[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தீக்குச்சி மரம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

தீக்குச்சி மரம்

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:20 pm

தீக்குச்சி மரம் தீயா வருமானம்:
என் friend ஒரு விவசாயி அவன் கிட்ட சொன்னேன் பெருமையா
எங்க ஊரு காரியாபட்டில 8 ஏக்கர் இடம் கிடக்கு…
அப்படியா நிலத்துல என்ன போட்டுயிருக்கீங்கே?
சும்மாதான் போட்டுயிருக்கோம் ? விவசாயம்யெல்லாம் யார் இந்த காலத்துல யார் பண்னுறது?
குடிக்கவே தண்ணியில்ல, இதுல விவசாயம் வேறயா?
அப்புறம் நாங்களே சென்னையில இருக்கோம் எப்படி பண்னுறது?
நான் ஒரு idea சொல்லுறேன் பன்னுறியா?
சொல்லுபா துட்டு வரமாதிரிய இருக்குமா?
ஆமாம் பா, அயிலை மரம் அதாவது பீயன் (pecan) மரம் போடு
அப்படினா?
இன்னும் தெளிவா சொல்லனுமா தீக்குச்சி மரம்
தீக்குச்சி மரத்தின் (Pecan Tree) சிறப்பு பண்புகள்:

1. கரடு முரடான நிலத்துல கூட வளரரும்,
2. தண்ணீ ஊத்த வேண்டாம்,
3. உரம் போட வேண்டாம்,
4.களை எடுக்க வேண்டாம்.
5.ஆடு, மாடு தின்னாது.
6.மழை இல்லாவிடினும் தாங்கிவளரும் சக்திகொண்டது.

வருடத்திற்கு இருமுறை கோழிக்கழிவு மாதிரியான இயற்கை உரங்களை வைத்தால் வளர்ச்சி வேகமாய் இருக்குமாம். மற்றொரு முக்கியமான பராமரிப்பு இதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டிவிட வேண்டுமாம். அப்போதுதான் மரம் உயரமாக நெடுநெடுவென வளருமென்கிறார்கள்.
அட சூப்பரு…
ஆறில் இருந்து ஏழு வருடத்திற்குள் பனைமர உயரத்திற்கு வளரும் இந்த மரம் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை வரை இருக்கும்…..
Image
நன்கு வளர்ந்த தீக்குச்சி மரங்கள் (அமெரிக்காவில்)
சரி இதை எப்படி காசாக்குவது?…அதாவது காசு .. பணம்…துட்டு … துட்டு… !!!
உங்க ஊருக்கு அருகாமையில் இருக்கிற தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடர்பு கொண்டு சொன்னாலே போதும்…அவர்களே வந்து மரத்தை வெட்டி எடை போட்டு உங்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். ஒரு டன் மரத்திற்கு ரூ.2000 வரை தருகிறார்கள்.
ஒரு ஏக்கர், 400 மரம், 7 வருடம், 16,00,000 (பதினாரு லட்சம்) வரை வருமானம்
ஆச்சர்யமாய் இருக்குல்லெ…ஆம், தீக்குச்சிகள் தயாரிக்கத்தான் இந்த மரம் பயன்படுகிறது.கேரள விவசாயிகள் இதன் அருமையுணர்ந்திருக்கின்றனர்…இப்போ, தமிழகத்திலும் விழிப்புணர்வு வந்திருக்கிறது.
அதிகரித்து வரும் மரத்தேவைக்காக தற்போது தீப்பெட்டி நிறுவனங்களே விவசாயிகளை இந்த மரத்தினை பயிரிடச்ச்சொல்லி பணம் தருகின்றனராம். குடியாத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு செடியையும் கொடுத்து, லோன்,இன்ஸூரன்சு போன்றவைகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனராம்.
இது தொடர்பான தகவல்களை தமிழக அரசின் வனவிரிவாக்க மையங்களிலோ அல்லது தோட்டக்கலை துறையிடமிருந்தோ பெறலாம்.
பசுமைவிகடன் பத்திரிக்கையில் இது பத்தி கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சேலம் மாவட்டம், அக்கரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த திரு..கணேசன் என்கிற விவசாயி இதை வெற்றிகரமாக பயிரிட்டு வருகிறாராம். அவது அலைபேசி எண் 94435 18863. மேலும் தகவலுக்கு அவரை தொடர்பு கொண்டு இது குறித்த விளக்கங்களை பெறலாம்.
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

leave a comment

Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 40 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]