[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மா மரங்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

மா மரங்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 6:17 pm

Image

‘மா‘ மரங்கள்

மாம்பழம் சுவை மட்டுமல்லாமல் பல்வேறு சத்துக்களையும் கொண்டது. மாம்பழத்தில் “ஏ“, “சி“, மற்றும் “இ“ வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. “மா“ பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது போல் அவற்றை முறையாக பராமரித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும்.

மாம்பழத்தில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ருமானி, பங்கனப்பள்ளி, காலாப்பாடி, பீத்தர், செந்தூரா, ஜஹாங்கீர், மல்கோவா, இமாயுதீன், அர்கா அன்மால், அர்கா அருணா, அர்கா நீல்கிரன், அர்கா புனீத், அமரப்பள்ளி, பி.கே.எம். 1, பி.கே.எம் 2, பையூர்1, மல்லிகா, சிந்து, ரத்னா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

இவற்றில் மல்லிகா, சிந்து, ரத்னா, பி.கே.எம் 2 போன்ற ரகங்கள் உயர் ரகங்களாகவும், கேசர் மற்றும் அமரப்புள்ளி போன்ற ரகங்கள் சுவை மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்களாகவும் உள்ளன. மல்லிகா மற்றும் சிந்து ரகங்கள் விதையில்லாதது.

பிஞ்சுகள்

மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு விட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

பூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும். அதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகி உள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். மாமர தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழ கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்…

மாமரங்களை மூன்று விதமான தத்துப்பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப்பூச்சியில் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப்பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும். தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சியின் தாக்குதல் மத்திமமாக

இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் “பெவேரியா பேஸியானா“ என்ற உயர்ரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப்பூச்சிகள் அழியும். தாக்குதல் அதிகமாக இருப்பின், “அசிபேட் 75 எஸ்.பி“ ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “கார்பரைல் 50 டபிள்யு.பி“ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து 2–வது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.

பிணைக்கும் புழுகள் எச்சத்தால், மாமரங்களின் பூக்களில் கூடுகள் கட்டி வலைபோல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும். பிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த “பேசலோன் 35 இ.சி“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “புரப்னோபாஸ்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

இலை கொப்புளம்

இலை கொப்புளம் மற்றும் அசுவிணியை கட்டுப்படுத்த “டைமித்தோயேட்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

மாமர தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம். மேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை அழிக்கும்.

மாமரத்தில் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும். இதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனக்கவர்ச்சிப் பொறியால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும்.

தகவல்:– விஜயகுமார், பூச்சியியல் துறை வல்லுனர், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம்

நன்றி: தினத்தந்தி
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

leave a comment

Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 18 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron