[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.

‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 4:29 pm

இந்திய ரிசர்வ் வங்கியால்
வெளியிடப்படும் ரூபாய்
நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என
அழைக்கப்படும் பகுதியும், அதில்
மகாத்மா காந்தியின் புகைப்படமும்,
அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும்
எண்ணும் (அதாவது 100, 1000 என)
உள்ளது. அந்த இடத்தில் வங்கிகள்,
அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘
அடிக்கப்படுகிறது. இதனால்
நாளடைவில் அந்த
ஓட்டை பெரிதாகி விடுகிறது.
இது மட்டுமல்லாது இளைஞர்கள்
சிலர் வேண்டுமென்றே ‘ஆர்ட்டின்
படம்‘ வரைகின்றனர். ஒருவர்
பெயரை எழுதி கவிதைகள், காதல்
வசனங்கள் கூட எழுதுகின்றனர்.
இந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும்
ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள்
இடம் பெறுவது பொதுமக்களை முகம்
சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘
பகுதி மாசடைவதால் அந்த ரூபாய்
நோட்டுகளை உண்மை தன்மையை
கண்டுபிடிப்பதிலும் சிக்கல்
எழுகிறது. இதற்கு முடிவு கட்டும்
வகையில் வாடிக்கையாளர்கள்
வங்கிகளில் அளிக்கும் ரூபாய்
நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள்,
பின் அடித்த ஓட்டைகள் இருந்தால்
அந்த நோட்டுகளை வங்கிகள் மீண
¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக்
கூடாது.
அந்த நோட்டுகள்
புழக்கத்திற்கு அனுமதிக்க
தகுதி இல்லாதது. வங்கிகளும்
ரூபாய் நோட்டுகளில் எண்ணால்
எழுதக் கூடாது. இது ரிசர்வ்
வங்கியின் ‘கிளீன் நோட்‘
கொள்கைக்கு எதிரானது.
இவ்வாறு அனைத்து வங்கிகளின்
தலைவர்கள், முதன்மை செயல்
அலுவலர்களுக்கு ரிசர்வ்
வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த
உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல்
செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ்
வங்கி கூறியதாக தகவல்கள்
வெளியானது.
நேற்று விடுமுறை நாள் என்பதால்
இன்று தான் வங்கிகள் திறக்கப்படும்.
எனவே, இன்று முதல் கிறுக்கல்
ரூபாய் நோட்டுகளை வங்கியில்
செலுத்தும்போது அவை மீண்டும்
புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது
என்று தெரிகிறது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர்
கூறுகையில், ‘‘ஏற்கனவே ரிசர்வ்
வங்கி இதுபோன்று அறிவித்ததாக
தகவல்கள் வெளியானது. எனினும்
இந்த திட்டம் எப்போது முதல்
நடைமுறைக்கு வரும் என
வங்கி கிளைகளுக்கு முறையான
தகவல் இல்லை‘‘ என்றனர்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: ‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட த

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 2nd, 2014, 4:36 pm

இது கொய்ப்பமாவே இருக்கு தல... இன்னும் சரியா முடிவு செய்யல. வங்கிகளுக்கு முன்னரே அறிவுருத்திய பின்னும் மெத்தனமாக இருந்தது அவர்கள் குற்றம். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைகள் தான் :-b
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

leave a comment


Return to வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 12 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron