[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பெண் என்றால் பாவமா? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.

பெண் என்றால் பாவமா?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 30th, 2014, 7:07 am

Image

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் கூட இந்திய அரசியல் களத்தில் வலம் வரும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி விதிவிலக்காக திகழ்ந்தவர். அவருக்குப் பிறகு அரசியல் களம் புகுந்த பெண்களால் அந்த இடத்தை இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. இன்றைய அரசியல் களத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் ஆளுமைத் திறன் மிக்க அரசியல் தலைவர்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது உண்மைதான். ஆனால், இவர்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவே.

அரசியல் அதிகாரத்திலும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை பிரதான கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், நடைமுறையில் 33 சதவீதம் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியதில் மளிருக்கான இட ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் பின்பற்றியுள்ளனவா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கட்சிகளிலேயே அதிக பெண் வேட்பாளர்களை களமிறக்கிய கட்சியாக அதிமுகவே உள்ளது. 40 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேல், திருவண்ணாமலையில் வனரோஜா, திருப்பூரில் சத்தியபாமா, தென்காசியில் வசந்தி முருகேசன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக 33 சதவீதத்தைப் பின்பற்றியிருந்தால் 13 பேரை பெண் வேட்பாளராக நிறுத்தியிருக்க வேண்டும். தற்போது திமுக 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் திமுக சார்பில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டுமே நிற்கின்றனர். சேலத்தில் செ.உமாராணியும், ஈரோட்டில் பவித்திரவள்ளியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முயற்சித்த கட்சி காங்கிரஸ். அந்தக் கட்சி சார்பில் தமிழகத்தில் 3 தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திருச்சியில் சாருபாலா தொண்டைமானும், கரூரில் ஜோதிமணியும் நிற்கின்றனர்.

காங்கிரஸ் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. (தென்சென்னைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை) காங்கிரஸ் சார்பில் மொத்தம் 13 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிறுத்தாததற்காக சத்தியமூர்த்தி பவனை மகளிர் காங்கிரஸார் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் மார்க்சிஸ்ட் சார்பில் வடசென்னையில் உ.வாசுகியும், தஞ்சாவூரில் எஸ்.தமிழ்ச்செல்வியும் நிற்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார்.

மகளிருக்கு இடமே இல்லை: பாஜக அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக மொத்தம் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் ஒரு தொகுதியில்கூட பெண் வேட்பாளரை நிறுத்தவில்லை. பாமக 8 தொகுதிகளும், மதிமுக 7 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

இந்தக் கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட பெண் வேட்பாளரை நிறுத்தவில்லை. பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் வேலூர், தஞ்சாவூர் தவிர இதர தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்களே.

தேர்தலில் பெண் வேட்பாளர்களை நிறுத்தாததற்கு அரசியல் கட்சிகள் மட்டும் காரணம் இல்லை, வாக்காளர்களும் ஒரு காரணம் என்று சில அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

பிரபல கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் இது குறித்து கூறும்போது, "பெண் வேட்பாளர்களை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பெண் வேட்பாளர்களைப் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்வது என்பது எளிதானது இல்லை. சில கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருக்கலாம். அப்படி நிற்கும் பெண் வேட்பாளர்களும் கட்சியில் உள்ள தந்தை, கணவர் துணையுடனே நிறுத்தப்படுகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார். வாக்காளர்கள் உண்மையில் ஆண், பெண் பாகுபாட்டை பார்க்கின்றனரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வடசென்னையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உ.வாசுகியிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:-

இந்தத் தேர்தலில் மகளிர் குறைவாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

எனவேதான், மகளிரை வேட்பாளர்களாக நிறுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் விருப்பு, வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறோம்.

பெண் வேட்பாளர் என்றால் வெற்றிபெற மாட்டார்கள் என்ற பார்வை பொய்யானது.

பல கட்சிகளில் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். முதல்வர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வாக்காளர்களால் புறக்கணிக்கப்படுகின்றனரா?

எனவே ஒருவரை பெண்ணாகப் பார்க்காமல், கட்சியின் செயல்வீரர் என்ற நிலையில் பார்க்கும் தோற்றத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள்தான் ஏற்படுத்த வேண்டும். ஆண் சமுதாயமாக இருந்தாலும், "மாத்தி யோசி' என்று சில விஷயங்களைக் கூறுவதுபோல, இந்த விஷயத்திலும் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார் அவர்.

சமூகம் மாத்தி யோசிக்குமா?


நன்றி-தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to பொது (Common)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 11 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron