[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

தமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 30th, 2014, 3:11 pm

Image
அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க் தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.

நன்றி-தினமலர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: தமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 31st, 2014, 8:35 pm

வரவேற்க வேண்டிய விடயம். அதேபோல் தமிழில் படிப்பவர்களுக்கு தான் அரசு வேலை என்று சொல்ல மட்டும் எந்த அரசுக்கும் மனம் வரமாட்டேங்குதே :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 31st, 2014, 10:52 pm

இதொரு நல்ல தொடக்கமாக தொடக்கமாக அமையும் என நினைக்கிறேன்..
ஆனால் இதோடு நின்று விட கூடாது.பல சிறந்த நாடுகளில் தாய் வழிக் கல்வியாலே அந்நாடும் நாட்டு மக்களும் பெருமை பெற்றுள்ளது என்பது வரலாறு...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 50 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron