[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • வாழ்க்கை தத்துவம்
Page 1 of 1

வாழ்க்கை தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 1:05 pm
by mbalasaravanan
Image

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.

வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை

நன்றி:முகநூல்

Re: வாழ்க்கை தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 1:19 pm
by பிரபாகரன்
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.


நம் முன்னோர்கள் எதாவது செய்தார்கள் என்றால் ஒரு அர்த்தம் இருக்கும்... அருமை சரோ :-gd :-gd

Re: வாழ்க்கை தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 1st, 2014, 11:21 pm
by அனில்குமார்
இவை மட்டும் இன்றி ....
தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் (மா, பலா, வாழை)ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும், அதாவது மருந்தாக பயன் படுகிறது.
வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்........ இதுவும் முன்னோர் வழிதான்....

Re: வாழ்க்கை தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 2nd, 2014, 12:22 am
by பிரபாகரன்
அனில்குமார் wrote:இவை மட்டும் இன்றி ....
தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் (மா, பலா, வாழை)ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும், அதாவது மருந்தாக பயன் படுகிறது.
வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்........ இதுவும் முன்னோர் வழிதான்....


அருமையான கூடுதல் தகவல் தல.... வாழையில் இவ்வளவு பயன்களா .... :-arm

பகிர்வுக்கு நன்றி அனில்

Re: வாழ்க்கை தத்துவம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 3rd, 2014, 12:36 pm
by வேட்டையன்
பயனுள்ள தகவல் பாலசரவணன் :-arm :-arm