[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

கோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 28th, 2014, 9:18 am

Image


நல்ல கதை அமைந்தால் நண்பர் ரஜினியை வைத்து படம் தயாரிப்பேன் என்று ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் கூறினார்.

ரஜினி நடித்த ஒரே ஹாலிவுட் படமான ப்ளட்ஸ்டோனைத் தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தயாரித்த தமிழ்ப் படம் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ். ஆனால் ஹாலிவுட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமை அசோக் அமிர்தராஜுக்கு உண்டு.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அசோக் அமிர்தராஜ், நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார். ரஜினியின் முதல் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படம் கோச்சடையான் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் முக்கியமான காட்சிகளை அவருக்கு ரஜினி தரப்பில் போட்டுக் காட்டினர். படம் பார்த்த அசோக் அமிர்தராஜ், சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், “விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் ஹாலிவுட்டிலும் உலக அளவிலும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கோச்சடையான்தான் இந்த நேர்த்தியான தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு போய் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.

இப்படி ஒரு அசாதாரண டிஜிட்டல் அனுபவத்தைத் தந்துள்ள என் இனிய நண்பர் ரஜினிகாந்த், இந்தப் படத்தை இயக்கியுள்ள அவர் மகள் சௌந்தர்யா மற்றும் அவர்களின் குழுவினரை வாழ்த்துகிறேன். இந்தப் படத்தை நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். என் நண்பரின் இந்தப் படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

பின்னர் அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும் அதற்கு அசோக் அமிர்தராஜ் சொன்ன பதில்களும்…

கேள்வி: மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் இந்தியாவில் வருமு முதல் படம் கோச்சடையான். இந்த தொழில்நுட்பம் எந்த அளவுக்கு படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

பதில்: மோஷன் கேப்சரிங் என்பது ரொம்ப அட்வான்ஸ் தொழில்நுட்பம். இந்தியாவில் முதல் முறை இந்த டெக்னாலஜியில் படம் வருது. முன்பு அனிமேஷனில் படம் வந்திருக்கு. இது அதைவிட இரண்டு, மூன்று படிகள் அதிகம். கோச்சடையானில் ரஜினியின் மூவ்மென்ட்ஸை சௌந்தர்யா சரியா கேப்சர் பண்ணியிருக்காங்க. இந்த தொழில்நுட்பமும் ரஜினியின் பர்பெக்டான உடல் அசைவுகளும் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும்.

கேள்வி: எல்லாரும் சொல்றாங்க, இது ஒரு பொம்மைப் படம் மாதிரி இருக்கு. இதை அவர் லைவாகவே செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று. இது என்ன தொழில்நுட்பத்தின் கோளாறா.. அல்லது பார்ப்பவரின் மனநிலை கோளாறா?

பதில்: ரஜினிகாந்த்தை லைவாகப் பார்க்க வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனா சர்வதேச அளவில், ஹாலிவுட்டில் டிஜிட்டல் டெக்னாலஜி முக்கியமாகிவிட்டது. ஒரு லைவ் ஆக்ஸன் படத்தைப் பார்ப்பதை விட பிரமாண்ட உணர்வை இந்த மாதிரி டிஜிட்டல் படங்கள் தரும். குடும்பத்தோடு இந்த மாதிரி படங்களைப் பார்ப்பது நிச்சயம் புதிய உணர்வைத் தரும். கல்வி ரீதியாகவும் இந்த மாதிரி படங்கள் புதிய வாசலைத் திறக்கும்.

Image


கேள்வி: வீடியோ கேம்ஸ், டிவிகளில் கார்ட்டூன், அனிமேஷன் படங்களை எல்லாரும் பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க. ஆனா தமிழ்நாட்டைப் பொருத்தவரை ரஜினி ரஜினியா வரணும், தீபிகா தீபிகாவா வரணும்னும்தான் எல்லாரும் லைவாக எதிர்ப்பார்ப்போம். அவர் சண்டைபோடுவதைவிட, சும்மா வந்து நின்று ஒரு பஞ்ச் டயலாக் பேசினாலே அதிகம் ரசிப்பார்கள். அந்த ரசிகர்களுக்கு, ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்தி தருமா?

பதில்: அந்த லைவ் ஆக்ஷன் படம் பார்க்க இப்போ தியேட்டருக்குப் போகவேண்டியதில்லை. உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் வேணும் இல்லையா. அதுக்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கு. ரஜினியின் அசைவுகள், ருத்ரதாண்டவ நடனம் மாதிரி. அதையெல்லாம் தியேட்டரில் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும். லைவ் ஆக்ஷன் – மோஷன் கேப்சரிங்.. இரண்டும் வேறு வேறு வகை பட உருவாக்கங்கள்.

கேள்வி: அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்னொரு பரிமாணம் இந்தப் படம்…

பதில்: ஆமா… கட்டாயமா..

கேள்வி: இதுவரைக்கும் பல சாதனைகள் செஞ்சிருக்காரு… இப்போ அடுத்த கட்டத்துக்குப் போயிருக்காரு.


பதில்: மிகச் சரியாக சொன்னீர்கள்..

கேள்வி: இந்தப் படம் வந்து ரசிகர்களுக்குப் பிடிக்கும், ரஜினி ரசிகர்களுக்குத் திருப்தியா இருக்கும்ங்கறீங்க…

பதில்: ஆமா.. டெஃபனிட்லி.


கேள்வி: தமிழில் நீங்க இதுமாதிரி படம் பண்ற ஐடியா இருக்கா.. அதாவது ரஜினி சாரை வைத்தோ அல்லது வேறு யாரை வைத்தோ தமிழில் படம் பண்ணும் திட்டமிருக்கா?

பதில்: இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணமில்லை. நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா கட்டாயமா பண்ணலாம்..

கேள்வி: இந்த மாதிரி மோஷன் கேப்சரிங் படம் பண்ணுவீங்களா…

பதில்: வொய் நாட்.. கட்டாயமா பண்ணுவேன். கோஸ்ட் ரைடர் பண்ணோம். அதில் நிறைய மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி யூஸ் பண்ணியிருந்தோம். உலகம் முழுக்க 200 மில்லியன் டாலர் வசூலிச்ச படம் அது. பல ஆக்ஷன் படங்களை மோஷன் கேப்சரிங்ல பண்ணியிருக்கோம். அதுவந்து ஹாலிவுட்ல ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டது. இப்போது ஸ்பைடர்மேன் வரப் போகுது. இங்க கோச்சடையான் முதல் முறையா அப்படி வருது. இதுவும் ஒரு வகை பட உருவாக்கம்தான்.


கேள்வி: ரஜினி உங்க நண்பர். அவரை வைத்து ஒரே ஒரு படம்தான் பண்ணியிருக்கீங்க, அதுவும் ஆங்கிலத்தில். அவரை வைத்து நேரடி தமிழ்ப் படம் பண்ணும் திட்டமில்லையா.. நீங்க கேட்கலையா.. அல்லது அப்படிக் கேட்டா படம் பண்ணமாட்டேன்னு சொல்வாரா?

பதில்: நான் கேக்கல… அவரும் அதுபத்தி பேசல. நாங்க ரெண்டு பேருமே அதுபத்திப் பேசியதில்லை. ஆனால் அவர் எனது நல்ல நண்பர். நான் அப்படி ஏதாவது பண்ணா.. அவர்கிட்ட பேசுவேன்.

கேள்வி: நீங்கள் அவரை வைத்து தமிழ்ப் படம் பண்ணா பிரமாண்டமா இருக்குமில்லையா?


பதில்: முதல்ல ஸ்க்ரிப்ட் இருக்கணும்.. அப்புறம்தான் மத்ததெல்லாம் இல்லையா.. நல்ல ஸ்க்ரிப்ட் கெடைச்சா நிச்சயம் அவரை வைத்துப் படம் பண்ணுவேன்.


-என்வழி ஸ்பெஷல்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: கோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 28th, 2014, 3:54 pm

ட்ரைலர் பார்த்தேன் நல்லா தான் இருக்கு பாப்போம் எப்படி இருக்குனு :) :)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: கோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 29th, 2014, 5:30 pm

துவரைக்கும் பல சாதனைகள் செஞ்சிருக்காரு… இப்போ அடுத்த கட்டத்துக்குப் போயிருக்காரு.


என்ன சாதனை பண்ணினாரு.... அவர் தொழிலை அவர் பாக்குறாரு..... அதைபோய் சாதனை, வேதனைன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்க.

நடிப்பை ஒரு பொழுதுபோக்காகவும், நடிகனை நம்மை போல் ஒரு நடிகனாகவும் பாருங்கள் ....
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 52 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron