[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நட்சத்திர ஐ.பி.எல்! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

நட்சத்திர ஐ.பி.எல்!

படிக்காத இடுகை [Unread post]by Raja » மே 19th, 2014, 6:42 pm

Image


எல்லோரும் ஐ.பி.எல் மேட்ச் ஆடிட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் வித்தியாசமா நம்ம நடிகர்கள் கிரிக்கெட் ஆடுறதைப் பாப்போமா... என்னது, ஆப்போசிட் டீம் யாரா? வேற யாரு ஆஸ்திரேலியாதான். சேஸிங் செய்ய களம் இறங்கும் நம்ம வீரர்களெல்லாம் பன்ச் டயலாக், தீம் மியூஸிக் சகிதம் உள்ளே குதிக்கிறார்கள். 'யாரு அடிச்சா சிங்கிள் ஃபோர்லாம் போகாமப் பொறி கலங்கிப் பூமி அதிர்ற மாதிரி ஸ்ட்ரெயிட்டா சிக்ஸர்ல விழுதோ அவன்தான் நான்’ என பயங்கர பில்டப்போடு களம் இறங்கி அடி வெளுத்து எடுக்கிறார்கள். ஜான்ஸன் ஃபுல் டாசாக மூஞ்சியை நோக்கி வீச, 'நான் சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன். நீ ஃபுல் டாசா போட்டா, காட்டாம விட்ருவேனா’ என அநாயசமாக சிக்ஸருக்குத் தூக்கி கேட்ச் ஆகி பெவிலியன் போகிறார் நம்ம இளைய தளபதி விஜய்.

அடுத்ததாக கலைஞானி கமல். 'பொதுவாக இந்த விளையாட்டை இளம் பிராயத்தைத் தாண்டி முதுமையிலும் விளையாட வேண்டும் என்றுதான் சொல்வேன். அங்கே குழுமி ஓசை எழுப்பும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காகக் களம் இறங்கி இருக்கிறேன்’ என்று முன்னுரை கொடுத்துக்கொண்டே என்டர் ஆகிறார் கமல். பல கிரவுண்ட் பார்த்தவர் என்பதால் பந்துகளை நாலாபுறமும் சிதறவிடுகிறார். அவ்வப்போது இடுப்பின் பக்கவாட்டில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு 'ஆ... ஆஹ்... ஆஹ்ஹ்’ என வாயைத் திறந்து மூடி ரிலாக்ஸும் செய்கிறார். கடைசியில் உயரே சென்ற பந்தை ஆசைப்பட்டு அடித்து கேட்ச் ஆகிறார்.

கமல் போயிட்டார். இனி ரஜினிதானேனு ரசிகர்கள் விசிலடித்து சவுண்ட் விட, 'நான் எப்ப வருவேன், எப்டி வருவேனு யாருக்கும் தெரியாது. வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என கேலரியில் இருந்துகொண்டே சைகை காட்டுகிறார். அத னால் கடுப்பான அஜித், யூனிஃபார்மே போடாமல் கோட் சூட்டுடன் கிரவுண்டில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

நான் தனி ஆள் இல்லை’ என பை ரன்னருடன் தானும் சேர்ந்து ஓடி ரன் எடுக்காமல் நடந்து அவுட் ஆகி பெவிலியன் திரும்புகிறார்.
'ஏய், யாருல அங்க பொறங்கையக் கட்டிக்கிட்டு நிக்கிறவ... போயி ஆட்டக்காரவுகளுக்கு தண்ணி கிண்ணி கொண்டாங்கப்பா’ என ட்ரிங்ஸ் பிரேக் விடுகிறார் அம்பையர் விஜயகுமார்.

ஆஸ்திரேலியன் டீம் கலர் கலராய் ஏதோ குடித்துக்கொண்டிருக்க, நம் டீமின் பயிற்சியாளரான சிவகுமாரோ ''யப்ப்பா... இந்தாங்கப்ப்பா நீர்மோரு, நிலவேம்புக்கசாயம். நெஞ்சு சளி போக்க துளசிச்சாறும் கொண்டு வந்துருக்கேன். குடிச்சுட்டு ஆடுனீங்கனா அடிச்சு ஆடலாம்ய்ய்யா...'' என சொம்பை நீட்டி டரியல் கொடுக்கிறார்.

கவுன்சிலிங் கோச்சான சண்முகசுந்தரமோ வீரர்களை எல்லாம் வரிசையாக நிற்க வைத்து,'ஆத்தா தாயீ... அந்தக் கருமாரி புண்ணியத்துல எம் புள்ளங்க எல்லாம் எந்தக் கொறையும் இல்லாம நல்லபடியா வெளையாடணும்’ என மொத்த டீமுக்கும் விபூதி பூசி விடுகிறார்.

அடுத்து களம் இறங்குகிறார் சத்தியராஜ். குறுக்கும் நெடுக்கும் பவுன்சுமாகப் போட்டு பவுலர்கள் அல்வா கொடுக்க 'எனக்கே அல்வாவா’ என மைண்டில் ஓடவிட்டு ஆஃப் சைடில் வந்த பந்தை லெக் சைடில் திரும்பி ரிவர் ஸ்வீப்பில் சிக்ஸருக்குத் தூக்கி, 'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே?’ என கலாய்க்க மொத்த ஸ்டேஜூம் விசிலை பறக்கவிடுகிறது. அவரும் அவுட் ஆகி பெவிலியன் செல்ல சீனியர் பிளேயரான சரத்குமார் இறங்கி அடித்து துவம்சம் செய்கிறார். விறுவிறுப்பாக ஆட்டம் போய்க்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஹெலிகாப்டர் மேலே கிராஸ் ஆக பழக்க தோஷத்தில் பேட்டைக் கீழே போட்டு ஹெலிகாப்டருக்குக் கும்பிடு போட பந்து மிடில் ஸ்டம்பை புடிங்கிச் செல்கிறது.

மீண்டும் ரசிகர்கள் ரஜினி ரஜினி ரஜினி எனக் கத்தி எதிர்பார்த்துக் காத்திருக்க மறுபடியும் கேலரியில் அமர்ந்துகொண்டு 'நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு...' என சொல்லத் தொடங்க...''இனிமே நீங்களே நினைச்சாலும் முடியாது தம்பி. இதான் லாஸ்ட் விக்கெட். மொதல்ல இறங்கித் தொலைங்க’ என விஜயகுமார் கூப்பிட, பயங்கர அப்ளாசுடன் களம் இறங்குகிறார் ரஜினி. கடைசி இரண்டு பந்துகளே மிச்சம் இருக்க, ஐந்து ரன்கள் தேவை என போர்டு காட்ட, அரங்கமே சீட்டிலிருந்து எழுந்து ஸ்டாண்டிங்கில் நின்று வெறித்துப் பார்க்கிறது.

பரபரப்பான அந்தப் பந்தை ரஜினி ஓங்கி அடித்து பவுண்டரி நோக்கிச் செல்ல ஃபீல்டர் தடுத்து சிங்கிள் ரன்னாக மாறுகிறது. மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தே விடுகிறது. மறுமுனையில் விஷால் நிற்க ஒரு பாலுக்கு நாலு ரன் என்ற கடினமான டார்கெட். கடைசிப் பந்தை ஜான்சன் கையில் எடுத்துக்கொண்டு திடுதிடுவென ஓடி வர... ஓடிவரும் அதிர்ச்சியில் விஷாலுக்கு நார்கோலெப்சியாகி குப்புறப் படுத்து விடுகிறார். இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத விக்கெட் கீப்பர் கோட்டைவிட்டு கடைசியில் அது பவுண்டரியாகி நம் டீம் ஜெயித்து விடுகிறது. கேட்கவே நல்லா இருக்குல்ல? கப் வாங்குறதுக்குள்ளே கனவு கலைஞ்சு போச்சு!



நன்றி:சினிமா விகடன்
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: நட்சத்திர ஐ.பி.எல்!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 19th, 2014, 6:59 pm

ராஜா நல்ல நகைசுவை பதிவு , இரண்டு முறை பதிவிடபட்டு இருந்தது ஒரு பதிவை நீக்கி விட்டேன் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நட்சத்திர ஐ.பி.எல்!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 20th, 2014, 11:23 am

நல்ல சிப்பு வருது ராஜா.... எல்லா முன்னணி நடிகர்களையும் சும்மா வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க இந்த நகைசுவை கட்டுரையில் :-lag :-lag :-lag
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: நட்சத்திர ஐ.பி.எல்!

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » மே 20th, 2014, 11:33 am

ரசிகர்கள் ரஜினி ரஜினி ரஜினி எனக் கத்தி எதிர்பார்த்துக் காத்திருக்க மறுபடியும் கேலரியில் அமர்ந்துகொண்டு 'நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு...' என சொல்லத் தொடங்க...''இனிமே நீங்களே நினைச்சாலும் முடியாது தம்பி. இதான் லாஸ்ட் விக்கெட். மொதல்ல இறங்கித் தொலைங்க’ என விஜயகுமார் கூப்பிட, பயங்கர அப்ளாசுடன் களம் இறங்குகிறார் ரஜினி. கடைசி இரண்டு பந்துகளே மிச்சம் இருக்க, ஐந்து ரன்கள் தேவை என போர்டு காட்ட, அரங்கமே சீட்டிலிருந்து எழுந்து ஸ்டாண்டிங்கில் நின்று வெறித்துப் பார்க்கிறது.



:-vilu :-vilu :-vilu :-vilu :-vilu :D :D :D :D :-sml :-sml :-sml :-sml :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y
:-vilu :-vilu :-vilu :-vilu :-vilu :D :D :D :D :-sml :-sml :-sml :-sml :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-vilu :-vilu :-vilu :-vilu :-vilu :D :D :D :D :-sml :-sml :-sml :-sml :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-vilu :-vilu :-vilu :-vilu :-vilu :D :D :D :D :-sml :-sml :-sml :-sml :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y :-y
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 49 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron