[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பெண்களின் டிரெஸ் கோட்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.

பெண்களின் டிரெஸ் கோட்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 25th, 2014, 4:58 pm

Image

டாக்டர்கள் என்றால் வெள்ளை கோர்ட், வக்கீல்களுக்கு கறுப்பு கோர்ட், காவல்துறையினருக்கு காக்கி சட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்... என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை சுடிதார், பேண்ட், பார்மல், சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்க வேண்டும். காரணம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.

சில அலுவலகங்களில் மேற்கிந்திய உடைகளை விரும்புவார்கள் . சிலர் பராம்பரிய உடைகள் மேற்கிந்திய உடைகள் அணியும் போது பேண்ட் அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன், மற்றும் அடர்நீல நிற பேண்டுகளுக்கு வெள்ளை நீலம், பேஜ் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால் உடல்கள் இறுக்கி பிடிக்கும் படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தைசுற்றி ஸ்கார்ப் அணியலாம். அல்லது வெயிஸ்ட் கோர்ட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

புடவை அணியும் போது நன்றாக சலவை செய்த காட்டன்அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்க வேண்டும். அதிக வேலைபாடு முதுகில் ஜன்னல், கயிறு, போன்றவை இருக்கக்கூடாது. அதே போல் டீப் நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்த வேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக்கூடாது. சன்னமான புடவைகளை தவிர்க்க வேண்டும்.

சுடிதாரில், காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால் உள் துணி வைத்து தைக்க வேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஓட்டி அணியக்கூடிய பேண்ட். இதற்கு முட்டிக்கு கீழ் வரக்கூடிய டாப் அணிய வேண்டும்.. சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம். அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்க விடவேண்டும். உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன்கள் அணிவது அவசியம்.

அலுவலகம் என்பதால் கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக் டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட் கழுத்தில் மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின் கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது. தேவைப்பட்டால் கைப்பையில் சீப்பு, காம்பாக்ட் பவுடர், பொட்டு வைத்துக்கொள்ளலாம்.

மாலை நேரத்தில் முகத்தை கழுவி சின்னதாக மேக்கப்போட்டுக் கொண்டால் அவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை பார்க்கும் மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள். சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ் பச்சை, நீலம், வெள்ளை நிற சட்டைகளை எல்லோரும் அணியலாம்.

வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கறுப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப் வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர்நிறங்களில் உடைகளை அணியலாம்.ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டிஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம் என்கிறார் தபசும்.

நன்றி தினகரன்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பெண்களின் டிரெஸ் கோட்...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 25th, 2014, 10:00 pm

பெண்கள் ரொம்ப பிடிப்பான ஆடைகளை அணியும்போது, அவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.இதை அவர்கள் நவீனம், பேஷன் என்று அழைக்கிறார்கள். இதை சொன்னால் சொன்னவரின் பார்வை தவறானது என சொல்லுகின்றனர்.

சேலை என்ற ஆடைக்கு சொந்தக்காரகள் நாம், ஆனால் இன்று சேலையை தொலைத்து அன்னியமோகம் கொண்டு கண்ட கண்ட ஆடைகளை அணிகிறார்கள் பெண்கள்.

இது நம் கலாச்சரத்திற்கு ஒத்துவராத ஒன்று. பெண்களுக்கும் ஆடை விசயத்தில் கொஞ்சம் பொறுப்புகள் உண்டு என்பதை அறிந்தால் நல்லது.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 12 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron