[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 6 மாதங்களில் 100 படங்கள் வெளியீடு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 6 மாதங்களில் 100 படங்கள் வெளியீடு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 5th, 2014, 1:00 pm

இந்த ஆண்டில் ஜூன் மாதம் முடியும்போது 100 படங்கள் தமிழில் வெளியிடப்பட்டுவிடும். தமிழ் திரைப்பட வரலாற்றில் இது புது சாதனையாகும்.

Image
கடந்த சில வருடங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் படங்களின் வரத்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. கோச்சடையான், ஜில்லா, வீரம் போன்ற பெரிய தொகை படங்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர தொகை படங்கள் என 85 படங்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, மெல்லிசை, நான்தான் பாலா, அரிமா நம்பி, பூலோகம், ஜிகர்தண்டா, சைவம், திருமணம் எனும் நிக்காஹ், அரண்மனை உள்ளிட்ட மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளதாக தெரியவருகிறது.

திரையரங்கு பற்றாக்குறை மேலும் சில காரணங்களால் கடந்த மாதங்களில் சில படங்கள் வெளிவராமல் தள்ளிப்போனது. அதுபோல் பிரச்னை எதுவும் இல்லாவிட்டால் இம்மாதத்தில் 15 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இது ஜூன் மாதம் முடிவில் 100 படங்கள் வெளியீடு என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் என்று ஒரு திரைப்பட வினியோகஸ்தர் தெரிவித்தார்.

இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆறே மாதங்களில் 100 படங்கள் வெளியீடு என்ற சூழல் ஏற்பட்டதில்லை. வழக்கமாக ஒரு ஆண்டுக்கு 120 முதல் 140 படங்கள் வரை வெளியிடப்படும். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 170க்கு அதிகமான படங்கள் வெளிவந்தன. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இப்போது ஆறு மாதங்களிலே தமிழ் திரைப்படங்கள் சதமடிக்க உள்ளது.


நன்றி-தமிழ்முரசு
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]