[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் !!
Page 1 of 1

குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் !!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 13th, 2014, 9:15 am
by வேட்டையன்
Image

கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தை தாயின் பேச்சை உற்றுக் கவனிக்க ஆரம்பித்து விடுகிறது என சமீபத்திய ஆய்வொன்றில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று. கர்ப்பிணிகள் மற்றும் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் இருக்கும் குழந்தை தாயின் குரலை சரியாக இனம் கண்டு கொள்கிறது என தெரியவந்துள்ளதாம்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து சத்தம் போட்டு படிக்க சொன்னார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அப்போது வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

ஆச்சர்யமாக, தாய் கதைப் புத்தகம் படிக்கும் போது வயிற்றில் உள்ள குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து, அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது.

தாயின் சொல்லும் கதையைக் கேட்பதாலேயே, இந்த மாற்றம் குழந்தையிடம் நிகழ்ந்தது என இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


நன்றி-kalvikalanjiam.com

Re: குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் !!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 14th, 2014, 12:51 pm
by பூச்சரண்
நல்ல பதிவு அண்ணா ஆனால் என்ன. இப்பொழுது. யாரும் கதை. புத்தகம் படிப்பது இல்லை .