[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை!!!!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

பாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை!!!!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஏப்ரல் 22nd, 2014, 3:20 pm



இந்த பணியிடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

நாட்டில் உள்ள அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் 2,234 புரபஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 235 இடங்களும், பழங்குடியினருக்கு 439 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 405 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 758 இடங்களும் உள்ளன. இதுதவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு 60 இடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-4-1984-க்கு முன்னதாகவோ அல்லது 1-4-1993-க்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.

எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையிலும் விரிவாக எழுதும் முறையிலும் எழுத்துத் தேர்வு இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். இங்கிலீஷ் லாங்வேஜ் (கிராமர், வெகாபுலரி, காம்ப்ரிஹென்சன்), ஜெனரல் அவேர்னெஸ், மார்க்கெட்டிங் அண்ட் கம்ப்யூட்டர்ஸ், டேட்டா அனாலிசிஸ் அண்ட் இன்டர்பிரட்டேஷன், ரீசனிங் (உயர்நிலை) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் வழங்கப்படும். விரிவாக விடை எழுதும் தேர்வுக்கு (டிஸ்கிரிப்டிவ் டெஸ்ட்) 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் 75-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அத்துடன், குரூப் டிஸ்கஷனிலும் இண்டர்வியூவிலும் பெற்ற மதிப்பெண்கள் 25-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி புரபஷனரி அதிகாரிகள் பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வை எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?
பொதுப் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் தேர்வை பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் நான்கு முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஏழு முறை வரை இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஓ.பி.சி. பிரிவினரும் அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும் ஏழு முறை வரை இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் அதே பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.

பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்குப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து, செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேதி: 07.04.2014 முதல் 25.04.2014 வரை
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.04.2014
நேரடியாக கட்டணம் செலுத்த கடைசி தேதி: 28-04-2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2014
விவரங்களுக்கு: http://www.sbi.co.in





India Government mint நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் டெக்னீஷியன்

கல்வித் தகுதி: ஃபிட்டர், மில்ரைட், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், டர்னர், மெஷினிஸ்ட், கார்பெண்டர், மோட்டார் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2014
விவரங்களுக்கு: http://igmhyderabad.spmcil.com





நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நிர்வாக அதிகாரி - 21

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.04.2014
விவரங்களுக்கு: http://www.newindia.co.in





ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் - 83

கல்வித் தகுதி: ஃபிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர், பாய்லர் அட்டன்டண்ட் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2014
விவரங்களுக்கு: http:www.hnlonline.com


நன்றி:புதியதலைமுறை
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: பாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை!!!!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 22nd, 2014, 3:39 pm

படிப்பை முடித்த கையேடு பணியை தேட ஆரம்பித்தவர்களுக்கு சிறந்த பயனுள்ள பதிவு ராஜா :-clp :-clp
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை!!!!!

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 23rd, 2014, 11:05 pm

எனக்கும் என் நண்பர்களுக்கும் பயனுள்ள தகவல்....

நானும் எல்லாத் தேர்வுகளும் எழுதிக்கிட்டே தான் இருக்கேன்....ஆனால்...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 62 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron