[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தங்கம் இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் குறைய வாய்ப்பு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.

தங்கம் இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் குறைய வாய்ப்பு :

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 17th, 2013, 1:35 am

Image

புது­டில்லி: தங்கம் இறக்­கு­மதி மீதுள்ள கடும் கட்­டுப்­பா­டுகள் படிப்­ப­டி­ யாக குறைய வாய்ப்­புள்­ளது என, ஆய்­வா­ளர்­களும், சந்­தை­யா­ளர்­களும் தெரி­வித்­துள்­ளனர்.நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரித்­த­தை­ய­டுத்தும், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு கடு­மை­யாக சரி­வ­டைந்­த­தை­ய­டுத்தும், மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், தங்கம், வெள்ளி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்கள் இறக்­கு­ம­திக்கு கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்­த­துடன், சுங்க வரி­யையும் அதி­க­ரித்­தன.நடப்பு கணக்கு பற்றாக்குறைஇதனால், தங்கம் உள்­ளிட்ட மதிப்பு மிகு உலோ­கங்­களின் இறக்­கு­மதி சரி­வ­டைந்­த­துடன், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையும் கணி­ச­மாக குறைந்­துள்­ளது.ரூபாயின் மதிப்பும் உயரத் துவங்­கி­யுள்­ளது.
குறிப்­பாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, வர­லாறு காணாத அள­விற்கு, 68.81ஆக மிகவும் சரி­வ­டைந்­து­இருந்­தது. இது, தற்­போது, 10 சத­வீ­தத்­திற்கும் மேல் வலு­வ­டைந்து, 61.75 ஆக உயர்ந்­துள்­ளது.மேலும், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்­று­ம­தியும் அதி­க­ரித்து வரு­கி­றது. இது போன்ற கார­ணங்­களால், தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டுகள் படிப்­ப­டி­யாக குறைக்­கப்­படும் என, மத்­திய நிதி அமைச்­ச­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.இது குறித்து, நடப்பு மாத இறு­தியில் நடை­பெற உள்ள மத்­திய உயர்­மட்­டக்­குழு கூட்­டத்தில் முடிவு எடுக்­கப்­படும் என, தெரி­ய­வந்­துள்­ளது.
கடந்த 2012–13ம் நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் (ஜி.டீ.பி.,), 4.8 சத­வீதம் அல்­லது 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது.அவ்­வாண்டில், நாட்டின் மொத்த இறக்­கு­ம­தியில், தங்கம் இறக்­கு­ம­திக்­காக, 5,680 கோடி டாலர் செல­வி­டப்­பட்­டுஉள்­ளது. இதனால், நாட்டின் அன்­னியச் செலா­வணி அதி­க­ளவில் வெளியே­றி­யது.தங்கம் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்கள் மீதான இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரை­யி­லான எட்டு மாத காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகி­ய­வற்றின் இறக்­கு­மதி, 2,550 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது.இறக்குமதி வரிஇது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், 3,350 கோடி டால­ராக அதி­க­ரித்து காணப்­பட்­டது. சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், இவற்றின் இறக்­கு­மதி மதிப்பு, 120 கோடி டால­ராக மிகவும் வீழ்ச்சி கண்­டுள்­ளது.இந்­நி­லையில், நடப்பு 2013–14ம் நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 6,000 கோடி டால­ராக குறையும் என, மத்­திய நிதி அமைச்சர் சிதம்­பரம் தெரி­வித்­தி­ருந்தார்.
ரிசர்வ் வங்­கியின் கவர்னர், ரகுராம் ராஜன், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 5,600 கோடி டால­ராக குறைய வாய்ப்­புஉள்­ளது என்று குறிப்­பிட்­டு ­இருந்தார். இது, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், கிட்­டத்­தட்ட 3 சத­வீ­த­மாகும்.நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை குறைக்கும் வகையில், மத்­திய அரசு, கடந்த இரண்டு ஆண்­டு­களில், தங்கம் மீதான இறக்­கு­மதி வரியை, 2 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தது. மேலும், தங்க ஆப­ர­ணங்கள் மீதான இறக்­கு­மதி வரி, 15 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது.
ரிசர்வ் வங்கிஇச்­சூழ்­நி­லையில், ரிசர்வ் வங்கி, தங்க காசுகள், தங்கப் பதக்­கங்கள் போன்­ற­வற்றின் இறக்­கு­ம­திக்கு தடை­வி­தித்­த­துடன், இறக்­கு­மதி செய்­யப்­படும், தங்­கத்தில், 20 சத­வீதம் மறு ஏற்­று­மதி செய்­யப்­படும் வகையில், வர்த்­த­கர்கள் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என்று அறி­வித்­தது.தங்கம் மீதான இறக்­கு­மதி கட்­டுப்­பா­டு­களால், தங்கம் கடத்தல் அதி­க­ரித்­துள்­ள­துடன், அர­சுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.தற்­போது, நிலை­மைகள் சாத­க­மாக மாறி உள்­ள­துடன், நடப்பு நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையும் கணி­ச­மாக குறையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.எனவே, மத்­திய அரசு, தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டு­ களை தளர்வு செய்யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

நன்றி தினமலர்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 27 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]