[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் உணவுகள்!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் உணவுகள்!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஏப்ரல் 6th, 2014, 6:54 pm

Image


இதுவரை இனிப்பு உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை ஒரு கட்டு கட்டியிருந்தால், உங்கள் உடலை மீண்டும் ரீ-சார்ஜ் செய்து நச்சுத் தன்மையை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு உதவி புரிந்திட சில சிறந்த உணவுகள் இருக்கிறது.

நீங்கள் சாப்பிடுவதை பொறுத்து அமைவது தான் உங்கள் உடலும், உங்கள் அழகும், என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு வந்திருந்தாலும் கூட, அதனால் ஏற்படும் தாக்கங்களை இவ்வகை உணவுகள் நிவர்த்தி செய்யும்.

இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும் போது, உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள்.

முட்டை
புரதம், வைட்டமின் மற்றும் கனிம பொருட்கள் வளமையாக நிறைந்துள்ள முட்டை, உங்கள் செறிவூட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எடையை பராமரித்து, மூளை வளர்ச்சிக்கு உதவி புரிந்து, கண் பார்வையை வலிமையாக்கி, இரத்த உறைதலை கையாண்டு, பிறவிக் குறை மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும் என்று உணவியல் வல்லுநர் பூஜா மகிஜா கூறுகிறார்.

ஸ்ட்ராபெர்ரி
சுவைமிக்க ஸ்ட்ராபெர்ரி பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையிலும் அருமையாக இருக்கும். ஆண்டி-ஆக்சிடன்ட் அடங்கியுள்ள இந்த பழம் இதயகுழலிய நன்மைகளை அளித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி (அதனால் சர்க்கரை நோய்க்கு நல்லது), புற்றுநோயை எதிர்த்து போராடும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியமும் நார்ச்சத்தும் வளமையாக இருக்கும். இரத்தக் கொதிப்பை குறைத்து, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைத்து, புற்று நோய் வளர்ச்சியை தடுக்கும் வாழைப்பழம்.

பூசணிக்காய்
பூசணிக்காயின் விதைகள் மற்றும் தசை என இரண்டுமே பல பயன்களை அளிக்கிறது. இதிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு வளமையாக உள்ளது. எலும்பு மெலிதல் நோய், முன்னிற்குஞ்சுரப்பி பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவைகளை குணப்படுத்தவும் புற்று நோயை
தவிர்க்கவும் பூசணிக்காயின் விதைகள் உதவுகிறது.

ஆரஞ்சு
ஆரஞ்சு என்றாலே வைட்டமின் சி வளமையாக உள்ள ஒரு பழம் என்பதை தான் அனைவரும் அறிவோம். ஆனால் ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், இரத்தக்கொதிப்பு மற்றும் கீல்வாதம் போன்றவைகளை கையாள இந்த எளிய பழம் உதவி புரிவது பல பேருக்கு தெரியாது. கொலஸ்ட்ராலை குறைக்கவும் சர்க்கரை நோயை தடுக்கவும் கூட இது உதவுகிறது.

வால்நட்
மூளையை போல் காட்சியளிக்கும் இந்த நட்ஸ், உங்கள் மூளைக்கு மிகவும் நல்லதாகும். உங்கள் இதயம், மனநிலை, எலும்பு மற்றும் உடல் எடை குறைப்பிற்கு இது பல மாயங்களை நிகழ்த்தும் என்கிறார் பூஜா. தூக்கமின்மை, பித்தக்கற்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் போன்றவைகளை எதிர்த்து போராடவும் இது உதவுகிறது.

தயிர்
நல்ல பாக்டீரியா என்றும் இருக்கத் தான் செய்கிறது. அது தயிரில் அளவுக்கு அதிகமாக உள்ளது. கூடுதலாக, அதில் முனைப்புடனான நுண்ணுயிர்கள் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, லாக்டோஸ் சகியாமை, குடல் புற்று நோய் மற்றும் குடல் பகுதி நோய்கள் போன்ற இரையக குடலிய பிரச்சனைகளுக்கு உதவிடும். மேலும் எலும்பு மெலிதல் நோயை தடுத்து இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.

கீரை
ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவான கீரையில், இரும்புச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் பைடோந்யூட்ரியன்ட்ஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளது. இது உங்கள் இதயத்தை பாதுகாத்து, இரையக குடலிய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளையை இளமையாகவும் முனைப்புடனும் வைத்திருக்கும்.

ஓட்ஸ்
அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு மற்றும் மலங்கழித்தலை சீராக வைத்திருக்கவும், புற்றுநோய் உண்டாகும் இடர்பாட்டை குறைக்கவும், உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவும் அதிக அளவிலான ஓட்ஸ் உண்ணுங்கள்.

ஆளி விதை
ஆளி விதையில் வளமையான அளவில் நார்ச்சத்து, ஒமேகா 3 உள்ளது. மேலும் இது ஒரு இயற்கை மலமிளக்கியாகும். மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்தது, சர்க்கரை நோய்க்கு எதிராக பாதுகாப்பை அளிக்கும். அதற்கு காரணம் இது ஒரு இன்சுலின் எதிர்ப்பாற்றலாக செயல்படுவதே.

கோதுமை புல்
கோதுமை புல் என்பது பச்சை பசுமையான உணவாகும். இது உங்கள் ஈரலை சுத்தப்படுத்தி, ஹீமோக்லோபின் உற்பத்தியை ஊக்குவித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புண்களை ஆற வைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும்.

சால்மன்
சால்மன் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளதால், இது மிகச்சிறந்த உணவாக விளங்கும். இது இதய நோய்களுக்கு போராடி, புற்று நோய் இடர்பாட்டை குறைத்து, மூட்டுகளை பாதுகாத்து, மனநிலை மற்றும் நினைவுறலை மேம்படுத்தி, வறண்ட கண்கள் போன்ற கண் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

தக்காளி
லைசோபீன் என்ற ஆன்டி-ஆக்சிடண்ட் இருப்பதால் தான் தக்காளி சிகப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. இது இயற்கையாகவே நம் உடலில் இருப்பதில்லை. அதனால் உணவுகளில் இருந்து தான் நம் உடலுக்கு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.


நன்றி:போல்ட் ஸ்கை
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் உணவுகள்!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 7th, 2014, 10:56 am

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நன்மைகள் பற்றிய கட்டுரை அருமை :-clp :-clp

பகிர்வுக்கு நன்றி :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 84 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]