[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இதயத்துடிப்பை அறியும் CARDIOPAD கருவி (VIDEO) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
ஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.

இதயத்துடிப்பை அறியும் CARDIOPAD கருவி (VIDEO)

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூலை 2nd, 2014, 12:53 am

phpBB [video]


கிராம புறங்களில் உள்ள நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட டப்ளட் கருவியை கமரூனைச் சேர்ந்த இளம் விஞ்ஞானியொருவர் உருவாக்கியுள்ளார்.

நோயாளரின் இதயப் பகுதியில் இந்தக் கருவியை வைத்து இதயத்துடிப்பை அறிய முடியும். கம்பித் தொடர்பற்ற இணைப்பின் மூலம் வைத்தியர் தான் இருக்குமிடத்திலிருந்து குறித்த நோயாளரின் இதயத் துடிப்பு பற்றிய விபரங்களை ஆராய முடியும்.

‘கார்டியோ பாட்’ என அழைக்கப்படும் இந்தக் கருவியை 22 வயது நிரம்பிய ஆதர் சாங் என்ற இளம் விஞ்ஞானி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளார். இவ்வாறான 20 கருவிகளைத் தான் தயாரித்திருப்பதாகவும் தன்னுடன் பல பொறியியலாளர்கள் இணைந்து மேலும் பல கருவிகளைத் தயாரித்து அவற்றை வைத்தியசாலைகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் ஆதர் சாங் கூறியுள்ளார்.

கமரூனில் 10000 நோயாளருக்கு இரண்டு வைத்தியர்கள் என்ற வீதத்தில் பற்றாக்குறை காணப்படுகின்றது. கிராமப் புறங்களில் வைத்தியர்களின் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக அமையும். கமரூனின் சனத்தொகையில் அரைப்பகுதிக்கு மேற்பட்டவர்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதற்கட்டமாக கமரூனின் தலைநகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பங்கோமோ என்ற கிராமத்திலுள்ள வைத்திசாலையிலேயே குறித்த கருவியை வழங்கியிருப்பதாக இளம் கண்டுபிடிப்பாளர் ஆதர் சாங் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவியின் மூலம் தலைநகருக்குச் செல்லாமல் கிராமங்களிலிருந்தவாறே இருதய கோளாறுக்குச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Return to விழியம் (Video)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 21 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron