[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எளிய அழகு குறிப்புகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.

எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 4th, 2014, 12:25 pm

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போமா..... சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்
.


* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.


* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.


* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும்.


* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.


* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.


* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.


* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் .....


* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.


* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.


* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.


* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.

...
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்
கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.


* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.


* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்
முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.


* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.


* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து
முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக
இருக்கும்.


* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.


* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.
பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.


* நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.


* லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.


* காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.

* நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக
இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக
இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள்
இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.


* சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.


* ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.


* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.


* மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ வேண்டும்.
கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.

நன்றி குட்டி நியூஸ்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 4th, 2014, 6:02 pm

பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 4th, 2014, 6:04 pm

பிரபாகரன் wrote:பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க :)


அனுபவமோ , :-run :-run :-run :-run
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 5th, 2014, 12:52 am

பிரபாகரன் wrote:பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க :)


சரிதான் பாஸ் ..... ஆனா உங்க கணக்கு எனக்கு தெரிச்சு போச்சு. இதுக்குனு நீங்க ஒதுக்குற காசு மிச்சமாகுமுன்னு பாக்குறீங்க :):)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 5th, 2014, 12:56 am

வேட்டையன் wrote:
பிரபாகரன் wrote:பெண்கள் முகத்தில் கண்டதையும் போட்டு அப்பிக்காமல் விட்டாலே அழகா தான் இருக்கும். எங்க கேக்குறாங்க :)


சரிதான் பாஸ் ..... ஆனா உங்க கணக்கு எனக்கு தெரிச்சு போச்சு. இதுக்குனு நீங்க ஒதுக்குற காசு மிச்சமாகுமுன்னு பாக்குறீங்க :):)


எப்படி எல்லாம் .....ஐயா சாமி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எளிய அழகு குறிப்புகள் ...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 6th, 2014, 2:27 pm

முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் .....

இன்னும் பாதி எங்கே.. :oops: :oops:


அது சரி ..இவைகள் பெண்களுக்கு மட்டும் தானா.............

ஆண்களுக்கு............. :D
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 47 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron