[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் - ஓர் ஆரோக்கிய எச்சரிக்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் - ஓர் ஆரோக்கிய எச்சரிக்கை

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூலை 24th, 2014, 3:18 pm

Image

உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக்கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும் "உணவு மாதிரியான பொருட்கள்" அடிப்படையில் குப்பை என்பதாலும் போதுமான ஊட்டச் சத்துகள் அவற்றில் கிடைப்பது இல்லை. அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து "ஹார்ட் ஹெல்தி (heart healthy)" எனச் சொல்லி விற்று வருகிறார்கள்.

கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது (!). அப்பேர்ப்பட்ட மாய மந்திர பானம் என்ன எனக் கேட்கிறீர்களா? வைட்டமின் வாட்டர் தான். நீரில் சிந்தடிக் வைட்டமின்களையும், ஸ்ப்ளெண்டா மாதிரி செயற்கை சர்க்கரைகளையும், பிரசர்வேடிவ்களையும் கெமிக்கல்களையும் கலந்தால் வைட்டமின் வாட்டர் தயார்!!!!! இதனுடன் சாதா குழாய் நீரால் சந்தையில் போட்டியிட முடியுமா?வைட்டமின், மினரல்களுக்குப் பயன்படும் மூலப் பொருட்கள் பலவும் உடலால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கெமிக்கல் குப்பைகள். அவை பெயரளவுக்குத் தான் வைட்டமின், மினரல்கள். உதாரணமாக நார்ச் சத்து (பைபர்) மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். இன்றைய நாகரிக சமூகத்தின் காலரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வெள்ளை அரிசி, மைதாவில் எல்லாம் நார்ச் சத்து இல்லை. காய்கறிகளை நாம் உண்பதும் இல்லை. அதனால் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் "நார்ச்சத்து மாத்திரை சாப்பிடு" எனச் சொல்லி பெனிபைபர் மாதிரி குப்பைகளை உண்ணச் சொல்லிப் பரிந்துரைப்பார்கள். இப்போது சில ரொட்டி கம்பனிகள் "எங்கள் ரொட்டியில் இரு மடங்கு அதிக நார்ச் சத்து உள்ளது" எனச் சொல்லி விளம்பரம் செய்து வருகின்றன.

பெனிபைபரிலும், இம்மாதிரி ரொட்டிகளிலும், சீரியல்களிலும் செயற்கையாகச் சேர்க்கப்படும் நார்ச் சத்து செல்லுலோஸ் எனும் வகை நார்ச் சத்து. செல்லுலோஸ் எளிதில் நீரில் கரைந்து விடும் என்பதால் இது நார்ச் சத்தாகப் பயன்படுகிறது. அத்துடன் கலர்களையும் கெமிக்கல்களையும் செயற்கை இனிப்புகளையும் கலந்தால் பைபர் சப்ளிமெண்ட் ரெடி. ஆனால் செல்லுலோஸ் எதில் இருந்து எடுக்கப்படுகிறது? பஞ்சு, மரப் பட்டை முதாலானவற்றில் இருந்து. காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்தும் செல்லுலோஸை எடுக்கலாம். ஆனால் அதிக விலை காரணமாகக் கம்பனிகள் அத்தவற்றைச் செய்வது கிடையாது. நீங்கள் உண்ணும் பைபர் சப்ளிமெண்ட் மரப் பட்டையில் இருந்தும், பஞ்சில் இருந்தும் வந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.

இப்பேர்ப்பட்ட செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி படைத்த ஒரே உயிரினம் மாடுகளும் எருமைகளும் மட்டுமே. அவற்றுக்கு ஆறு வயிறுகள் இருப்பதால் செல்லுலோஸை ஆறு வயிறுகளிலும், மறுபடி மீண்டும் வாய்க்கும் கொண்டு வந்து மணிக்கணக்கில் அசைபோட்டும் கஷ்டப்பட்டு அவற்றால் ஜீரணம் செய்ய இயலும். ஆனால் செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி மனிதனுக்கு மட்டுமல்ல வேறு எந்த உயிர்னத்துக்கும் கிடையாது. எப்.டி.ஏ (அமெரிக்க உணவுப் பொருள் கழகம்) வலைத் தளத் தகவல்படி "மனிதர்கள் உண்ணும் 100% செல்லுலோஸும் அவர்களது மலம் வழியாக அடுத்த நாலு நாட்களில் வெளிவந்துவிடும். அவை உடலால் கிரகிக்கப்படுவது இல்லை..."

இப்படி வயிற்றின் வழியாக முழுமையாக வெளிவந்தாலும் செல்லுலோஸ் மலத்தின் அளவைக் கூட்டுவதால் நிறைய மலம் கழிகிறது என வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பைபர் சப்ளிமெண்ட் விற்பனையும் தூள் பறக்கும்!!!!
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் - ஓர் ஆரோக்கிய எச்சரிக்கை

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » ஜூலை 26th, 2014, 6:09 pm

பகிர்வுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 50 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron