[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூலை 7th, 2014, 8:49 pm

இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.

phpBB [video]


நீங்கள் பார்த்த இந்த வசதியை கூகுள் நிறுவனம் சில இந்திய மொழிகளுக்கும், மேலும் பல உலக மொழிகளுக்கும் வழங்குகிறது.

பொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான ஈர்த்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.

இதனால் என்ன பயன்?
தமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் அல்லது தட்டச்சு செய்ய சிரமமாக உள்ளது என எண்ணுபவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளீடு(Input) செய்து இணையத்தேடல்(Internet Search) செய்யலாம், ஜிமெயிலில்(Gmail) தமிழ் மின்னஞ்சல்கள் இடுவு(Compose) செய்து அனுப்பலாம் , கூகுள் டாக்ஸில் (Google Docs) தமிழ் ஆவணங்களை(Documents) கையால் எழுதி சேமிக்கலாம். செல்பேசியில் இந்த நுட்பத்தை கொண்டு எளிதாக தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து இணைய வேலைகளை செய்வது தான் இதன் முதன்மை சிறப்பாகும்.

இந்த ஈர்த்தறி வசதி கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்பேசியில் நாம் பயன்படுத்தும் கூகிள் இணையத்தேடல் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி (Google Translate Tool), கூகிள் டாக்ஸ்(Google Docs) மற்றும் கூகிள் டிரைவ்(Google Drive) போன்றவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.


ஜிமெயில் (Gmail)


ஜிமெயில் (Gmail)



கூகிள் மொழிபெயர்ப்பு (Google Translate)



கூகிள் டாக்ஸ் (Google Docs)


கூகிள் டாக்ஸ் (Google Docs)


இதுவரை ஆங்கிலம் மற்றும் சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எட்டா கனியாகத் தான் இருந்தது. இந்த குறையை கூகிள் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும் தமிழில் ஈர்த்தறி (Handwriting Recognition) என்பது முடியாத ஒன்றாகவே தமிழ் கணினி மேம்புனர்களால்(Developer) உருவகப்படுத்தப்பட்டு வந்தது. இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரை அளவில் மட்டுமே இதுநாள்வரை இருந்தது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தமிழை கணிமை (Computing) துறையில் மேம்படுத்தும் ஒரு சிறப்பான வசதியை கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளதை நாம் மனதார பாராட்டவேண்டும்.

இந்த வசதியை கொண்டு இனி சமூக பிணையங்களில் (Social Network) தமிழை தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட தமிழில் எழுதி மற்றவர்களுடன் பறிமாறிகொள்ளலாம். கூகிள் மொழிபெயர்ப்பு கருவியில்(Google Translate Tool) எழுத வேண்டியதை கையால் எழுதினால், அது தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். பிறகு அதை அப்படியே நகல் (Copy) எடுத்து முகநூல், கூகிள்+, டுவிட்டர் போன்ற சமூக பிணைய தளங்களில் ஒட்டி பயன்படுத்தலாம். மேலும் இந்த ஈர்த்தறி வசதியை மேலும் சிறப்பாக்கும் தொடர்பான பணிகளை கூகிள் நிறுவனம் செய்துவருகிறது. நாம் இந்த வசதியை எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து கூகிள் நிறுவனம் தமிழ் சேவையை வழங்கும் என நம்பலாம். மலையாளம், பிகாரி, ராஜஸ்தானி, ஒரிய, காஷ்மீரி போன்ற பல இந்திய மொழிகளுக்கு இதுவரை இந்த வசதிகளை அளிக்காததற்குக் காரணம், அவர்கள் தங்கள் மொழியை இணையதளத்தில் சரியாக பயன்படுத்தாதது தான்.

இந்த வசதியை கொண்டு தமிழில் எழுதும் கையெழுத்து அச்சுப்பிசகாமல் சரியாக வருகிறது. கோணலாக எழுதினாலும் சரி, சிறியது, பெரியதுவென எழுதினாலும் சரி தமிழ் எழுத்து சரியாக வருகிறது. காகிதத்தில் கட கடவென எழுதுவதைப் போன்று எழுதுவதை நிறுத்தாமல் எழுதினால் கூட எழுத்து வரிகள் அருமையாக வருகின்றது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்வென்றால், எழுதிய சொல்லில் ஒரு எழுத்தை நீக்க(Delete) வேண்டும் என்றால் முடியாது. எழுதிய மொத்த வரிகளும் நீக்கப்பட்டுவிடும், மற்றபடி வேறு எந்தப் பெரிய குறைகளும் இல்லை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா? என்றால் அதுவும் இல்லை.

phpBB [video]


Handwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் ஈர்த்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்த்தறி = ஈர்த்தல் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். ஈர்த்தல் என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல் என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்.


- பிரபாகரன்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் எழுத்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூலை 9th, 2014, 1:28 am

பொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான எழுத்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.


வரவேற்கதக்க ஒன்று கொஞ்சம் வருத்தம் கூட இவ்வளவு காலம் ஆனதே தமிழை இணைக்க என்று


Handwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் எழுத்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்ப்பறி = ஈர் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். எழுத்து என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல்> அறி என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்...


நல்ல விளக்கம் நண்பரே , எழுத்தறி பற்றிய கட்டுரை அருமை :-gd :-gd :-gd
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூலை 13th, 2014, 8:55 pm

அருமை அருமை...

இப்படி ஒரு வசதி இருப்பது இவ்வளவு நாளா தெரியாம போச்சே...

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.....

இப்படியொரு வசதியை ஊடகங்கள் வெளியிடாமல் போனது மிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 28 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]