[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
செல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.

ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 21st, 2014, 3:12 pm

இன்று தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Image


இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 1,450 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.

நன்றி தமிழ் gizbot
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...!

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 21st, 2014, 5:20 pm

தகவலுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 21st, 2014, 5:35 pm

இந்த கடை எங்கு உள்ளது சரண் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to செல்லிடை (Cellphone )

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 56 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron