[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் ! புதிய திரைப்பட விநியோகம் முறை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் ! புதிய திரைப்பட விநியோகம் முறை

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 7th, 2014, 9:13 am

Image

இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் திரைப்பட தொழில் என்பது வணிகம் என்ற ஒற்றை அச்சாணியை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வருகிறது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் நுட்பியல் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள், படத்தை Area வாரியாக விற்பனை செய்வதன் மூலம் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கின்றன. அப்படி, Area உரிமம் எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை என்றால், தயாரிப்பு நிறுவனங்களே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, படத்தை திரையிட்டு, நுழைவு கட்டணத்தின் மூலம் முதலீட்டு தொகையில் ஒரு பகுதியை சம்பாதித்து விடுவதுண்டு. தற்போது வரை இவை இரண்டு மட்டுமே திரைப்படத் தொழிலின் சுழற்சி முறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த தொழில் மரபை தகர்க்கும் ஒரு புதிய முயற்சி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் 13ம் தேதி நிகழவுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு ‘விளம்பரதாரர்கள்’ இருப்பது போல், திரையரங்குகளில் காட்டப்படும் படத்துக்கும் விளம்பரதாரர்களை கொண்டு வழங்கும் முறையை மனோஜ் குமார் என்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

எஸ்.வினோத் குமார் இயக்கத்தில் நந்து, முன்னா, மகாலட்சுமி ஆகியோரின் நடிப்பில் ‘டெஸ்ட் பேப்பர்’ என்றொரு படத்தை இவர் தயாரித்துள்ளார். இந்த படத்தை கேரளா முழுவதும் மக்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக திரையிடப் போவதாக மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த நவீன முயற்சியின் முதல் கட்டமாக வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் திரையிடப்படும். இந்த படம் ஓடும் போது திரையிடப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் தொகை வாயிலாக மக்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதற்கு நிகரான லாபம் கிடைத்து விடும் என்று இவர் கூறுகிறார்.

தொ.கா. நிகழ்ச்சிகளில் வருவதைப் போல், 10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்களை திரையிட்டு ‘கழுத்தறுக்காமல்’ படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தங்கள் பகுதியில் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் ஓடும் திரையரங்கத்தில் பெயரைக் கூறி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இலவச நுழைவு சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி-மாலைமலர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் ! புதிய திரைப்பட விநியோகம் முறை

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஜூன் 7th, 2014, 11:20 am

தொ.கா. நிகழ்ச்சிகளில் வருவதைப் போல், 10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்களை திரையிட்டு ‘கழுத்தறுக்காமல்’ படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


இது என்றுமே இருந்தால் நல்லது அதை விடுத்து 5 நிமிடம் ஒருமுறை விளம்பரம் போட்டு கொல்லாமல் இருந்தால் சரி ...
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் ! புதிய திரைப்பட விநியோகம் முறை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 8:04 pm

புது முயற்சி.. இது எப்படி பலனளிக்கும்.. நடைமுறை சிக்கல்கள் எழுமா..? விளம்பரதாரர்கள் கிடைக்காத படங்களுக்கு என்ன நிலை போன்ற பல்வேறு பின்னணிகள் உள்ளன. அவற்றிற்கு பதில் சில நாட்களில் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 45 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron