[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
Page 1 of 1

வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:34 pm
by அ.இராமநாதன்
தலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை
விட்டிருக்காரே, ஏன்?
-
தொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி
மாறிடுறாங்களாம்..!
-
சீ.பிரதீப்
-
------------------------------------
-
சாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,
ஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்!
-
ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்
பார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே
அந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...!
-
வி.ரேவதி
-
--------------------------------------------

Re: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:35 pm
by அ.இராமநாதன்
மேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்
போட்டு அரைமணிநேரமா கிண்டறேன்...
கெட்டியாக மாறலியே...!
-
முதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற
வைங்க !
-
குருமூர்த்தி
-
-------------------------------
-
கல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...?
-
எதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்!
-
தீ.அசோகன்
-
----------------------------------------------------------------

Re: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:36 pm
by அ.இராமநாதன்
எனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு
வருதய்யா..!
-
நீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா
கிடைக்கும்!
-
பா.மனோகரன்
-
----------------------------------
-
தலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா
கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலே!
-
ஆமா அப்படி என்ன செஞ்சார்?
-
அரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே!
-
எஸ்.சடையப்பன
-
-----------------------------------