[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ரோசா தமிழ்ப்பெயரா? கலைஞரே! ஏன் இந்தத் தடுமாற்றம்? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

ரோசா தமிழ்ப்பெயரா? கலைஞரே! ஏன் இந்தத் தடுமாற்றம்?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 11th, 2014, 3:32 pm

Image

"நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!!!"
என்னும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.

'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் குருரமேசு, இப்படத்தில் நடிக்கும்,ஒரே மகப்பேற்றில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, அட்சிதி, ஆப்தி ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தாராம்.

Image


''குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கருணாநிதி அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அட்சிதிக்கு ரோசா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.'' என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியாளராகவே கற்பனை செய்துகொண்டு கலைஞர் தமிழில்தான் பெயர் சூட்டியிருப்பார் என எண்ணியிருந்தால் அதுவும் தவறுதான். ஏனெனில் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டிய கலைஞர், குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 பூக்களை அழகாகக் கூறியிருப்பாரே, அவற்றை எல்லாம் மறந்து தமிழில் பூக்களுக்குப் பெயர் இல்லை என எண்ணிச் சூட்டி விட்டாரா?

அல்லது உண்மையில் கலைஞரே தமிழ்ப்பெயர் சூட்டுவதாக இப்பெயர்களைச் சூட்டியிருப்பின் அதுவும் வேதனைக்குரிய செய்திதான்! ரோசாவைத் தமிழ் என எண்ணும் நிலையில் தினமணிச் செய்தியாளர் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், முத்தமிழறிஞர் இவ்வாறு இருந்தால் இன்றைய இளந் தலைமுறையினரின் தமிழின் நிலை என்ன?

நன்றி- தமிழ்மன்றம்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: கலைஞர் சிறுமிகளுக்கு பெயர் சூட்டிய 4 தமிழ் பெயர்களில் ஒன்று தமிழ் பெயரே இல்லை

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 11th, 2014, 3:33 pm

ஒரு சமயம் அவர் ரோஜா ரசிகரா இருப்பாரோ :)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 35 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]