[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
இந்தியாவின் தேசிய மொழி..எது..? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.

இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திகேயராஜா » ஜனவரி 30th, 2014, 11:35 am

இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி. ???

இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!! ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!! As a Indian.. you should learn our national language.. " என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.

விக்கிபீடியா சொல்லும் உண்மை

அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) ஹிந்தியை அந்த மாநில Official Language ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின் Official Language இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப் பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கின் விபரம்:
" இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..!!"

வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".

இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:

Times Of India:
http://articles.timesofindia.indiatimes ... uage-hindi

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித் தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .." நிறையபேர் ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.

இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.

நாகராஜன், கட்டிடவியலாளர், புதுடில்லி.
அஞ்சலில் கிடைத்ததை பதிவேற்றியது நான்.
கார்த்திகேயராஜா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 1
இணைந்தது: ஜனவரி 17th, 2014, 12:43 pm
மதிப்பீடுகள்: 22
இருப்பிடம்: சென்னை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: TamilNadu
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 30th, 2014, 12:05 pm

ஹிந்தி என்பது தேசிய மொழி இல்லை என்பதை குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது சரிதான்.

ஹிந்தி ஒரு மத்திய அரசின் அலுவல் மொழி தான். ஆனால் இதில் என்ன சூட்சமம் என்றால், அலுவல் என்றால் என்ன?

மத்திய அரசு தனது அலுவல் பணிகளில் மட்டும் ஹிந்தியை பயன்படுத்திகொள்வது. ஆனால் இன்று அதையும் மீறி விமான நிலையங்களில் ஹிந்தி நமது தேசியமொழி...தேசியமொழியை பேசுவது பெருமை என்றெல்லாம் விளம்பரம் செய்து வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அரசு வேலை வாய்ப்புகளில் ஹிந்தி தெரிந்தவருக்கே முதலுரிமை என்ற போக்கையையும் சத்தமில்லாமல் கடைபிடித்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் மராத்தி, பிஹாரி, ராஜஸ்தானி போன்ற மொழிகள் மெதுவாக அழிந்துவருகிறது.

முன்பு ஒரு காலத்தில் ஹிந்தி என்றால் கொதித்தெழுந்தார்கள் தமிழர்கள். இன்று ஹிந்தி என்பது அவசியமான ஒரு மொழி என்ற மாயத்தை தனது தொடர்சியான விளம்பரம், சலுகைகள் போன்றவற்றால் தமிழர்களை மாற்றிவிட்டது மத்திய அரசு.

இங்கே இருக்கும் தமிழ் நம் காலில் கிடக்கிறது, உருது மொழி எழுத்துருவை (எழுத்தை கூட சுயமாக இல்லாத) கொண்ட ஒரு இலக்கிய வளமும் இல்லாத ஹிந்தி நம் தலையில்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 30th, 2014, 12:07 pm

நல்ல பகிர்வு கார்த்தி :-gd :-gd
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜனவரி 30th, 2014, 12:09 pm

நல்ல கட்டுரை நன்றி :)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 30th, 2014, 1:24 pm

வழக்கின் விபரம்:
" இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..!!"

வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".


இதெல்லாம் ஒரு வழக்கு அப்படின்னு வேற ? நல்ல கட்டுரை பதிவு நண்பரே ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » ஜனவரி 31st, 2014, 12:51 am

நல்ல தகவல் தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: இந்தியாவின் தேசிய மொழி..எது..?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 31st, 2014, 6:23 pm

ஆமாம் ஆமாம் சில மாதங்களுக்கு முன்பு தான் நானும் இதனை உணர்ந்தேன் நன்றி நன்றி.........
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பிறமொழிகள் (Other languages)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 14 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]