[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இறுக்கமான உடைகள் அழகா? ஆபத்தா? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.

இறுக்கமான உடைகள் அழகா? ஆபத்தா?

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஏப்ரல் 28th, 2014, 1:15 am

Image


மனிதர்களின் உடல் அழகை எடுப்பாக காட்டுவதில் உடைகளுக்கு அதிக பங்கு உண்டு. அதிலும் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் அணிவதுதான் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக கூறுகிறார்கள். இது தவறு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும், அதில் அதிகமாக ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அந்த ஆய்வுகள் மேலும் கூறுகின்றன. நடுத்தர வயதில் இறுக்கமான உடைகள் அணிவதால் உடலில் ஜீரண செயல்பாடுகள் குறைகிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து ஆடைகளால் இறுக்கப்படுவதால் அந்த உடை அணிபவர்களின் முதுகெலும்பு பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனால் சருமத்தில் காற்று படாமல் உடம்பில் வியர்வை தேங்குவதால் கிருமி தொற்று உருவாகும் நிலை ஏற்படுகிறது.

இறுக்கமான உடைகள் உடலை இறுக்குவதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இறுக்கமான ஜீன்ஸ், பெல்ட் அணிபவர்களுக்கு மெரால்ஜியா பாரஸ் தெற்றிகா என்ற பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற உடைகளால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படும்.

இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பை இழக்க இதுவும் ஒரு காரணம்.

எனவே சிறுவயதில் இருந்தே இறுக்கமான உள்ளாடைகள், மேலாடைகளை அணிய வேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

இறுக்கமான உடைகளை தவிர்த்து, நெகிழ்வு தன்மை கொண்ட துணிகளில் தயாரித்த ஆடைகளை வாங்கி அணிய வேண்டும். ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ் என்று சொல்லப்படும் உடைகள் நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் அவை உடலை இறுக்காது. தொடர்ச்சியாக ஜீன்ஸ் அணிவதை தவிர்த்தும், கோடை காலத்தில் முற்றிலும் தவிர்ப்பதும் நன்மையை தரும்.

இறுக்கமான உடைகளை அணிபவர்கள் அழகைவிட ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் பல்வேறு சிரமமங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

நன்றி: தினந்தந்தி
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: இறுக்கமான உடைகள் அழகா? ஆபத்தா?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 28th, 2014, 12:52 pm

ஆடை என்பது மானத்தை மறைக்க தான்.... இப்போதுள்ளபடி உடல் அழகை ஊர்மத்தியில் காட்ட இல்லை என்பதை முதலில் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். இப்படி பேசினால் உடனே நம்மை பழமைவாதி என்று குற்றம்சொல்லும் பெண்கள் கூட்டமே அதிகம்.

உடல் அழகை ஊர் மத்தியில் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தால் ஏன் அப்புறம் ஆடை என்ற அந்த எடையை உடம்பில் போடணும், அப்படியே கிளம்பவேண்டியது தானே.

இந்த கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துவதே இந்த பாழாய்ப்போன திரைப்படங்களும், தொ.க களும் தான்.

என்று பெண்கள் இதை உணர்வார்கள் என்று தெரியவில்லை.

பகிர்வுக்கு நன்றி ராஜா :-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to பொது (Common)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 13 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]