[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
புதுச்சொல் புனைவோம் (VICE-கதுவை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

புதுச்சொல் புனைவோம் (VICE-கதுவை)

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜனவரி 5th, 2016, 8:38 am

தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம் அவர்களின் சொல்லாக்கத் தொடர்


Image
பணிமனைகளில் எந்தப் பொருளையும் திருத்தம் செய்வதற்கு முன்பு அதை நழுவாமல் இறுக்கமாகக் கவ்விப் பிடிப்பதற்கு வைஸ் (Vice) என்னும் பிடிகருவியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.

இந்தக் கருவியின் தாடைகளுக்கு இடையில் திருத்தம் செய்ய வேண்டிய பொருளை நிறுத்தி தாடைத் திருகு மூலம் இறுக்கி விட்டால், முதலைப் பிடிதான். பொருள் நழுவ முடியாது.

இறுக்கமாகக் கவ்விப் பிடித்தல் என்பதைக் குறிக்கத் தமிழ் இலக்கியங்களில் “ கதுவு “ , “ கதுவுதல் “ என்னும் சொற்கள் கையாளப் பட்டுள்ளன.

“ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி (வரி : 287)

இதே இலக்கியத்தில் வேறு ஒரு இடத்தில் “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்ற வரி வருகிறது (வரி ; 471)

வைஸ் என்பதை “ பிடிச்சிராவி “ “ பிடிப்பான் “ “ பிடி தண்டு “ என்று பலவாறாக அழைக்கின்றனர். இவற்றில் ஒலி நயமும் இல்லை; சுருங்கிய வடிவும் இல்லை.

கதுவும் செயலைச் செய்கின்ற கருவியைக் “ கதுவை “ என்று அழைக்கலாமே ! பொருள் நயமும் இருக்கிறது ! ஒலி நயமும் இருக்கிறது ! சுருங்கிய வடிவும் இருக்கிறது ! கதுவையின் அடிப்படையில் பிறக்கின்ற பிற சொற்களையும் பாருங்கள் !
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: புதுச்சொல் புனைவோம் கதுவை (VICE)

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஜனவரி 5th, 2016, 11:16 pm

முற்றிலும் புதிய சொல் நண்பரே அரிய தந்தமைக்கு நன்றி ...
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 35 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron