[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • சலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!
Page 1 of 1

சலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 30th, 2014, 1:40 pm
by வேட்டையன்
Image


இந்தியா விமான போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களாகவே கொதிக்கும் எண்ணெயில் தண்ணிர் தெளித்தது போலவே இருக்கிறது. இதற்கு காரணம் விமான நிறுவனங்கள் தரும் அதிரடியான சலுகைகள் தான். ஜனவரி மாதத்தில் சன் டிவி புகழ் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்கிய இந்த திட்டங்களில் இப்போது அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது என்றே சொல்லாம். மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவின் மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே இத்தகைய சலுகைகளை வழங்குகிறது போல.

முன்று நாள் சலுகை

ஏப்ரல் 16 முதல் 18 வரை ஒரு சிறப்பு சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 10 செல்ல டிக்கெட்களை பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்கள்

இந்த சலுகை இந்நியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், அவுரங்காபாத், கோவா, இந்தூர், மும்பை, புனே, சூரத் ஆகிய பகுதிகளில் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த முன்று மாதத்தில் இது 7வது விலை சலுகை என்பது குறிப்பிடதக்கது.

வாடிக்கையாளர்

இந்நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரம் பெறுக்கவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், விரைவில் பிரபலம் ஆகவும் இத்தகையை சலுகைகளை வழங்கி மக்களை கவர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (குங்குமம், தினகரன் பத்திரிக்கைகளை பிரபலமாக்க மக்களுக்கு சில இலவசங்கள் வழங்கிய சன் குழுமம், இப்போது தனது விமான சேவையிலும் இத்தகையை சலுகைகளை வழங்குகிறது.)

சேவையில் மகா மட்டம்…

சலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வது மிகவும் சுலபம், ஆனால் வாடிக்கையாளர் கொடுத்த காசுக்கு சிறந்த சேவை அளிக்க தவறிவருக்கிறது ஸ்பைஸ்ஜெட்!! (இலவசங்களை கண்டு ஏமாறும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஐந்து வருட ஆட்சியையும் இத்தகைய இலவசங்களுக்காக இழக்காதிர்கள்.. சிந்திப்பீர்... )


நன்றி-newstig.com

Re: சலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மே 1st, 2014, 12:58 am
by பூச்சரண்
ஆப்பு கண்ணுக்கு தெரியாது அப்படின்னு சொல்வாங்களே அது இதானா ? :o :o :o :o