[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கோடை விடுமுறைக்கு டூர் செல்ல சிறந்த இடங்கள். • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி

கோடை விடுமுறைக்கு டூர் செல்ல சிறந்த இடங்கள்.

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 20th, 2014, 10:31 am

Image



மிர்தி காடு

வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் சந்தன மரங்களும் நிறைந்த பசுமையான வனப்பகுதி. ஒருபகுதி சுற்றுலா தலம். மறுபகுதியில் பூங்கா மற்றும் வன விலங்குகள் சரணாலயம். விதம்விதமான பறவைகள், விலங்கினங்கள், முதலைகள், பாம்புகள், மயில்கள், மான்களை ரசிக்கலாம். கோடை என்பதால் சிற்றோடை, அருவியில் தண்ணீர் வருவது அபூர்வம்.

நோணாங்குப்பம்

புதுச்சேரியில் இருக்கிறது. சுண்ணாம்பாறு படகு குழாம் என அழைக்கப்படுகிறது. சங்கராபரணி ஆறும் வங்காள விரிகுடா கடலும் சங்கமமாகும் இடத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்த எழிலான பகுதி.
கேரளாவின் ஆலப்புழாவை நினைவுபடுத்தும் இயற்கை சூழல். புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 வது கிலோமீட்டரில் உள்ளது. அங்கிருந்து 5 கி.மீ சென்றால் ஐலண்ட் கடற்கரை தீவு. இந்த தீவுக்கு செல்ல காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை படகு போக்குவரத்து உண்டு.

கல்வராயன் மலை

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே அழகான அருவி, பசும் போர்வை போர்த்திய மலைத்தொடர். கோமுகி அணை மீதுள்ள பூங்கா மிகவும் அழகானது. மேலிருந்து பள்ளத்தாக்கை ரசிக்க வியூ பாயின்ட் இருக்கிறது. கச்சிராயபாளையத்தில் இருந்து கல்வராயன்மலை செல்லும் வழியில் 3 கிலோ மீட்டரில் வெள்ளிமலை, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் பெரியார் நீர்வீழ்ச்சி என அடுத்தடுத்து சுற்றுலா தலங்கள்.

பிச்சாவரம்

கடலூர் மாவட்டத்துக்கு சிறப்பு சேர்ப்பவற்றில் முதன்மையானது. வங்க கடலோரத்தில் கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு நதிகளின் உப்பங்கழியில் 2,800 ஹெக்டர் (11 சதுர கி.மீ) பரந்துள்ள பிச்சாவரம் மாங்குரோவ் (சதுப்பு நில சுரபுன்னை காடு) உலகில் இவ்வகையில் 2வது மிகப்பெரிய காடு. 177 வகையான பறவைகள் வந்து செல்வதாக பதிவாகியுள்ளது. இது போன்று 147 வகையான மீன், இறால் வகைகள் இங்குள்ள நீர்நிலைகளில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 74 கடல் சார்ந்தும், 64 சதுப்பு நில காட்டு பகுதியில் கண்டறிப்படும் மீன், இறால் வகையாகும். இந்த மாதிரி ஒரு இடத்தை வேரு எங்குமே பார்க்க முடியாது. தீவில் தங்கவிடுதிகள் உள்ளன.

டாப் செங்காட்டுப்பட்டி

பச்சைமலை சாரலில் உள்ள இடம். திருச்சி & நாமக்கல் மாவட்டங்களின் எல்லை. பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக மலைப்பகுதி. தங்கியிருந்து ரசிக்க யூனியன் சார்பில் 3 குடியிருப்புகள் உள்ளன. நாள் வாடகை ரூ.150 மட்டுமே. தனியார் பண்ணை வீடுகளும் நாள் வாடகைக்கு கிடைக்கும்.
திருச்சியில் இருந்து 72 கி.மீட்டரில் உள்ளது. துறையூர், உப்பிலியபுரம் வழியாக செல்லலாம்.

அலையாத்திக்காடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ளது. கடல் நீரில் (உப்பு நீரில்) மரங்களாகவும், செடிகளாகவும் வளர்ந்துள்ள அலையாத்தி தாவரம் 29,713 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. முத்துப்பேட்டையில் இருந்து படகில் சுற்றிப்பார்ப்பது அலாதியானது.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை 53 கி.மீ. தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, அங்கிருந்து முத்துப்பேட்டை 74 கி.மீ. பஸ்சில் செல்ல உகந்த வழி இது.

சிறுமலை சின்ன குற்றாலம்

மதுரை மாவட்டம் வாடிப்படியிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது குட்லாடம்பட்டி. மதுரையிலிருந்து 32 கி.மீ. அங்கிருந்து 4 கி.மீ சென்றால் சிறுமலையை அடையலாம். மலைவாழைப்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். சிறுமலையில் உள்ள தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி புகழ் பெற்றது. அடிவாரத்திலிருந்து ஒரு கிமீ தூரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும். அங்கிருந்து 150 படிகளில் ஏறி மலையை அடையலாம். இதன் பின்னரே அருவியை காணமுடியும். மதுரை வட்டார மக்கள் இதை சின்ன குற்றலாம் என்கின்றனர்.

ஹைவேவிஸ் மலை
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 53 கி.மீ தூரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. எங்கு திரும்பினாலும் தேயிலை, காப்பி தோட்டங்கள். மேகங்கள் வழியெங்கும் தழுவிக் கொள்வதோடு, எதிரே நிற்கும் மனிதர்களைகூட பார்க்க முடியாத அளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு கண்ணாமூச்சி காட்டும்.

சுருளி அருவி

ஹைவேவிஸ் மலையில் உற்பத்தியாகும் வென்னியாறு, மணலாறு, ஹைவேவிஸ், தூவாணம், இரவங்கலாறு நதிகளின் நீரை ஆதாரமாக கொண்டது சுருளி அருவி. கம்பம் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவு. சுருளி அருவியில் குளித்தாலே நோய் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.கம்பம் அல்லது 18 கி.மீ தூரத்தில் உள்ள உத்தமபாளையத்தில் தங்கலாம்.

கும்பக்கரை அருவி

கொடைக்கானல் மலையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் ஒரு பகுதி சிற்றோடைகள் வழியாக வந்து கும்பக்கரை அருவியாக கொட்டுகிறது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ செல்ல வேண்டும். அருவிக்கு செல்ல காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி. வனத்துறையினர் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கின்றனர்.

களக்காடு செங்கல்தேரி

மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இடம். களக்காடு புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அடர்ந்த வனம்; நீரோடைகள். கை வைத்தால் மரத்துப் போகும் அளவுக்கு ஜில்லென்று இருக்கும் நீர்.
வனத்துறை சார்பில் பயணிகள் தங்குவதற்கு அறைகள், மரக்குடில்கள் உண்டு. கட்டணம் செலுத்தி வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். தங்கும் இடத்தில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் கருமாண்டி அம்மன் கோயில் உள்ளது. அங்கு ஓடி வரும் தண்ணீரில் நாள் முழுவதும் குளிக்கலாம். சிறு சிறு அருவிகளும் உள்ளன.திருநெல்வேலியில்இருந்து களக்காடு 48 கி.மீ. அங்கிருந்து 20 கி.மீட்டரில் செங்கல்தேரி.

பாணதீர்த்தம் அருவி

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு முழுவதும� தண்ணீர் விழும் அருவி. மனித நடமாட்டம் இல்லாது விலங்குகளின் அரசாங்கம் நடக்கும் பகுதி. அணையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் பாணதீர்த்தம் அருவி. குளுகுளு மலைச்சாரலையும் அனுபவிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளா கூட்டம், சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றை ரசிக்கலாம்.
மாலை 5 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கிவிட வேண்டும். தங்குவதற்கு வசதி கிடையாது.
திருநெல்வேலியில் இருந்து
பாபநாசம் 50 கி.மீ. அங்கிருந்து 12 கி.மீட்டரில் பாபநாசம் அணை. 15 நிமிடம் படகு சவாரி செய்தால் பாணதீர்த்த அருவியை அடையலாம். மறக்க முடியாத இடம்.

உலக்கை அருவி

மேற்கு தொடர்ச்சி மலையின் நிழலில் உள்ள குமரி மாவட்டத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவிகள் உண்டு.

உலக்கை அருவி:

வனத்தின் நடுவில் குளிர்ந்த நீரை கொட்டும் அருவி. கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீ தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது. பெருந்தலைக்காடு வரை பஸ் போக்குவரத்து உண்டு. அதன் பிறகு 1 கி.மீ சென்றால் அருவியை அடையலாம். எல்லா நாட்களிலும் தண்ணீர் கொட்டும். மலை ஏற பயிற்சி பெற்றவர்கள் உச்சிக்கு சென்றும் அழகை ரசிக்கலாம்.

காளிகேசம்:

நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது. காளிகேசம் வரை அரசு பஸ் உண்டு. கோடையிலும் தண்ணீர் குறையாத நீரோடைகள் உண்டு. �போட்டாணி குகை� என்ற பெயரில் குகை உண்டு. இங்கு சமைத்து சாப்பிட வருகின்ற சுற்றுலா பயணிகள் அதிகம். அருகில் காளிக்கு ஒரு கோயில் உண்டு.

திற்பரப்பு:
குமரியின் குற்றாலம் திற்பரப்பு. இந்த அருவி கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. எல்லா நாட்களிலும் தண்ணீர் கொட்டும். அருகில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோயில் உண்டு.

நெல்லியம்பதி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாரா தாலுகாவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1572 மீட்டர் உயரம். பாலக்காட்டில் இருந்து 52 கிலோ மீட்டரில் உள்ளது. மலை உச்சிக்கு செல்லும் வழியில் பார்க்கத்தக்க இடம் சீதா குன்று. தம்பி லட்சுமணன், மனைவி சீதையுடன் வனவாசம் சென்ற ராமன், இங்குதான் தங்கி பூஜை செய்ததாக ஐதீகம். குன்றில் இருந்து சுற்றியுள்ள மலைப்பகுதி கண்களுக்கு ரம்மியம். சீதா குன்றில் 100 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் மெகா அருவி சந்தோஷத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
கேரள அரசு பஸ் தினமும் 5 முறை நெம்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு செல்கிறது. கட்டணம் ரூ.50. ஜீப் அல்லது டாக்சி மூலமும் செல்லலாம். கைகாட்டியில் அரசு தங்கும் விடுதி உள்ளது. தனியார் ரிசார்ட்டுகளும் உள்ளன.

கோத்தகிரி
நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று கூறுவார்கள். ஊட்டியை காட்டிலும் இங்கு குளிர் அதிகம். ஆனால் ஊட்டி செல்லும் பலர் கோத்தகிரி பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பெரும்பாலும் குன்னூர் வழியை பயன்படுத்துகின்றனர். ஊட்டி, குன்னூரை போலவே கோத்தகிரியை சுற்றிலும் பார்க்கத்தக்க இடங்கள் ஏராளமாக உள்ளன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் கோத்தகிரி உள்ளது. 9வது கிலோ மீட்டரில் குஞ்சப்பனை என்ற இடத்தில் இருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியும். பார்க்கலாமே தவிர குளிக்க முடியாது. அழகும், ஆபத்தும் சேர்ந்த இடம்.

ஏற்காடு
சேலத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜில் கிளைமேட், அலுக்காத பயணம், குறைந்த நேரத்தில் அதிக இடங்களை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு & இது தான் ஏற்காடு ஸ்பெஷல்.
அற்புத வியூ பாயின்டுகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம் என சுற்றி வரலாம். அண்ணா பூங்காவில் வாக்கிங், ஏரியில் படகு சவாரி முடித்து விட்டு இன்னும் உயரம் போய் குளிரை அனுபவிக்க நினைப்பவர்கள் பக்கோடா பாயின்ட் செல்லலாம்.
சேர்வராயன் மலை குகைக்கோயிலில் தரிசனம் செய்யலாம். சுற்றுலா முடித்து 40 நிமிடங்களில் அடிவாரத்தை அடையலாம்.

கொல்லி மலை

சேலத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூலிகை வாசனை, அருவிக் குளியல், உச்சியை தொட்டுத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டம். அறப்பளீஸ்வரர் கோயில், அதை ஒட்டிய நீரோடையில் கால் நனைத்தபடி நடக்கலாம், குளிக்கலாம். ஆயிரம் படிகள் ஏறி ஆகாய கங்கையில் குளிக்க முடியாது என நினைப்பவர்கள் மாசிலா அருவியில் மனம் குளிர குளிக்கலாம். மலைத்தேன், மூலிகைகள் நிறைய கிடைக்கும்.

தகவல்: ரவீந்திரன், ராஜா, பச்சையா பிள்ளை, சங்கர், செந்தில்வேல், ராஜகுமார், சிவமுருகன், செந்தில்குமார், நாகராஜன், சண்முகராஜா, சிக்கந்தர், முத்துகிருஷ்ணன்
படங்கள்: பரமகுமார், ஸ்ரீமுருகன், சண்முகராஜா, ராஜ்குமார், மணிநாதன்.

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image


பல்சுவை தகவல் களஞ்சியம்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to இடங்கள் (Places)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 45 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]