[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
திசுவாழை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

திசுவாழை

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:25 pm

நிறைவான மகசூல் தரும் திசுவாழை
திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடி செய்தால் நிறைவான மகசூலும், கூடுதல் லாபமும் பெற முடியும் என தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருநெல்வேலி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திசு வளர்ப்பு: தாவரத்தின் உடல் செல்லில் இருந்து உருவாக்கப்படும் அடுத்த தலைமுறை தந்தை, தாயின் குணாதிசியங்களை 100 சதவீதம் பெற்றிருக்கும் வகையிலான இனப்பெருக்க முறைதான் திசு வளர்ப்பு முறையாகும். இந்த திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடிக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
பருவம்: ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்து முடித்துவிட வேண்டும். ஜனவரி முதல் மே மாத காலத்துக்குள் நடும்போது நோய் தாக்குதல் அதிகமாகி கன்றின் வளர்ச்சி குன்றிவிடும். மேலும், 5 மாதத்திலேயே குலை தள்ளிவிடும் என்பதால் ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் திசு வாழைக் கன்றுகளை நடவு செய்யக் கூடாது.
கன்றுகள் தேர்வு: 5 முதல் 6 இலைகள் கொண்ட 40 செ.மீ. உயரமுள்ள, 10 செ.மீ தடிமனுள்ள நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரகங்கள்: கிராண்ட் நயன், நேந்திரன், குவிண்டால் நேந்திரன், செவ்வாழை ஆகிய ரகங்களில் கிராண்ட் நயன் பிரதான ரகமாக உள்ளது.
நடவு: வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில் ஒன்றரை கனஅடி அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிக்கு 5 கிலோ தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து இட வேண்டும். வேப்பம் புண்ணாக்கு 500 கிராம், பியூரடான் குருணை 20 கிராம் இட்டுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 1,200 கன்றுகள் தேவைப்படும்.
நீர்ப் பாசனம்: சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது மிகவும் சிறந்தது. தோட்டக்கலைத் துறை மூலம் இந்த வசதி செய்துதர சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. நடவு செய்த நாள் முதல் தினமும் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை மண்ணின் தன்மை, தட்பவெப்பநிலையைப் பொருத்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒரு வாழைக்கு நாளொன்றுக்கு 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நீரில் எளிதில் கரையும் ரசாயன உரங்களை ஒரு வாழைக்கு 200:30:300 கிராம் என்ற அடிப்படையில் தழை, மணி, சாம்பல் சத்துகளை 5 நாள்கள் இடைவெளியில் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
30 கிராம் மணிச்சத்தை மட்டும் அடியுரமாக, நடவு செய்த மூன்றாம் மாதமே இட வேண்டும்.
வாழையைத் தாக்கும் பூச்சி நோய்த் தாக்குதல்களுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரைப்படி தேவைக்கேற்ப ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
Image
அறுவடை: நன்கு பராமரிக்கப்பட்ட கிராண்ட் நயன் திசு வாழையில் நடவு செய்த 11 மாதங்களில் முதல் அறுவடையும், முதல் மறுதாம்பில் 10ஆவது மாதத்திலும், அடுத்த மறுதாம்பில் 9ஆவது மாதத்திலும் அறுவடைகளை மேற்கொள்ளலாம். 30 மாதங்களில் மூன்று அறுவடை செய்யலாம்.
நன்கு பராமரிக்கப்பட்ட வயலில் ஏக்கருக்கு 47 டன் வரை மகசூல் பெறலாம். அனைத்து ரகங்களிலும் அதிக மகசூல் கிடைப்பதுடன் சீரான முதல்தர பழங்கள் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வந்து பலன் தரும்.
அரசு மானியம்: தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் மூலம் நடவுக்கு பிந்தைய மானியமாக ஹெக்டேருக்கு 3 ஆயிரம் கன்றுகளுக்கு ரூ.31,200 மானியமாக வழங்கப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.12,480 கிடைக்கும். திசு வாழைக் கன்றுகள் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனத்தில் பெற்று நடவு செய்திருக்க வேண்டும்.
சிறப்புகள்: பழங்கள் அதிக நாள்களுக்கு கெடாமல் இருக்கும். சீரான முதிர்ச்சி. ஒரே சமயத்தில் அறுவடை செய்ய இயலும். வலுவான தண்டுப்பகுதியைக் கொண்டிருப்பதால் காற்றின் வேகத்தை தாங்கும் சக்தி கொண்டது. தாயின் குணாதிசயங்களை அப்படியே கொண்டிருப்பதால் தரமான பழங்களையும், உயர்மகசூலையும் பெற முடியும். கிராண்ட் நயன் ரகங்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ளது.
மானியம் பெற தேவையானவை: நிலத்தின் கணினி பட்டா, திசு வாழை நடவு செய்த பரப்பு குறித்த அடங்கல், திசு வாழைக் கன்று கிரயப் பட்டியல், முகவரி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வயலில் விவசாயி நின்று எடுத்த புகைப்படம், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கிப் பதிவு செய்து மானியம் பெறலாம்.
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: திசுவாழை

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » ஜூன் 26th, 2014, 6:36 pm

தகவலுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 61 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]