[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மடினி(Laptop) வைத்திருப்பவரா? இதை கட்டாயம் படியுங்கள்! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

மடினி(Laptop) வைத்திருப்பவரா? இதை கட்டாயம் படியுங்கள்!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 26th, 2014, 11:03 pm

Image

உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்று சில உள்ளன. காலப்போக்கில் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே போகிறது.

உதாரணத்திற்கு கைபேசி, கணினி போன்றவைகளை சொல்லலாம். இன்றைய உலகத்தில், கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. அது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்டது. கணினி என்றால் அதில் மடினியும் அடக்கம்.

ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை உங்களுக்கு அளிக்கிறது இந்த மடினி. மடினி இருக்கிறதா? அப்படியானால் அது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவீர்கள். ஏன் அது உங்கள் வாழ்க்கையாகவே இருக்கலாம். இது அவ்வளவு முக்கியம் என்றால் இதற்கும் தேவையான அளவு காதலும் பராமரிப்பும் தேவை தானே. அதனால் மடினியை சிறந்த முறையில் பராமரிக்க சூப்பர் டிப்ஸ், இதோ:

திரை

மடினியின் திரை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மடினி நன்றாக வேலை செய்யும் நிலையில் இருந்தாலும், திரையை துடைக்கும் போது கவனம் தேவை. சரியான பொருட்களை கொண்டு திரையை துடைக்க வேண்டும் இல்லையெனில் அது திரையை சேதமடைய செய்யும். கைவிரல்களை கொண்டு திரையை துடைக்காதீர்கள். அது கைத்தடங்களை திரையின் மேல் பதியச் செய்யும். மேலும் திரையை பலமாக அழுத்தினால் அது சேதமடையவும் வாய்ப்புகளும் உண்டு.

குளிர்ந்த சூழலில் வைத்திருங்கள்.

மடினியை எப்போதும் நல்ல சூழலில் வைத்திருங்கள். பயணம் செய்ய நேரிட்டால், மடினி பத்திரமாக இருக்க அனைத்து முன் எச்சரிக்கையையும் செய்யுங்கள். பயணத்தில் அதை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, மடினிக்கு தேவையான அளவு சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதனை தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கியே வைய்க்கவும்.

ஆண்டி-வைரஸ்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் சந்தையில் பல வகைகள் உள்ளன. அசல் உரிமத்துடன் ஒரு மென்பொருளை வாங்கி, மடினியில் நிறுவுங்கள். வைரஸ் மடினியை வெகுவாக பாதிக்கும். மடினியின் வேகத்தை குறைப்பது முதல் அதன் செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் வரை வைரஸ் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

உணவு மற்றும் பானங்களை

பசிக்கிறதா? அப்படியானால் மேஜைக்கு சென்று தான் உணவருந்த வேண்டும். சிப்ஸ் அல்லது மற்ற நொறுக்குத் தீனிகளை மடினி அருகே கொண்டு வராதீர்கள். நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது மடினியில் எந்த உணவும் பானமும் சிந்தக் கூடாது.

சரியான பேக்

மடினியை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள். மேலும் மடினிக்கு ஏற்ற அளவில் ஒரு பேக்கை வாங்கவும். அது மடினியை பாதுகாக்கும்.

கீழே போட்டு விடாதீர்கள்

மடினியை கல்லூரி அல்லது அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அறிந்த ஒன்றே. ஆனால் மடினியை கீழே போட்டு விடும் தவறை செய்யாதீர்கள். மெட்ரோ இரயில் அல்லது பேருந்துகளில் செல்லும் போது, உங்கள் கையில் இருக்கும் மடினி பை கீழே விழாமலும் யாரும் தூக்கிச் செல்லாமலும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

மின்சாரம்

உணவு உண்ணுவதற்கு செல்லும் போதோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் போதோ மடினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடினிக்கு அதிக ஆயுளை தரும்.

அதிக நேரம்

தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் ஓட விடாதீர்கள். தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், மடினி அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும். மடினியின் ஆயுள் நீடிக்க வேண்டுமென்றால், உபயோகிக்காத நேரத்தில் ஷட் டௌன் செய்யுவம்.

சுத்தப்படுத்தவும்

மடினியை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும். நம்மில் சில பேர் ஆரோக்கியமாக இருந்தும் வருடத்திற்கு ஒரு முறை நம் உடல்நலத்தை பரிசோதிக்க மருத்துவரை அணுகுவோம். அதே போல் மடினியும் குறிப்பிட்ட காலத்தில் வல்லுனரால் சோதித்து பார்க்கப்பட வேண்டும்.

தட்டையான பரப்பு

எப்போதும் மடினியை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது மடினியை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும். உங்கள் மெத்தையின் மேல் வைத்திருந்தாலும் கூட, மெத்தையில் இருக்கும் தூசிகள் மற்றும் நார்களை மடினியில் உள்ள மின் விசிறி உள்ளிழுக்கும். இதனால் மடினியின் அடிப்பாகம் சூடாகும். அதனால் மேஜை போன்ற தட்டையான பரப்பை பயன்படுத்துங்கள்.

சுத்தப்படுத்துவும்

மடினியை பராமரிக்க மிக எளிய வழிமுறை தான் இது. பல் தேய்க்கும் ப்ரஷ்ஷை பயன்படுத்தி மடினியின் மின் விசிறி இடுக்கு, தட்டச்சுப்பலகையின் மேல் பதிந்திருக்கும் தூசியை சுத்தப்படுத்துங்கள். மெல்லிய துணியை பயன்படுத்தி திரையை துடைக்கவும்.

குளிரூட்டும் விசிறி

மடினிக்கான குளிர்ச்சியை ஏற்படுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள். இது மடினி அதிக சூடாக்குவதை தடுக்கும்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மடிக்கணினி வைத்திருப்பவரா நீங்கள? இதை கட்டாயம் படியுங்கள்!

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 27th, 2014, 5:42 pm

ஆமாம்பா.... இதெல்லாம் நானும் செய்யணும்...

நன்றி நன்றி.....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மடினி(Laptop) வைத்திருப்பவரா? இதை கட்டாயம் படியுங்கள்!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 28th, 2014, 11:32 am

டினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடினிக்கு அதிக ஆயுளை தரும்.


நல்ல தகவல் சரண். நான் இப்போது இவ்வாறு தான் எனது மடினியை பயன்படுத்துகிறேன். பரவாயில்லை battery நேரம் இப்போது அதிகரித்தது போல் உணர்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சரண் :-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron