[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தேடுதல் பொறியில் தேட சிறந்த உத்திகள் .... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

தேடுதல் பொறியில் தேட சிறந்த உத்திகள் ....

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » ஜூலை 29th, 2014, 5:23 pm

கணினியின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்தும் இணையத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலம், இணையம் இருந்தால் உலகத்தை ஓரடியில் அளந்து விடலாம் என்பது சாத்தியப்பட்டிருக்கிறது. அண்டவெளியை ஆராயும் அறிவியல் தொடங்கி அடுப்படியில் செய்யும் ஆகாரம் வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள இணையம் துணை புரிகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட இந்த தகவல் கிடங்கில் எங்களின் தேடல் பயணத்தின் கைகாட்டி மரங்களாக இருப்பவை தேடற் பொறிகள் (Search engines).

Ads by PlusHDV1.9Ad Options
இந்த சேவையை முண்டியடித்து கொண்டு எத்தனை நிறுவனங்கள் வழங்கினாலும், சாதாரணமாக ஆரம்பித்து இன்று இணையத்தையே ஆறு எழுத்துக்களால் ஆட்சி செய்வதென்னமோ கூகிள் (Google) தேடு பொறிதான். பொதுவாகவே எந்தவொரு பொறியிலிருந்தும் விளைதிறனை சிறப்பாக பெறுவதற்கென்றே சில நுட்பங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கூகிளையும் ஒரு பொறி என்று சொல்வதால் அதனை இயக்கவும் சில நுட்பங்கள் அதாவது தேடுதல் தந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை அறியாமலே இன்று பல நண்பர்கள் தாங்கள் தேடுகின்ற விஷயங்களை கூகிள் காட்சிப்படுத்துவதில்லை, என்று குறைபட்டுக் கொள்கிறனர். நாங்கள் எதிர்பார்க்கின்ற தேடல் முடிவுகள் கிடைக்க சில நுட்பங்களை தொகுத்து தருகிறேன்.
* நீங்கள் தேடல் பொறிகளில் தேடுகின்ற போது ஆங்கில பெரிய எழுத்துக்களிலோ (Upper case) அல்லது சிறிய எழுத்துக்களிலோ (Lower case) தேடலாம். ஆனால் தேடல் பொறிகள் சிறிய எழுத்துக்களில் (Lower case)

உள்ள சொற்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எப்போதும் தேடுவதற்க்கு சிறிய எழுத்துக்களினையே (Lower case) பயன்படுத்துங்கள்.

* சிலவேளைகளில் ஒரு சொற்தொடரை கொடு்த்து தேட வேண்டிய நிலை இருக்கும். அவ்வாறான வேளைகளில் சொற்களின் இடையே + குறியை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக “ஐரோப்பாவின் உதைப்பந்தாட்ட விளையாட்டின் வரலாறு” என்பதை தேட விரும்பினால் பின்வருமாறு தட்டச்சு செய்து தேடுங்கள். history+Football+Europe


* அடுத்து, நீங்கள் தேடுகின்ற விஷயங்களுக்கான தேடல் முடிவுகள் நீங்கள் தேடிய தலைப்பிலேயே வரவேண்டும் என நினைக்கின்ற சந்தர்ப்பங்கள் வரலாம். அவ்வாறான வேளைகளில் நீங்கள் தேடுகி்ன்ற சொற்களை இரட்டை மேற்கோள் குறிக்குள் (Double quotation) கொடுத்து தேடுங்கள். உதாரணமாக உங்களுக்கு இந்தியாவின் வரைபடம் தேவைப்பட்டால் தேடல் பொறிகளில் சென்று “Map of India” என்று தேடினால் இதே சொல்லை ஒத்த முடிவுகளை பெறலாம்.
* இறுதியாக, எப்போதுமே தேடல் பொறிகளில் தேடுகின்ற போது “and”, “or” ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் தேடல் முடிவுகளை இவை மாற்றி விடும்.

நான் மேலே சொன்ன இந்த விஷயங்களை இனி தேடல் பொறிகளில் தேடுகி்ன்ற போது கவனத்தில் கொள்ளுங்கள். வழமையாக ஆரம்பத்தில் எழுதுவதை ஒரு மாற்றத்திற்காக இறுதியில் எழுதுகின்றேன். மீண்டுமொரு முறை உங்களை எனது வலைப்பதிவின் ஊடாக சந்தித்ததில் மகிழ்ச்சி… மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 54 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]