[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 28th, 2014, 9:37 am

Image

விண்வெளியில் தற்போது ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் விண்தளம் தான் அனைத்துலக விண்வெளி நிலையம் இதை நம் தமிழில் அவிநி அல்லது அவிநியம் என்று அழைக்கலாம். சுமார் 15 நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன மேலும் இந்திய இந்த திட்டத்தில் இல்லை.

மேற்கொண்டு இந்த திட்டத்தை பற்றி விரிவாக பாப்போம்.

அமெரிக்கா தான் தனது கனவு திட்டமான அனைத்துலக விண்வெளி நிலையத்தை - அவிநியம் (ISS) உருவாக்க முதன் முதலில் அடிகோலியது.1984 ஆம் ஆண்டில், ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்த ஒரு தளத்தை உருவாக்க தனது ஆதரவை அறிவித்தார். அவர் இந்த திட்டத்தை சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அணைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.1985-ல் அமெரிக்காவின் அழைப்பு மூலம், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தனர். 1993 இல், ரஷ்யாவும் இத்திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டது. இப்போது 15 நாடுகள் இத்திட்டத்தில் பங்கு வகுக்கின்றன. உண்மையிலேயே இது தற்போது ஒரு பெரிய உலக திட்டமாக மாறிவிட்டது.

அனைத்துலக விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் பங்கேற்கும் 15 நாடுகளின் பிரதிநிதித்தும் பின்வரும் படத்தின் மூலம் அறியலாம்.

ஒவ்வொரு நாட்டின் பங்கு பற்றி மேலும் அறிய ஒவ்வொரு நாட்டின் கொடி மேல் சுட்டியை நகர்த்துங்கள்.




இது ஒரு விண்வெளி சோதனை தளம், எழு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கி தங்கள் சோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள சோதனை சாலைகள் உள்ளன. அவிநியில் இருவித தொகுதிகள் (Module) உள்ளன,.ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் செய்ய "பரிசோதனை தொகுப்பு", விண்வெளி வீரர்கள் தங்க "உறைவிட தொகுப்பு" உள்ளன. இந்த நிலையத்திற்கு வேண்டிய மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. மேலும் அவிநியில் உள்ள "தொலைமுக கையாளும் அமைப்பு (Remote Manipulator System) நிலையத்தின் வெளிப்புறத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக பயபடுதப்படுகிறது.

சுட்டியை கிழே உள்ள படத்தில் நகர்த்துவதன் மூலம் ஒவ்வொரு "தொகுப்பு(Module)" பற்றி பார்க்கலாம்.




அவிநி எந்தளவிற்கு பெரியது எவ்வளவு எடையுள்ளது

கட்டுமானம் முடிந்தவுடன் அவிநி (ISS) 72,8 மீட்டர் X 108,5 மீட்டர் பரிமாணம்(Dimension) கொண்டதாக இருக்கும். முழு அளவிலான கால்பந்து மைதானத்தை விட சற்று பெரியதாக இருக்கும். எடை 450 டன் எடை கொண்டதாக இருக்கும் . ஒரு சிறிய பயணிகள் கார் சுமார் 1 டன் எடையுள்ளதென்றால், அது ஒரு காரை போல் 450 மடங்கு எடை கொண்டாதாக இருக்கும்.

அளவு
அனைத்துலக விண்வெளி நிலையம் (108.5m x 72.8m)
கால்பந்து மைதானம்(105m x 68m)




எடை
அனைத்துலக விண்வெளி நிலையம் - 450 டன்
சிறிய கார் - 450 கார்கள்
Image


சர்வதேச நிலையம் தனி தனி பாகங்களாக செய்யப்பட்டு விண்வெளியில் ஒன்றிணைக்கப்படுகிறது.

அவிநி (ISS) யை ஒரே ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அது பல பிரிவுகளாக (தொகுதிகள்) பிரிக்கப்பட்டு மேலும் அந்த பிரிவுகள் ரஷ்சியவின் புரோட்டான் ராக்கெட்டுகள் மற்றும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை ஒன்றிணைக்கப்படுகிறது. மொத்தம் 40 விண்வெளி ஓடங்கள் இந்த பணியை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகள் விண்வெளியில் ஒன்றிணைக்கப்பட்டு மாபெரும் விண்வெளி நிலையமாக உருவெடுக்கிறது .

1998 இல் இந்த பனி தொடங்கப்பட்டு மே 2011 இல் முடிவுற்றது .


ஒவ்வொரு பிரிவுகளின் பெயர்கள்:

Image


1) ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

2) கணு-1 (Node 1 - Unity)

3) அழுத்த இணைபொருத்தி ( Pressurized Mating Adapters - பம)

4) சவீஸ்ட சேவை தொகுதி ( Zvezda Service Module)

5) Z1-டிரஸ் (Z1-Truss)

6) விதி ஆய்வுகூட தொகுதி (Destiny Laboratory Module - U.S. Lab)

7) கனடா கரம்-2 (Canadarm2 -SSRMS)

8) வளிபுகா இணைப்பு (Joint Airlock - Quest)

9) வின்முக அறைகள் (Docking Compartment 1 - Pirs)

10) நகரும் அடியமைப்பு (Mobile Base System -MBS)

11) கணு-2 (Node 2 - Harmony)

12) கொலம்பஸ் ஆய்வகம் (Columbus Laboratory)

13) கிபோ ஆய்வகம் (Kibo laboratory)

14) சிறு ஆராய்ச்சி தொகுதி -2 (Mini Research Module-2 - Poisk)

15) கணு-3 (Node 3 - Tranquility)

16) குபோல - Cupola

17) சிறு ஆராய்ச்சி தொகுதி -1 (Mini Research Module-1 - MRM-1)

18) நிரந்தர பல்நோக்கு தொகுதி (Permanent Multipurpose Module (PMM)


ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

Image

Image


இது அவிநி திட்டத்தில் அனுப்பப்பட்ட முதல் தொகுதியாகும் (Module), மேலும் இது சரக்கு செயல்பாட்டு தடுப்பு (Functional Cargo Block - FGB) என்றும் அழைக்கப்படுகிறது.அமெரிக்கா இதற்கான நிதியை வழங்கியது, ரஷ்யா இதனை கட்டுமானம் செய்தது. இந்த தொகுதி அவிநியின் ஆரம்பக்கால கட்டுமானங்களுக்கு தேவையான மின்சாரம், மிதக்கும் கட்டுபாடு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் அவிநிக்கு தொடர்ச்சியாக பூமியில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்தபடுகிறது.

அவிநி சேர்மான திட்டம் - 1 A/R
செலுத்து வாகனம் - ப்ரோடான் ராக்கெட்
செலுத்து நாள் - 20 நவம்பர் 1998
நீளம் - 41.2 அடி
குறுக்களவு - 13.5 அடி
எடை - 19.3 டன்



கணு -1 (ஐக்கியம்)

Image

Image


இந்த கனு(Node) ஐக்கியம்(Unity) என்றும் அழைக்கபடுகிறது. முதன்முதலில் அமெரிக்காவால் அவிநிகென்று தயாரிக்கப்பட்ட பாகமாகும், இது ஒரு அழுத்தமிகு தொகுப்பு (Pressurized Module).இந்த தொகுப்பில் ஆறு பொதுவுறக்க பொறியம் (Machanism) - CBM உள்ளது. இந்த ஆறு CBM களும் முனை மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அழுத்தமிகு தொகுப்புகள் (PMA -1 மற்றும் PMA -2) கணு-1 டுடன் இயக்கப்படுகின்றது. PMA -1 ஆனது ஜர்யா கட்டுபாட்டு தொகுதியையும் கணு -1 தொகுதியையும் இணைக்கும் அழுத்தமிகு பாதையாக (pressurized tunnel) செயல்படுகிறது. PMA -2 வானது அமெரிக்க விண்வெளி ஓடத்தை நிறுத்தும் வின்முகமாக செயல்படுகிறது.கணு-1 நான்கு நிலையான பேலோடு அலமாரிகள் கொண்டுள்ளது.


அவிநி சேர்மான திட்டம் - 2A
செலுத்து வாகனம் - எண்டோவர் விண்வெளி ஓடம் - Space Shuttle Endeavour (STS-88)
செலுத்து நாள் - 4 டிசம்பர் 1998



தொடரும் ....
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 28th, 2014, 12:43 pm

அவிநியம் பற்றிய அறிய தகவல்கள் படங்களுடன் அருமை , முற்றிலும் அறியாத தகவல் :-gd :-gd :-gd :-gd
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 28th, 2014, 11:16 pm

இதைப் பற்றி பொதுவாக அறிந்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை நான் அறிந்திருக்கவில்லை..

மிக்க நன்றி .இன்னும் நிறைய தாருங்கள் ...

படங்களும் அதற்கான விளக்கங்கள் அதன் மீது வைக்கும்போது வருவது இன்னும் சிறப்பு...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 45 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]