[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
புதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

புதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜனவரி 6th, 2016, 9:15 am

தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம் அவர்களின் சொல்லாக்கத் தொடர்


Image
வை—பை என்பது ”அல்லிழை வலை நுட்பம் ”(WIRELESS NETWORKING TECHNOLOGY) ஆகும்.

அல்லிழை என்றால் என்ன என்று உங்களுக்கொரு ஐயம் தோன்றலாம். அல் + இழை = அல்லிழை. “இழை இல்லாத” என்று பொருள். இழை என்பது கம்பியைக் குறிக்கும் சொல். பருமனாக இருந்தால் ”கம்பி” என்போம். மெல்லிதாக இருந்தால் “இழை” என்று சொல்வதே பொருத்தம். இவ்விடத்தில் “அல்லிழை” என்ற சொல்லை “அல் வழிப் புணர்ச்சி”, “அன்மொழித் தொகை”, “அல்லுழி”, “அல்வழக்கு” ஆகிய சொற்களுடன் ஒப்புநோக்கிப் பார்த்திடுக !

அல் = வறுமை = வெறுமை = ஒன்றுமின்மை. ”அல்” என்னும் சொல்லுக்கு “அல்லாத” என்ற பொருளுடன் “ஒன்றும் இல்லாத”, சுருக்கமாக “இல்லாத” என்ற பொருளும் உண்டு என்பதை உன்னித்துணர்க ! எனவே wireless =அல்லிழை.

இந்த வை-பை நுட்பம் வானலையைப் (RADIO FREQUENCY) பயன்படுத்தி மிகு விரை இணைய தளம் (HIGH SPEED INTERNET) மற்றும் வலைத் தள (HIGH SPEED NETWORK) வசதிகளை அளிக்கிறது.

( Wi-Fi is the name of a popular wireless networking technology that uses radio waves to provide wireless high-speed internet and network connections.) வை –பை அல்லயன்ஸ் என்ற நிறுவனம் ”வை-பை” என்ற சொல்லைத் தனது வணிகக் குறியீட்டுச் சொல்லாக வைத்திருக்கிறது.


(The Wi-Fi Alliance, owns the Wi-Fi registered trade mark) இந்த வணிகக் குறியீட்டுச் சொல்லிலிருந்து உருவான பெயர்தான் “வை-பை” என்பது.வை–பை அல்லயன்சு நிறுவனம் “வை–பை” என்பதை “அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” (WIRELESS LOCAL AREA NETWORK PRODUCTS ) என்று வரையறை செய்கிறது. சிற்றிடம் = குறுந்தொலைவு = LOCAL AREA ( The Wi-Fi Alliance, the organisation that owns the Wi-Fi registered Trade Mark term specifically defines Wi-Fi as “wireless local area network (WLAN) products “ )

நாம் இதைச் சுருக்கமாக “அல்லிழை விளைவு” (WIRELESS PRODUCTS) என்று அழைக்கலாம். இதையே இன்னும் சுருக்கி “அல்-விளை” என்று சொல்லலாம். ”வை-பை” என்பதை இனி “அல்-விளை” என்று அழைப்போமே !

சென்னப்ப நாயக்கர் பட்டினம் “சென்னை” ஆனதைப் போல, திருச்சிராப்பள்ளி “திருச்சி” ஆனதைப் போல “அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” என்பது “அல்லிழை விளைவு” என்று சுருங்கி, “அல்-விளை” என்று நிலை பெறட்டுமே !

வை-பை” என்ற புதிர்ச் சொல்லுக்கு “அல்-விளை” என்ற புதுப் பெயரைச் சூட்டுவோம் ! தமிழுக்கு அணி சேர்ப்போம் ! வாரீர் !!
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: புதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 12th, 2016, 9:22 am

எவ்வளவு அர்த்தம் நிறைந்த சொற்கள்

வெல்க தமிழ் வளர்க தமிழ்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 31 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron