[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • மே டே.. தல டே...
Page 1 of 1

மே டே.. தல டே...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மே 1st, 2014, 10:50 pm
by Raja
தி.மு.க ஆட்சியில் ‘அய்யா எங்களை விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா...’ என்று அஜித் ஒப்பனாக பேச ரஜினி இருக்கையைவிட்டு எழுந்து கைதட்டினார். அ.தி.மு.க ஆட்சி சினிமா நூற்றாண்டு விழாவில் அஜித் அமிதாப் காலில்விழ எத்தனிக்க... தடுத்து நிறுத்தி கை கொடுத்தார் பச்சன்!

மே-1 அஜித்குமார் பிறந்த்நாள் வழக்கமாக அந்நாளில் சென்னையில் இருக்கும் அஜித் இப்போது புனேயில் இருக்கிறார், நண்பனின் அன்பான அழைப்பை ஏற்று மனைவி ஷாலினி, மகள் அனெஸ்கா என்று குடும்ப சகிதமாக புனே புறப்பட்டு போயிருக்கிறார். அஜித் என்னதான் நினைக்கிறார்... என்னதான் சொல்கிறார்... அவருக்கு நெருக்கமான நிழல் மனிதர் தன்னிடம் அஜித் பேசியதை அப்படியே தருகிறார்.

‘‘ஒருவன் பிறந்தநாளை நிறையபேர் ஞாபகம் வைத்து இருந்தால் பர்த்டே கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் அவனை மறந்து விட்டால் ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன் எனக்கு இன்று பிறந்தநாள்’ என்று அவன் விளம்பரம் செய்து கொள்வதில் தப்பே இல்லை.

தேசத்தில் காற்று, நதி எப்படியோ அதுபோல சினிமா கலைஞன் என்பவன் எல்லா மாநிலத்துக்கும், அனைத்து மொழிக்கும் பொதுவானவன். தி.மு.க ஆட்சியில் பேசவந்த உண்மையான கருத்தை மறைத்து வேறு எது எதையோ திரித்து எழுதினார்கள், எழுதுகிறார்கள். உண்மையில் காவிரிநீர் பிரச்சினையா? விலைவாசி பிரச்சினையா? இதற்கு ஏன் சினிமா நடிகன் பதில் சொல்லாமல் இருக்கிறான், போராட மறுக்கிறான் என்ற தோற்றத்தை சமூகத்தின் மத்தியில் நடிகனைபற்றிய தவறான கருத்து திணிக்கப்படுகிறது.

நாங்கள் பொதுமக்களில் ஒருவர் உங்களைப் போல்தான் நாங்களும் தேர்தலில் வாக்களித்தோம். சமூக பிரச்சினைகளை களைவதற்கு என்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாட்டில் அவரவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிற மாதிரி நாங்களும் சினிமா துறையில் நடிப்புத் தொழிலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் தலையில் நீங்களாகவே கிரீடத்தை பொருத்தி கரங்களை இழுத்து சாலையில் தர்ணா செய்யச் சொல்லாதீர்கள்.

அரசாங்கத்தின் அதிகாரிகள் செய்ய வேண்டிய செயல்களை சினிமாவில் அதிகாரிகளாக நடிக்கும் எங்களால் செயல்படுத்த முடியாது. திரையில் போலீஸ் அதிகாரியாக போலி ரவுடிகளிடம் சண்டை போடும் எங்களால் சமூகத்தில் இருக்கும் நிஜ ரவுடிகளை நெருங்கக்கூட முடியாது இதுதான் எதார்த்தம் எங்களை எடைபோடும் எந்திரம் மக்களாகிய நீங்கள்தான். எங்களைப்பற்றி நீங்கள் தவறாக கணித்தால் எந்திரம் பழுதாகி இருக்கிறது என்று அர்த்தம்’’

நன்றி: விகடன்

Re: மே டே.. தல டே...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மே 2nd, 2014, 10:57 am
by பிரபாகரன்
சமூக பிரச்சினைகளை களைவதற்கு என்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாட்டில் அவரவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிற மாதிரி நாங்களும் சினிமா துறையில் நடிப்புத் தொழிலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் தலையில் நீங்களாகவே கிரீடத்தை பொருத்தி கரங்களை இழுத்து சாலையில் தர்ணா செய்யச் சொல்லாதீர்கள்.


இதைவிட என்ன சொல்லணும் இந்த நடிகனை தெய்வமாக நினைக்கும் முட்டாள் ரசிகர்களுக்கு.

நடிகன் நடிப்பை ஒரு வேலையை பார்கிறான் சம்பாதிக்கிறான். ஆனால் ரசிகன் நடிகனின் நடிப்பை ஒரு பிறப்பிலும் மேலான செயலாக பாக்கிறான். தன் வேலையை மறந்து, தன் குடும்பத்தை மறந்து மடத்தனமாக படம் வெளியாகவில்லை என்று உயிரை விடுகிறான், மொட்டை போடுகிறான். பாத யாதிரை செல்கிறான். பாலாபிசேகம் செய்கிறான். கொஞ்சமாவது திருந்துங்கள் .... படத்தை பொழுதுபோக்காக பாருங்கள். கண்ணாடி ஜீன்ஸ் போட்ட உடம்புகளை பார்த்து மயங்கி, உங்கள் உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள்.

நல்ல பதிவு ராஜா :-arm