[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
செல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.

உலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 16th, 2014, 9:22 am

Image

இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும் கூகுள் கிளாஸ்.இதில் நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவியான இந்த கூகுள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.

கூகுள் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, ‘ஒகே. கிளாஸ்’ என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. ‘டேக் எ பிக்சர்’ என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.

இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன் படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர் என்றாலும் .இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் காயலான் கடைக்கு போடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது

இதன் விலை 1500 அமெரிக்க டாலர்கள் ஆகும் இதோ அது எப்படி வேலை செய்கின்றது என்பதை பாருங்க...
phpBB [video]


நன்றி-ஆந்தை ரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to செல்லிடை (Cellphone )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 68 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]