[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஏன் பூச்சரம்.நெட்? [Why Poocharam.Net] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

ஏன் பூச்சரம்.நெட்? [Why Poocharam.Net]

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 2:04 am

Image


பூச்சரத்தின் முக்கிய நோக்கமே தனிநபர் ஒருவரின் திறமைகளை உலகறிய செய்வது தான்.

பலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. அது எவ்வாறு கிடைக்கும் யாரிடம் நம் படைப்புகளைக் கொண்டுபோய்க் காண்பிப்பது. என்னதான் வலைபூக்கள், சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தத் தெரியவேண்டும். அப்படியே பயன்படுத்தத் தெரிந்தாலும் அங்கு நீங்கள் வேறு ஒருவருக்கு விருப்பமோ அல்லது பின்னூட்டமோ இட்டால் தான் அவர்கள் பதிலுக்கு ஒரு விருப்பமோ, பின்னுட்டமோ உங்கள் பதிவுகளுக்கு இடுவர். அதுவும் படைப்புகளைப் படிக்காமலேயே உங்கள் மனத்திருப்திக்காகப் பின்னூட்டம் போடும் போது, உண்மையில் உங்கள் படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகிறதா என்றால் நிச்சயம் இல்லை. போலித்தனமான அதுபோன்ற இடங்களில் உங்கள் நேரத்தை செலவிட்டு ஏமாறுவதைக் காட்டிலும் இதுபோன்ற புறவங்களில் (Forum) களில் உங்கள் பதிவை பதிவிடுவதன் மூலம் உண்மையான விமர்சனங்களைப் பெறமுடியும். எப்படி அங்கில்லாதது இங்குள்ளது எனக் கேள்வி மனதில் பிறக்கும்.

இங்கு எங்கள் நோக்கமே உங்களின் படைப்புகளை விமர்சித்து ஊக்கபடுத்துவதே. அதற்காகவே செயல்படும் இந்தத் தளத்திற்கு வேறு என்ன வேலை இருக்கமுடியும்.

சரி எனக்கு எந்தத் திறமையும் இல்லை, நான் என்ன இங்குச் செய்யமுடியும் என்று கேட்பவர்களும் உண்டு. நல்ல கேள்விதான், ஏன் இங்குப் பதியும் பதிவுகளைப் படிக்கலாமே! அல்லது உங்களுக்குத் தெரிந்த முறையில் விமர்சனம் செய்யலாமே!. இன்று இணையத்தில் நல்ல விசயங்களை விடக் கெட்ட விஷயங்கள் தான் அதிகம். இதுபோன்றதொரு காலகட்டத்தில் எங்குத் தேடிபிடித்து நல்ல செய்திகளைப் படிப்பது. அதுபோன்ற கஷ்டங்களே வேண்டாம் என்று தான் இங்கு, இந்தத் தளத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தேடிபிடித்து அறிவை மேம்படுத்தும் அறிவியல், கலை, கட்டுரை, விமர்சனம், கல்வி, உலகச் செய்திகள், அறியாத செய்திகள், உண்மை நிகழ்வுகள், அன்றாடம் நாட்டு நடப்புகள் எனக் கூடுமானவரை அனைத்து செய்திகளையும் இங்குக் கொண்டுவந்து பகிர்கின்றனர். அதை இருந்த இடத்தில இருந்து படிக்கச் சொல்லித்தரவேண்டுமா என்ன?

தனிமனிதன் ஒருவரின் பேச்சு திறமையை உண்மையில் இதுபோன்ற தளங்கள் வளர்க்கின்றன . தளத்தில் பதிவுளின் மேல் நடக்கும் விவாதங்களைத் தொடர்ந்து கவனிக்கும் ஒருவர், அவற்றில் இருந்து எப்படிக் கேள்வி கேட்பது? எப்படிப் பதில் சொல்வது? எதைச் சொல்லவேண்டும்? எதைச் சொல்லக்கூடாது? எப்படிப் பேசி அடுத்தவரை கருத்துநோக்கில் மடக்கமுடியும் போன்ற திறமைகளைக் காலபோக்கில் அவர் அறியாமலேயே வளர்த்துகொள்கிறார். இதுபோன்றதொரு பயனால் அவர்கள் தங்கள் பணியிடங்களில் திறமையான, ஒரு பண்பட்ட பேச்சின் மூலம் எதையும் சாதிக்கமுடியும்.

இப்படிப் பலன்கள் நிறைய உண்டு. அவற்றை எல்லாம் பட்டியல் இட்டால் பத்துப் பதிவுகள் போகும். நம் நாட்டில் மட்டும் தான் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகம். மற்ற வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற புறவங்களின்(Forum) பயன்பாடு தான் அதிகம். அவர்கள் நிறையச் செய்திகளை இதுபோன்ற தளங்களில் பகிர்வதுடன். அந்தப் பதிவுகள் வரும் காலங்களில் மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாத்து வைக்கின்றனர்.

கடைசியாக உங்கள் மனதில் உதிக்கும் சில கேள்விகள், அதை நாங்களே சொல்கிறோம்.

1) இப்படி வலியவந்து பேசி எழுதி எங்களை இங்குக் கொண்டுவருவதில் உங்களுக்கு என்ன லாபம்?
2) தளத்தைப் பார்த்தால் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றுபோல் உள்ளதே, கொஞ்சம் அதிகமா தெரியலையா?
3) சமூக வலைத்தளங்களை விமர்சிக்கும் நீங்க ஏன் பதிவுகளை அங்குப் பகிரும்படியான வசதி இங்கு வச்சுருக்கீங்க?


- அரசியல்வாதிகள் தேர்தலில் அதுசெய்வோம், இதுசெய்வோம் என்று வாக்கு வாங்கி வெற்றிப்பெற்று ஆட்சியில் நம்மை ஏமாற்றும் போது ஒரு கேள்வி கேட்காத நாம், இதை ஒரு சேவையாக யாரிடமும் நன்கொடைகள் வாங்காமல், தமிழனுக்கும், தமிழுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும் என எண்ணும் எங்களைக் கேள்வி கேட்கலாமா? :) உண்மையில் எங்களுக்கு உங்களை வைத்து லாபமும் சம்பதிக்கவேண்டிய அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்கத் தனி ஒருவரின் திறமைகளை வெளிக்கொணரும் தளம்.

- தமிழ் நாட்டில் தமிழைப் பற்றிப் பேசினால் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும். என்ன செய்வது அப்படி மக்களை மாற்றி வைத்துவிட்டார்கள் சில சுயநலவாதிகள். அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் (Technical Terms) சரியான தமிழ் சொற்கள் இருக்கிறது. ஆனால் அதைச் சில கல்வியலாளர்கள் தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்க்காக தமிழ் என்பது எதுக்கும் உதவாது என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஆண்டாண்டுகாலமாகச் செய்துவருகின்றனர்.காரணம் கல்வி வியாபாரமாகிவிட்டது.இங்கிலீஷ் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று ஊரில் பரப்பினால் தானே நீங்கள் உங்கள் குழந்தைகளை லட்சலட்சமாகச் செலவு செய்து இங்க்லீஷ் மீடியத்தில் படிக்கவைப்பீங்க.அப்பதானே இந்தக் கல்வியலாளர்களுக்குக் கோடிகோடியா லாபம் கிடைக்கும். இந்த ஒன்று தான் காரணம் தமிழைப் பற்றி நாம் நினைக்கும் தவறான நினைப்புக்கு.புறவம் இது forum என்ற இங்கிலிஷ் சொல்லுக்கான சரியான சொல். ஆனால் வழக்கத்தில் இல்லை. விழியம் இது Video என்ற இங்கிலீஷ் சொல்லை குறிக்கிறது. இதுவும் வழக்கத்தில் இல்லை. சொல்லப்போனால் பாடத்திட்டங்களில் இதுபோன்ற சொற்களைப் பார்க்கமுடியாது. என்றைக்கும் தமிழன் வீடியோவை ஒளி படம் என்று சொல்லவேண்டும், போரத்தை கருத்துக் களம் என்று தான் சொல்லவேண்டுமா என்ன? தமிழன் தமிழில் பேசினால் தப்பா?

- இதில் ஒரு நுட்பம் இருக்கிறது. நான் என்ன தான் சமூக வலைத்தளங்களைப் பற்றிச் சொன்னாலும் சிலரின் மனம் ஒத்துபோகாது. ஒரு பதிவை இங்குப் பதியுங்கள், அந்தப் பதிவுக்கு எத்தனை பின்னுட்டங்கள் தளம் மூலம் கிடைக்கிறது, எத்தனை பின்னூட்டங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கிடக்கிறது என்று பாருங்கள். நிச்சயம் நான் சொல்வேன் சமூக வலைதள விருப்பங்கள், தங்கலீஷ் பின்னூட்டங்களைக் காட்டிலும், புரியும்படியான விளக்கமான அதிகப் பின்னூட்டங்கள் தளம் மூலம் தான் கிடைக்கும். இந்த உண்மையை உறுப்பினர்கள் நேரடியாக உணரவேண்டும் என்று தான் சமூக வலைதளங்களில் இங்குப் போடும் பதிவுகளைப் பகிரும் வசதியை வைத்துள்ளோம்.

வாருங்கள் இது உங்கள் தளம்... உங்களின் திறமைகளுக்கு சரியான ஊக்கத்தையும், மதிப்பையும், உண்மையான கருத்தையும் சொல்லும் உன்னத தளம்.


பூச்சரம்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: ஏன் பூச்சரம்.நெட்? [Why Poocharam.Net]

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 3rd, 2014, 1:11 pm

இங்கு எங்கள் நோக்கமே உங்களின் படைப்புகளை விமர்சித்து ஊக்கபடுத்துவதே. அதற்காகவே செயல்படும் இந்தத் தளத்திற்கு வேறு என்ன வேலை இருக்கமுடியும்.


நல்ல சொன்னீங்க அண்ணா , நமக்கு இதைவேறு வேலை ஏது ? நாம் ஏதோ பெரிதாக செய்ய முடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்ததை பெரிதாக செய்வோம் ,


இதில் ஒரு நுட்பம் இருக்கிறது. நான் என்ன தான் சமூக வலைத்தளங்களைப் பற்றிச் சொன்னாலும் சிலரின் மனம் ஒத்துபோகாது. ஒரு பதிவை இங்குப் பதியுங்கள், அந்தப் பதிவுக்கு எத்தனை பின்னுட்டங்கள் தளம் மூலம் கிடைக்கிறது, எத்தனை பின்னூட்டங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கிடக்கிறது என்று பாருங்கள். நிச்சயம் நான் சொல்வேன் சமூக வலைதள விருப்பங்கள், தங்கலீஷ் பின்னூட்டங்களைக் காட்டிலும், புரியும்படியான விளக்கமான அதிகப் பின்னூட்டங்கள் தளம் மூலம் தான் கிடைக்கும். இந்த உண்மையை உறுப்பினர்கள் நேரடியாக உணரவேண்டும் என்று தான் சமூக வலைதளங்களில் இங்குப் போடும் பதிவுகளைப் பகிரும் வசதியை வைத்துள்ளோம்.


இது முற்றிலும் உண்மையே ஆனால் என்ன பெரும்பான்மையானவர்கள் சமூக வலை தளங்களில் காட்டும் விருப்பம் அளவு பிற தளங்களில் காட்டுவதே இல்லையே . இது கவலைக்குரிய விஷயம் .
நல்ல பதிவு அண்ணா இதை பார்ப்பவர்கள் இவ்வாறு நினைத்தாலும் சரி இவர்களே பதிவை போட்டு இவர்களே விமர்சனம் செய்து கொள்ளுகிறார்கள் என்று , நாங்கள் இன்றைய உண்மை நிலையை தான் கூறி உள்ளோம் , ..
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 116 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]