விருப்பம்
பார்வை
கருத்து
பகிர்வு
சமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.
by பூச்சரண் » ஏப்ரல் 18th, 2014, 1:51 pm
உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9 சர்க்கரை - 1/4 கப் பாதாம் - 1 கையளவு பிஸ்தா - 2-3 நெய் - 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---மாவீரன் நெப்போலியன்---
-
![பயனர் அவதாரம் [User avatar]](./download/file.php?avatar=50_1397713057.jpg)
பூச்சரண்
- பாவலர் (Poet)
-
- இடுகைகள்: 2113
- இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
- மதிப்பீடுகள்: 1,935

- இருப்பிடம்: கோவை
- Has thanked: 28 முறை
- Been thanked: 12 முறை
-
Return to சமையல் (Cooking)
Who is online
Users browsing this forum: No registered users and 2 guests
Who is online over last 24 hours
Users browsed this forum in the last 24 hours: No registered users and 36 guests