[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூன் 30th, 2014, 6:57 pm

Image

பெயர் : முள்ளு சீதா
தாவரவியல் பெயர் : Annona muricata
மற்ற பெயர்கள் : Graviola
Soursop,
Brazilian Paw Paw,
Guanabana.
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் “ஃக்ரவயோலா” என்று அழைக்கப்படும் முள்ளு சீதா. அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.

Image

இருப்பினும் நவீன மருத்துவ முறையில் “கிமோ தெரப்பி” என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள “முள்ளு சீதா” நன்று என்றே தோன்றுகிறது.

Image

நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா
இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.

Image

வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா

தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.

Image

பதப்படுத்திய ஃக்ரேவையோலா ‘டீ’
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 54 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron