[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பேஸ்புக் என்பது மனிதனின் பலவீனம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

பேஸ்புக் என்பது மனிதனின் பலவீனம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 1st, 2014, 6:51 pm

வேலையில் சேர்ந்த காலங்களில் நானும் எனது நண்பரும் ஒரு பிரபலமான மத்திய அரசு அலுவலகத்திற்கு நாங்கள் வேலை செய்யும் அலுவலக பணி நிமித்தமாக அடிக்கடி செல்வோம். அந்த அலுவலகத்தில் ஒரு மத்திய அரசு ஊழியரிடம் தான் அடிக்கடி பணி தொடர்பாக பேசவேண்டியிருக்கும்.
அந்த ஊழியரிடம் உள்ள ஒரு கெட்டப்பழக்கம் உண்டு . அவரை பார்க்க வருபவர்களிடம் கோப்புகளில் கையெழுத்து போட பேனா கேட்பார், கொடுத்தார்கள் என்றால் அந்த பேனா திரும்பி வராது. "யோவ் போயா வேறப்பேனா வாக்கிக்கோயா" என்று என்னமோ இவருடைய காசு நம்மிடம் இருப்பது போல் திட்டுவார்.

மத்திய அரசு ஊழியராக இருந்து கொண்டு ஒரு பிச்சைக்காரனைவிட கேவலமாக நடந்துகொள்ளும் இவரை என்ன செல்வது. சரி விடுங்கள் அது அவங்க பழக்கம். மாற்றமுடியாது. சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.

ஒரு நாள் நானும் என் நண்பரும் அலுவலக பணி தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, என் நண்பர் கையெழுத்து போட தெரியாதனமாக பேனாவை கொடுத்துவிட்டார்.

நான் எப்போதும் அவரை பாக்க போகும்போது வெறும் ஆளாக தான் போவேன், அவரிடம் அவ்வளவு பேனா விட்டு இருக்கேன்.

அந்த அலுவலர் கையெழுத்து போட்ட பின்பு என் நண்பர் "சார் என் பேனா" என்றான். அதற்கு அவர் "யோவ் பொல்லாத பேனா ....." என்றார். நானும் பரவாயில்லையே கொடுத்துவிடுவார் போலிருக்கே என்று நினைத்தேன்., நினைத்து முடிப்பதற்குள் "வேறப்பேனா வாங்கிக்கோயா " என்று என் நண்பரை விரட்டினார். அதுதானே நீ என்றைக்கு திருந்தப்போற என்று மனதில் அவரை திட்டிவிட்டு, வாங்க கிளம்பளாம் பேனா இனி கிடைக்காது என்று நண்பனை கிளப்பினேன்.

அவனோ டேய் கொஞ்சம் இருடா நான் எப்படி அவரிடமிருந்து அந்த. பேனாவை வாங்குறேன் பாரு என்றான. கொஞ்ச நேரம் பொருத்திருந்தான்.

எப்படி வாங்கப்போறானோ என்று நானும் ஆவலாக இருந்தேன்.

எங்களிடம் பேசிவிட்டு பேனாவை சட்டையில் சொருகி கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் அவருடைய உயர் மேலாளரை பார்க்க சென்றார் அந்த ஊழியர். அவரை பின் தொடர்ந்தார் என் நண்பர். அந்த ஊழியர் அறையின் உள்ளே சென்று அவருடைய மேலாளரிடம் பேசும்போது என் நண்பர் பட்டென உள்ளே சென்று 'சார் என் பேனா என்றான்' என்ன சொல்வது என்று தெரியாத அந்த பேனா திருட்டு ஊழியர் "இந்தாப்பா உன் பேனா" என்று கொடுத்துவிட்டார்.

என் நண்பனின் சாமர்த்தியமான செயலை பார்த்தீர்களா. அந்த அலுவலக வரலாற்றில் பேனாவை திரும்ப வாங்கிய ஓரே நபர் என் நண்பன் தான். அவன். பெயர் நீலகண்டன். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

சரி விசயம் முடிந்து விடவில்லை. இதே கருத்து சொல்வது இருக்கிறது.

பத்துபேர் மத்தியில் ஒருவர் தன்னை நல்லவராக காட்டிக்கொள்வது மனிதனின் இயல்பான பண்பு. அதனால் தான் அந்த ஊழியர் மற்றவர் மத்தியில் பேனாவை கேட்கும்போது தரமுடியாது என்று சொல்லமுடியாது. இந்த பலவீனத்தை நாடி பிடித்து தெரிந்த கொண்ட மேற்கத்திய நாடுகள் அதைவைத்து அவர்கள் பணம் சம்பாதிக்க உருவாக்கிய ஒரு சேவைதான் பேஸ்புக்.

இங்கு நான் மேலே சொன்ன கதை போலத்தான் நாலு பேர் மத்தியில் தன்னை நல்லவராக வல்லவராக காட்டிக்கொள்ள விரும்பி இங்கு அனைவரும் படையெடுக்கின்றனர். அதனால் இங்கு வருபவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. மனிதனின் பலவீனத்தை பணமாக்கும் கூட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

கொசுரு தகவல் ; நான் சொன்னது உண்மை சம்பவம் நடந்தது பாரத மிகுமின் நிறுவனம் திருச்சி. அங்குள்ள ஊழியர்களில் sub-contracting பிரிவை சார்ந்த 90% ஊழியர்கள் தனது கட்டுப்பாட்டில் வரும் sub-contractor களிடம் இருந்து ஒவ்வொரு முறையிலும் ஆதாயம் அடைகின்றனர்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment

Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron