[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சேந்தமங்கலத்தில் கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

சேந்தமங்கலத்தில் கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 1:20 pm

Image

குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சேந்தமங்கலத்தில் விளைவித்து ஒரு விவசாயி சாதனை படைத்துள்ளார். இயற்கை உரத்தை மட்டுமே முழுமையாகப் பயன்படுத்துவதால், இவரது விளை பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

குளிர் பிரதேச பயிர்கள்

கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவை ஓசூர், பெங்களூரு போன்ற குளிர் அதிகமுள்ள பகுதிகளில் விளையும் பயிர்கள். மற்ற பகுதிகளில் கத்திரி, வெண்டை காய்கறிகள் மட்டுமே விளையும். இந்த நிலையில், நாமக்கல்

மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள பச்சுடையாம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து சாதனை படைத்துள்ளார். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி, இவற்றை சாகுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறியது:

இரு தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். காலச் சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்வதில் எனது தந்தை ராமசாமி ஆர்வம்காட்டி வந்தார். அதன்படி, எங்களுக்கு சொந்தமான நிலத்தில் கேரட் உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கினோம். ஊட்டி, கொடைக்கானல், ஓசூர், பெங்களூர் பகுதிகளில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவற்றைப் பயிரிட்டோம்.

20 ஆண்டாக சாகுபடி

இந்தப் பயிர்கள் ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் விளையும். அதற்கேற்ற குளிர் சீசன் அங்கு நிலவும். நாங்கள் குளிர் காலத்தில் இந்தப் பயிர்களை விளைவித்தோம். நல்ல விளைச்சல் கிடைத்தது. கடந்த 20 ஆண்டுகளாக குளிர் சீசன் சமயத்தில் இவற்றைப் பயிரிட்டு வருகிறோம். மற்ற மாதங்களில் கீரை உள்ளிட்ட வேறு பயிர்களை சாகுபடி செய்வோம்.

நாங்கள் விவசாயம் தொடர்பாக கல்வி பயிலவில்லை.

தந்தையிடம் கற்ற அனுபவப் பாடம் மூலமே பயிர் சாகுபடி செய்து வருகிறோம். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது வந்து, கேரட், பீட்ரூட் விளைச்சலைப் பார்வையிடுவர். பயிர் விளைச்சலுக்கு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில்லை. மாட்டுச் சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.இங்கு விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட் ஆகியவை உள்ளூர் சந்தைகளி்ல் விற்பனை செய்யப்படும். இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால், மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

பொதுவாக கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற பயிர்கள் வளர மிகவும் குளிர்ந்த சூழலும், அதிக வெப்பமில்லாத நிலப்பகுதியும் அவசியம். சமவெளியில் இதற்கு சாத்தியமில்லை. ஆனால், சமவெளியில் இவற்றை சாகுபடி செய்தது வியப்புக்குரியது. விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில், காலத்திற்கேற்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயத்துக்கு மக்கள்ஆதரவு அதிகரித்துள்ளது.
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: சேந்தமங்கலத்தில் கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூன் 9th, 2014, 2:01 pm

விவசாயி சிவக்குமார் அவர்களின் சாதனை போற்றபடவேண்டியது , நல்ல தகவல் கார்த்தி அவர்களே தொடர்ந்து இதுபோல விவசாய தகவல்களை தாருங்கள் நாங்கள் ஆவலுடன் உள்ளோம் அறிந்துகொள்வதற்கு .... :-clp :-clp :-clp
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron