[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
காசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.

காசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 8th, 2014, 4:41 pm

சந்திரபாபு நாயுடு முடி சூட்டு விழாவை முன்னிட்டு இந்து, டைம்ஸ் நாளிதழ்களில் கிருஷ்ணபட்னம் துறைமுகம் சார்பில் சிவிஆர் குரூப் 2 முழு பக்க விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.டைம்ஸ் இதனால் புளகாங்கிதம் அடைந்ததாக தெரியவில்லை. நாயுடு பதவி ஏற்பு செய்தியும், அதன் ஆடம்பரத்தை ஜகன் விமர்சனம் செய்யும் செய்தியும் உள்பக்கத்தில் சாதாரணமாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து நாளிதழ் தனது முதல் பக்க தலைப்பு செய்தியாக நாயுடுவின் பேட்டியை வெளியிட்டுள்ளது.ஜாக்கெட் விளம்பரத்தின் 1வது 2வது பக்கங்களில் பஞ்சு தாடியுடன் புன்னகைக்கும் நாயுடு, 3வது பக்கத்தில் (முதல் செய்தி பக்கம்) தலைப்பு செய்தியின் நடுவிலும் பிரமாண்டமாக அமர்ந்திருக்கிறார். பார்த்தால் அவருக்கே கூசும்.

Image
காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் பெய்ட் நியூஸ் பழக்கத்துக்கு எதிராக இந்து பத்திரிகை பிரசார யுத்தமே நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் ரூரல் எடிட்டரும் மக்சாசே விருது வென்ற புகழ் பெற்ற செய்தியாளருமான சாய்நாத் பெய்ட் நியூசுக்கு எதிராக உணர்ச்சிகரமாக எழுதும் செய்திக் கட்டுரைகள் மானமுள்ள பத்திரிகையாளர்களின் நாடி நரம்புகளை சூடேற்றும் சக்தி படைத்தவை.
ஆனால், படிப்பது ராமாயணம்… பழமொழிக்கு பொருத்தமாக விளம்பரதாரருக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதும், அதற்காக பிரதான இடம் ஒதுக்கி வாசகர்களை மடையனாக்குவதும் எந்த வகையில் சேர்த்தி?

ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, அவரது ஊழல் குறித்து நாடே அதிசயித்து பேசிக் கொண்டிருந்த வேளையில், அறிவாலயம் பீட் பார்க்கும் நிருபரை டெல்லிக்கு வரவழைத்து ராசா கொடுத்த பேட்டியை முதல் பக்கத்திலும், அவர் கொடுத்த முழுப்பக்க துறை விளம்பரத்தை உள்பக்கத்திலும் பிரசுரித்த நாளிதழ்தான் இந்து. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இப்போது கஸ்தூரி அன் சன்ஸ் சேர்மனாக இருக்கும் ராம் அப்போது முதன்மை எடிட்டர். அவருக்கும் ஏனைய இயக்குனர்களுக்கும் ராசா பேட்டி + விளம்பரம் விவகாரத்தில் மோதல் வெடித்து பகிரங்கமாக சண்டை போட்டுக் கொண்டதெல்லாம் அப்படியொன்றும் புராதன வரலாறு கிடையாது. அதிலிருந்து அவர்கள் எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.அப்போது எடிட்டராக இருந்த ரவி இந்த பிரச்னையில் ராம் அணுகுமுறை குறித்து என்ன சொன்னார் என்பதை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ”The editorial integrity of the paper has been compromised under Ram and news coverage linked directly to advertising in a way that is little different from PAID NEWS. Very recently, those of us who were not privy to the deal-making learnt to our shock that a major interview with A Raja in defense of the telecom licensing policy published on May 22, 2010 — that was referred to by the Prime Minister in his press conference — involved a direct quid pro quo in the form of a full page, colour advertisement from the telecom ministry that was specially and hurriedly cleared by the minister personally for publication on the same day in The Hindu”. பப்ளிஷராக எம்டியாக இருந்த முரளியும் இதை ஆமோதித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக அரசின் விளம்பரங்களை வெளியிடும் போதெல்லாம் அரசின் பலதுறைகள் சாதனை செய்ததாக பேட்டிகளுடன் கட்டுரை வெளியிடுவது இந்துவின் வாடிக்கை. தினத்தந்தி, தினமணி போன்றவையும் அதே போல் செய்வதை பார்த்து வாசகர்கள் பழகிப் போனதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்துவின் அசைக்க முடியாத கோட்டை என கருதப்பட்ட தமிழகத்தில் டைம்ஸ் கால் பதித்து குறுகிய காலத்தில் விற்பனையை பெருக்கி முத்திரை பதித்த பிறகும் இந்து தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது புதிராக தெரிகிறது.

‘ஆமாம், நான் நடத்துவது செய்தி பத்திரிகை அல்ல; விளம்பர பத்திரிகைதான். அதில் இடையிடையே செய்திகளும் இடம் பெறுவதற்கு நான் பொறுப்பல்ல’ என்று பகிரங்கமாக சொன்ன சமீர் ஜெயினின் டைம்ஸ் ஆஃப் இந்தியா, எந்த தமிழ் பத்திரிகையையும்விட அதிகமாகவும் ஆழமாகவும் தமிழக செய்திகளை கவர் செய்கிறது. இன்று அதில் இடம் பெறும் தமிழக செய்திகளை நாளை காலை தமிழ் நாளிதழ்களில் காணலாம். விளம்பரதாரர்களுக்காக எந்த செய்தியையும் அது இருட்டடிப்பு செய்ததாக அல்லது சாதகமான செய்தியை மிகைப்படுத்தி பிரசுரித்ததாக யாராலும் புகார் கூற இயலவில்லை. சொல்லப்போனால் டைம்ஸ் செய்தி வெளியிடும் பாணியால் தமிழக பத்திரிகைகளுக்கு துணிச்சல் அதிகரித்துள்ளது.

மாறாக, ஆ ஊ என்றால் ஊடக தர்மம், வணிக நெறிகள், எடிட்டோரியல் சுதந்திரம், டிரான்ஸ்பரன்சி என்று மேடைதோறும் முழங்கும் ராமும், இந்து செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவதற்கென்றே பொறுப்பு வகிப்பதாக நினைக்கும் ‘ரீடர்ஸ் எடிட்டர்’ பன்னீர் செல்வமும் தமிழக மக்கள் இந்துவை தவிர வேறு பத்திரிகை படிப்பதில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும். அதனால்தான் சமீபத்தில் நியமித்த எம்.டி கம் சிஇஓ ராஜிவ் லோச்சன் எடிட்டோரியல் அல்லாத விவகாரங்களை கவனிப்பார் என்று கஸ்தூரி அன் சன்ஸ் போர்டு அறிவித்தது.

கேட்பவர்கள் கேனயர்களாக இருந்தால் உ.பி.யில் அமைதி தவழ்கிறது என்று முலாயம் சொல்லத்தான் செய்வார். வடக்கில் தமிழர்கள் வளமாக வாழ்வதாக ராஜபக்சயும் பேசுவார். இந்து இந்த நிலைக்கு விழும்வரை அதன் இயக்குனர்கள் அமைதி காப்பார்கள் என்று அதன் நீண்டகால வாசகர்கள் எதிர்பார்க்கவே இல்லை.


நன்றி-ஆந்தை ரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: காசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 8:22 pm

பெரும்பாலும் பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் மக்களின் மனநிலைமையை வெகு எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றும் திறன் படைத்ததாகவே இந்தியாவில் திகழ்கிறது.

அவர்களின் மிக உன்னதமான பணியை என்றுதான் உணர்வார்களோ..
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: காசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 9th, 2014, 2:30 pm

தொழில் தர்மம் கொண்ட துறை என்ற பெயருக்கு இப்போது பங்கம் வந்துள்ளது.

சேவை என்ற முதன்மையை விட, காசுக்காக தாளியல் துறைக்கு வருபவர்கள் தான் ஏராளம்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to கட்டுரைகள் (Articles)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 84 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]