[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பை’ முறை விவசாயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

பை’ முறை விவசாயம்

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:10 pm

இயற்கையானஉணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினைகுழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை நான் இரு குழந்தைகளின்தாயாக சொல்கிறேன் என்கிறார் சித்ரா. ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போதுபார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளைமனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களைஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும்கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில்பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.
Image
இந்தஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல்மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானதுஎன்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்றவீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம். அன்றாடதேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எதுவேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா? கதைசொல்கிறார்களா? இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக்கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப்படுகிறது.
கீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன.காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
மூலிகைச்செடிகள்: நமதுஅன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிகமுக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.
இம்மூலிகைகளைவளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில்பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோஅல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின்காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்.
நன்றி:தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்[/align][/align]
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

leave a comment

Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 24 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron