[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சைக்கிள் பாதி மோட்டார் பாதி : புதிய வகை வாகனம் (VIDEO) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
ஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.

சைக்கிள் பாதி மோட்டார் பாதி : புதிய வகை வாகனம் (VIDEO)

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூலை 1st, 2014, 11:24 pm

phpBB [video]


போக்குவரத்து என்பது நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஒன்றிப்போனதொரு விடயம். போக்குவரத்து சாதனங்களின் கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றன. போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பால் சுற்றாடல் பிரச்சினையும் ஏற்படுகிறது.

இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது புதியதொரு வாகனம். இதற்கு எல்ஃப் எனப் பெயரிட்டுள்ளனர் கண்டுபிடிப்பாளர்கள். மனிதனின் சக்தியையும் இயந்திரத்தின் சக்தியையும் ஒருங்கே பயன்படுத்தி ஓடக்கூடிய வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒருபகுதி சைக்கிள் ஒரு பகுதி இலத்திரனியல் என்று இதனைக் கூறமுடியும். வாகனத்தை சமப்படுத்துவதற்கு கியர் அமைக்கப்பட்டிருப்பதுடன் கால்களால் மிதிப்பதன் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரத்தைக் கொண்டும் இந்த வாகனம் இயங்குகிறது.

சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இது நிலையானதொரு போக்குவரத்து சாதனமாகக் காணப்படும் என்கிறார் இதனைக் கண்டுபிடித்த ரொப் கொட்டர். இதனைத் தயாரிப்பதற்கான செலவு மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் குறைந்தளவு காபனீரொட்சைட்டே இதனால் வெளியிடப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாகனம் மெதுவாகச் சென்று வாகன நெரிசலை ஏற்படுத்திவிடும் என்ற கவலையில்லை. எல்ஃப் வாகனம் மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்லக் கூடியதுடன் 350 பவுண்ட் எடையுள்ள பொருட்களையும் இதில் கொண்டு செல்ல முடியும் என்கிறார் ரொப் கொட்டர்.

இதனை செலுத்துபவர் களைப்படைந்திருப்பதாக உணர்ந்தால் கால் மிதிகளைப் பயன்படுத்தாமல் மோட்டாரின் சக்தியை பயன்படுத்தி 17 மைல்களுக்குப் பயணிக்க முடியும். கடந்த 2 வருடங்களில் 400 எல்ஃப் ரக வாகனங்கள் 7 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Return to விழியம் (Video)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 11 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron