[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில யோசனைகள்.. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில யோசனைகள்..

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜூன் 17th, 2014, 1:06 am

Image


சருமத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? குறிப்பாக இத்தகைய தழும்புகளானது பெண்களுக்கு தான் முகத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும்.

மேலும் ஆண்களுக்கு காரை துடைக்கும் போது என்ஜினில் கையை சுட்டுக் கொண்டு தழும்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது. சரி, அவற்றையெல்லாம் விடுங்கள், குறிப்பாக பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். இங்கு அந்த தழும்புகளை போக்கும் சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.

வெந்தயம்

தழும்புகளைப் போக்குவதற்கு உள்ள சிறந்த பொருட்களுள் ஒன்று தான் வெந்தயம். அதற்கு வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து முகத்திற்கு தடவி, உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இன்னும் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், வெந்தய பேஸ்ட்டை இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி ஜூஸ்

அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவ ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.


நன்றி-தினமணி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில யோசனைகள்..

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 17th, 2014, 10:57 am

என்னாங்க பூவன் சமையலுக்கு பயன்படுத்துவதை எல்லாம் மூஞ்சிக்கு போடா சொல்லுறீங்க :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 59 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]