சுற்று வட்டாரப் பகுதியில் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக முக்கொம்பு உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 18-வது கிலோமீட்டரில் உள்ளது இந்த இடம்.

அன்றாட அலுவல்களை மறந்து ஒரு நாள் முழுக்க ஓய்வாக இருக்கச் சிறந்த இடம் முக்கொம்பு. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்ட 5 நிமிஷங்களிலேயே நகரப் பரபரப்பு மறைகிறது. காவிரிக் கரையை ஒட்டியவாறே செல்லும் கரூர் சாலையில், சுமார் அரை மணி நேரம் பயணம் செய்தால் முக்கொம்பு வரவேற்கிறது.

பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், மெல்லிய காற்று இதமாக வரவேற்கிறது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. மன அமைதியைக் குலைக்கும் சப்தங்கள் இல்லை. அருகில் உள்ள மரங்களில் இருந்து பெயர் தெரியாத பறவைக் கூட்டங்கள், மெல்ல குரல் எழுப்பி நம்மை வரவேற்கின்றன.

சுற்றுப்புற அமைதி, நமது மனதை லேசாக்குகிறது. நடுத்தர வயதைக் கடந்தவர்கள் பூங்காவில் உள்ள மரத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் பெஞ்சுகளில் “அப்பாடா’ என்று நிம்மதியாய் உட்காருகிறார்கள்.

பரந்து விரிந்து ஒடி வரும் காவிரி இந்த இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒரு புறம் காவிரி என்றும், இன்னொருபுறம் கொள்ளிடம் என்ற பெயர்களுடன் இரண்டு ஆறுகளாய் பிரிந்து செல்கிறது.

பிரிந்து செல்லும் ஆற்று நீரைப் சேமிப்பதற்காக கொள்ளிடம், காவிரி இரண்டிலும் தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியில் நீர் அதிகமாக வரும் காலங்களில் தீவுக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தடுப்பணையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். ஆற்றின் இரண்டு கரைகளிலும், தடுப்பணையை ஒட்டியவாறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காளையாய் துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள் “ஜயன்ட் வீல், குடை ராட்டினம், நீர்ச் சறுக்கு’ ஆகியவற்றில் விளையாடி மகிழ்கிறார்கள்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய குளம். அதில் பெடலிங் படகு. படகில் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.
நண்பகல் வெயில் சற்று அதிமாகிறது. சுற்றுலா வந்த மக்கள் தங்கள் கொண்டு வந்திருந்த உணவை மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். பின்பு, சிறிது நேரம் குட்டித் தூக்கத்தில் தங்களையறியாமல் ஆழ்ந்து விடுகிறார்கள். தூக்கம் கலைந்த பின்னர், அடுத்ததாக காவிரி ஆற்றில் குளிக்கச் செல்கிறார்கள்.

இப்போது, கோடை காலம் என்பதால், காவிரியில் நீர் வரத்து குறைவாக உள்ளது. இரண்டு கரைகளிலும் மெல்லிய நீரோடையாய் காவிரி ஓடுகிறது. சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் ஆசை தீர, முழங்கால் அளவு ஓடும் நீரில் குளிக்கிறார்கள்.

அரை மணி நேரக் குளியல், பசியெடுக்க வைக்கிறது. தலையை துவட்டிக் கொண்டே, பெரும்பாலோனோர் செல்வது அங்குள்ள கடைகளுக்கு. சுடச் சுட மிளகாய் பஜ்ஜி, டீ ஆகியன வயிற்றை சாந்தப்படுத்துகிறது.

மாலை 4 மணியாகிறது. “எல்லாரும் கிளம்புங்க நேரமாச்சு’, என்று வீட்டுப் பெண்மணிகள் உத்தரவு போட, “இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடுறோம்மா’ என்று வாண்டுகள் கெஞ்சுவதை கவிதை போல காண முடிகிறது.

இன்னும், சற்று நேரம் கழிகிறது. காலையிலிருந்து விளையாடிய களைப்பில் குழந்தைகள் அசந்து போகிறார்கள். அடுத்த நாள் வழக்கமான கடமைகள் ஞாபகத்துக்கு வந்தவர்களாக பெரியவர்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு, ஒரு நாள் மகிழ்ச்சியாகக் கழிந்த திருப்தியில் பஸ்ஸில் ஏறுகிறார்கள்.

குறைகளுக்கு குறைவில்லை: பூங்காவில் பெரும்பாலான இடங்கள் குப்பைக் கூளமாக காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், ஐஸ்கீரிம் காகிதங்கள், சாப்பாட்டு பொட்டல காகிதங்கள் என சகிக்க முடியாத நிலையில் உள்ளது.
ஆயிரக்கணக்கான பெண்கள், சிறார்கள் கூடுமிடத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு சரியான கழிவறை வசதி இல்லை. இருப்பவையும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளன.

முக்கொம்புக்குள் சரியான உணவு விடுதிகள் எதுவும் இல்லை. இங்குள்ள சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் கடையில், பொட்டலச் சாப்பாடு கிடைக்கிறது. நல்லா இருக்கோ? இல்லையோ? அதைத்தான் சாப்பிட வேண்டும். வேறு வழியில்லை.
இங்கு வரும் காதல் ஜோடிகள், ஆங்காங்கே மரத்தடி மறைவுகளில் எல்லை மீறுவது ஓய்வுக்காக வரும் பெரும்பாலானோரை எரிச்சலடைய வைக்கிறது.

ஒரு சில விஷயங்களை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், முக்கொம்பு மிகச் சிறந்த சுற்றுலா தலம் தான். சந்தேகமில்லை.


நன்றி -தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஏப்ரல் 7th, 2014, 11:26 pm

முக்கொம்பு பற்றிய முத்தான தகவல் ..
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 7th, 2014, 11:54 pm

கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க :-z :-z
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஏப்ரல் 8th, 2014, 10:18 am

பிரபாகரன் wrote:கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க :-z :-z


நீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும் :-sml :-sml :-sml :-sml
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:14 pm

பூவன் wrote:
பிரபாகரன் wrote:கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க :-z :-z


நீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும் :-sml :-sml :-sml :-sml


சின்ன குழந்தைகளுக்கு ஐஸ் ஐஸ்......

ரெண்டுபேரும் சண்டை போடாம வாங்கப்பா.... எல்லோருக்கும் இருக்கு ... :-git
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 8th, 2014, 11:58 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
பிரபாகரன் wrote:கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க :-z :-z


நீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும் :-sml :-sml :-sml :-sml


சின்ன குழந்தைகளுக்கு ஐஸ் ஐஸ்......

ரெண்டுபேரும் சண்டை போடாம வாங்கப்பா.... எல்லோருக்கும் இருக்கு ... :-git


நல்ல வியாபாரமா கவி ?
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to இடங்கள் (Places)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 47 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron