[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பார்வைகள் புதிது .... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
இங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.

பார்வைகள் புதிது ....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜூலை 4th, 2014, 12:26 am

என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும் புலம்பினாள் மைதிலி.

எனக்கு மட்டும் இதிலே சந்தோ~மாவா இருக்கு, நான் இதிலே என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்? நீயே இவ்வளவு சலித்துக்;கொண்டால் நான் யாரிடம் போவது? உன்னுடைய பொருமையால் தான் நான் இவ்வளவு நாள் ஓட்டினேன் நிதானமாக பதிலளித்தான் சிவராமன்.

இந்த இதமான பதில் மைதிலியை ரொம்பவும் தணியவைத்தது. ரொம்ப சாரிங்க. நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். செங்கல்பட்டு தாண்டி மய்யூரில் ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். நானும் நீங்களும் பார்த்து விட்டு அப்படியே என் தோழியையும் பார்த்து விட்டு வரலாம். அவரைப் பார்த்துவிட்டு நம் சித்துவைப் பற்றி ஒரு முடிவு செய்யலாம்.

சரி நானும் இன்று அக்காவுக்கு போன் பண்ணி ஒரு நாள் சித்துவை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்து விடுகிறேன். வெள்ளிக்கிழமை வரமாட்டாள். சனிக்கிழமை குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவுதான். அத்திம்பேருக்கும் அரைநாள் தான் ஆபீஸ். அவர்கிட்ட சொன்னா அட்ஜஸ்ட் பண்ணிப்பார். வெள்ளிக்கிழமை மாலை ஆபீஸிலிருந்து வரும்போது கூட்டி வந்துவிடுகிறேன்.

நாம் சனிக்கிழமை காலை போய் மாலைக்குள் வந்துவிடலாம். சரி நான் போய் வரேன். நீ சந்தோ~மா இரு. வாசலுக்கு வழி அனுப்பி வந்த மைதிலியை மா, மா, சித்துவின் குரல் தடுத்தது.

சரி நீ போய் அவனை கவனி வாசல் கதவை தாளிட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து சென்றான் சிவராமன்.

உள்ளே பார்த்தாள், மர ஈஸி சேரில் கிடந்தான் சித்து.

“மா, மா” கையை உயர்த்த முயற்ச்சித்தான். எல்லாம் நேரப்படித்தான் துரைக்கு என்று சிடுசிடுப்புடன் முனகினாள். “இதோ வர்றேன், சாப்பாடு கொண்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் சென்றாள். மணி 10:30ஐ தாண்டி இருந்தது. அவளுக்கே பசி தோன்றியது. கணவர் ஏதோ வேலை வி~யமாக இன்னொரு ஆபீஸ் செல்ல வேண்டியிருந்ததால் ஒரு மணி நேரம் லேட்டாக சென்றது நினைவிற்கு வந்தது.

பாவம். அவள் உள் மனது வெம்மியது. இன்னும் இரண்டு நாளோ மூன்று நாளோ. ஏனோ அவளையறியாமல் மனது வேதனைப்பட்டது. வாயிருந்தால் கேட்டிருப்பான். எத்தனை வரு~ப் பழக்கம். 9:30 மணிக்கு சிவராமன் கிளம்பியவுடன் 9:35க்கு சித்து சாப்பாடு. கடந்த 15 வரு~மாக தொடர்ந்து நடந்து வந்த ஒன்று. அவசர அவசரமாக உணவு ஊட்டினாள். சித்துவுக்கு நடக்கப் போவதை நினைத்து கண்களில் நீர் முட்டியது. சித்து அவள் சந்தோ~த்தையும் அறிவதில்லை கவலையையும் அறியவில்லை. பசி தீர்ந்தது என்பதற்கு அடையாளமாய் நீர் குடிக்க அவன் கை அசைத்தான்.

தானும் தட்டு போட்டு கொண்டு தரையில் அமர்ந்தாள், கண்களிலிருந்து பொல பொல வென்று உருண்டு ஓடிய கண்ணீர் உணவுக்கு உப்பு சத்தை கூட்டியது.

வாழ்கை இவ்வளவு மோசமானதா? ஓவ்வொருவரின் எண்ணத்தையும் ஆசைகளையும் தூள் தூளாக்குவது தான் இயற்கையின் விளையாட்டா? தன் வாழ்கையில் மட்டும் தான் இவ்வளவு சோதனையா?

அவள் பி.எஸ்.சி. படித்துக் கொண்டிருக்கும் போது வேலைக்கு போய் ஆணுக்கு சமமாக சம்பாதித்து ஒரு ஆடம்பரமான வாழ்கை வாழ திட்டமிட்டிருந்தாள். அப்பாவிற்கு ஒரே பெண் ஆதலால் செல்லம் அதிகம்.

அத்தை மகன் சிவராமனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள். கல்யாணம் முடிந்ததும் வேலைக்கு சென்றாள். நான்கு மாதங்கள் தான் பேறு காலத்தில் ஏதோ கோளாறு என்று வேலைக்கு போவது நின்று போனது. குழந்தை பிறந்து சித்து என்று செல்லப் பெயரிட்டு தாலாட்டி சீராட்டினாள். குழந்தை வளர்ச்சி சரியில்லையென்று டாக்டர்கள் சொன்னதின் பேரில் வேலைக்கு போகும் வாய்ப்பு நிரந்தரமாக போயிற்று. கணவனின் வருவாயில் கணிசமான பகுதி குழந்தையின் மருத்துவச் செலவுக்கு போயிற்று.

சித்துவுக்கு குழந்தை விளையாட்டுகள் வரவில்லை, மூன்று வயதாகியும் பேச்சு வரவில்லை. சில குழந்தைகளுக்கு பேச்சு தாமதமாகத்தான் வரும் என்று சொன்னாலும், எல்லோருக்கும் உள்ளுர குழந்தை பற்றி கவலை இருந்து கொண்டு தான் இருந்தது. ஐந்து வயதாகியும் பேச்சு வரவில்லை. ஏதோ ஓரு சயின்ஸ் பத்திரிகையில் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டால் மருத்துவ ரீதியாக குழந்தைகளுக்கு சிக்கல் தோன்றும் என்று போட்டிருந்ததை படித்தாள். கணவனிடம், பெற்றோர்கள்;இ உறவினர்கள் எல்லோர் மேலும் கோபம் வந்தது. கணவனிடம் வெறுப்பை கொட்டினாள். டாக்டர்கள் நிறைய பணம் பறித்தார்கள். கோவில்கள், பிராத்தனைகள் லீவுகளை கரைத்தன. நுனி நாக்கு வளர்ச்சி இல்லை என்றார்கள். வுpயாதி என்றார்கள், பேச்சு வரும் என்றார்கள். ஸ்கூல்லே என் பையன் முதல் பரிசு, அந்த விளையாட்டில் பரிசு வாங்கினான், பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கினான் என்று எல்லாம் பெருமைப்பட வாய்ப்பே இல்லை என்று உணர்ந்து கொண்டாள்.

இன்னொரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று எல்லோரும் சொன்னார்கள், அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அவள் மட்டும் இன்னொரு குழந்தையும் இப்படி பிறந்து விட்டால் நான் அவரையும் கொலை செய்து, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாள். சிவராமன் பயந்தான். அவனுக்கும் அந்த பயம் உண்டு.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, சிவராமன் தன் அளவுக்கு அதிகமான கனிவான பேச்சுகளாலும், அன்பாலும் அவளை ஒரு மாதிரி சமாளித்து வந்தான். சித்துவுக்கு 9 வயது ஆகும்போது கை, கால்கள் வலுவிழந்தன.

எப்போதும் படுக்கை, அவளுக்கு நிரந்தர சோகம் ஆயிற்று. ஆனால் பழகிக்கொண்டாள். தாய்மை மேலிட்டால் அருகில் நின்று அழுவாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, வெறுப்பு உணர்ச்சிக்கு மேலோங்கியது. அவனுக்கு வேலைக்கு உணவு கொடுப்பதை தவிர அவள் அம்மா ஆனதற்கு வேறு ஒன்றும் பொருப்பில்லை, அவளே தீர்மானித்துவிட்டாள்.

ஒரு மர ஈஸி சேரில் விசே~மாக வடிவமைக்கப்பட்டது. அதில் மேலே குழாய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு வால்வை திறந்தால் அதுவே அவனுக்கு குளியல், அவன் மேல் ஒரு துணி மட்டும் போர்த்தியிருக்கும். அவன் மலஜலங்கள் போவதற்கு ஒரு பெரிய குழாய் இணைப்பு வழியே நேரே பாத்ரூமுக்கு செல்லும். உடம்பு வாடை வராமலிருக்க அவ்வப்போது பவுடர் தூவப்பட்டது.

சிவராமனால் ஒன்றும் பேச முடியவில்லை. சாதாரணமாக பெற்ற அம்மா மட்டும் தான் குழந்தைகளின் குறைகளை பொறுத்துக்கொள்வாள். தாயன்பு தவிர மற்ற ஏதும் குறைகளை மறைக்கும் தன்மை இல்லை. அந்த அம்மாவுக்கும் அன்பு இல்லையென்றால் வேதனையை பழகிக்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. யாரும் பேசுவதற்கு பயந்தார்கள். நீங்கள் 4 நாட்கள் பார்த்துக் கொள்ளுங்கள்;; அப்புறம் பேசுங்க. ஒரு சினிமா இல்லை, டிராமா இல்லை, கல்யாணம் இல்லை, கார்த்திகை இல்லை 10 வரு~ம் ஆச்சு இன்னும் எத்தனை வரு~மோ கொட்டி தீர்த்து விடுவாள்.

சித்துவுக்கு மனவளர்ச்சி, மூளை வளர்ச்சிகளை ஈடு கட்டும் வகையில் உடல் வளர்ச்சி பெற்றிருந்தான். அசாத்திய கனம்.

அவனுக்கு 9 வயதில் இருந்த பலத்தைப் பார்த்தவர்கள், இப்போது அவனுக்கு கால், கை விளங்கவில்லை என்றால் நம்ப மாட்டார்கள் 9 வயதில் தானே தட்டாமாலை சுற்றுவான். மணிக்கணக்கில் சுற்றுவான் தலை சுற்றாது, வாந்தி வராது யாரும் அவனை நிறுத்தவும் முடியாது. யாராவது தடுக்க முயற்ச்சித்தால் அவரையும் சேர்த்து சுற்றுவான், அப்படி ஒரு பலம்.

அவனை தூக்குவதோ, சமாளிப்பதோ ரொம்ப க~;டம் தான். ஆனால் எது எப்படி போனாலும் காலம் நிற்பதில்லை. அவனுக்கு இப்போது 20 வயது. நாளாக நாளாக மைதிலி அவன் எதிரியானாள். வாழ்கையின் சந்தோ~ங்களை ஒட்டு மொத்தமாக குலைப்பதற்கு பிறந்தவன் என்று நினைத்தாள்.

சென்ற வாரம் அவள் காலேஜ் தோழி கமலா வந்த போதுதான் பிரச்சனை வந்தது. அது நல்ல விதையா? விழ விதையா? இன்னும் அவளுக்கே புரியவில்லை, அவளுக்கே புரியாத வி~யத்தை அதில் தீர்வை எப்படி எவரிடம் எதிர்பார்க்க முடியும்? குழப்பம் அதிகமாகி வருகிறதே தவிர, தீர்வுக்கு வழியோ தீர்வின் ஆரம்பமோ, எட்டிய வரையில் தெரியவில்லை.

வாசலில் காலிங்பெல் மணி அடித்தது. அவள் நினைவலைகள் அறுந்தன, எச்சில் கையுடன் கதவை திறந்தாள். கமலாதான். என்னடி கமலா, திடீரென்று.

நான் மய்யூர் பக்கத்தில் ஒரு சாமியார் இருக்காராம் போய் பார்த்துவிட்டு வரலாம்னு இருக்கிறேன். நீயும் கம்பெனி தருகிறாயா?

போடி எனக்கு வேற புரோக்கிராம் இருக்கு. எனக்கு உன்னை மாதிரி உடனே வரமுடியுமா? எனக்கு எத்தனையோ பிரச்சனைகள். அத்தனை ஏற்பாடும் பண்ணிட்டுதான் வரனும்,‘பை’ கமலா. அது தான் ளழடரவழைnனு சொன்னேனே, நீயும் கசநந ஆயிடுவே. நான் உடனே போகணும். என் கணவர் இந்த மாதிரி சாமியாரையே பார்த்ததில்லையாம், சரி டீ ‘பை’ கமலா ஓட்டமும் நடையுமாய் சென்றாள்.

தனக்குள் சிரித்துக்கொண்டாள் மைதிலி. சாப்பிட்டு விட்டு ஈசி சேரில் சாய்ந்து கொண்டாள். விட்ட இடத்திலிருந்து நினைவுகள் தொடர்ந்தன.

தோழி கமலாவின் வருகை அவளுக்கு பெருமையாக இருந்தது. அவள் கணவன் அமெரிக்காவில் வேலை பார்க்கும் எக்ஸிக்கியுடிவ், கை நிறைய சம்பளம். செல்வத்தின் செழிமை அவர்கள் நடை உடைகளில் பிரதிபலித்தது. ஸ்டேட்ஸிலிருந்து ஏதோ பிராத்தனைகள் செலுத்த வந்திருக்கிறார்கள்.

அவளது ஆடம்பர சுகபோக வாழ்கைகளை விவரிக்க விவரிக்க மைதிலி அதுவரை நிறுத்தி வைத்திருந்த உணர்ச்சிகளை கொட்டினாள், அழுதாள், குமுறினாள், சித்துவை காட்டினாள். சித்து தியானத்திலிருப்பது போல் இருந்தான். அவன் தூங்குகிறானா, விழித்திருக்கிறானா யாருக்கும் தெரியாது.

கமலா ‘என்னடி இதைப்போய் இப்படி சொல்றே, அமெரிக்காவிலே இதற்கெல்லாம் பிராப்ளம் இல்லே, ‘மெர்ஸி கில்லிங்’னு சொல்லி ஒரே ஒரு ஊசியை போட்டு விடுவார்கள். நமக்கும் சித்துவுக்கும் பிராப்ளம் இல்லே. நீ ஏன் இத்தனை வரு~ம் போராடினேன்னு தான் தெரியலே, எனக்கும் நீ தெரிய படுத்தலே.

சிவராமன் வந்தவுடன் அவனிடம் வி~யத்தை கூறி அழுதாள், ‘மெர்ஸி கில்லிங்’ செய்ய பிடிவாதம் பிடித்தாள். சிவராமனும் ஒன்றும் சொல்ல முடியாமல், “ஏதோ எனக்கு ஒண்ணும் புரியல்லே, யாராவது சாமியாரிடம் அல்லது பெரியவர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வோம்” தற்காலிகமாக ஒரு முற்று புள்ளி வைத்தான்.

சிவராமன் வந்து காலிங்பெல் அடித்தபோது தான் கண் விழித்தாள்.

ஐயோ! ஏதோ நினைவுகள் கனவுகள் நேரம் போனதே தெரியாமல் அசந்து விட்டேனே. சித்துவுக்கு காபி டயம் வந்துடுத்தே, கடிகாரம் வேறே இரண்டு மணியில் நின்னுடுத்து போலிருக்கு, பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள்.

“என்ன மைதிலி, பதறிப்போய் வர்ரே, நான் சும்மா அரை நாள் லீவு போட்டு விட்டு வந்திருக்கேன்.

மைதிலி சுய நினைவுக்கு வந்தாள், அப்படியா நான் ஏதோ ரொம்ப நேரம் அசந்துவிட்டேனா என்று பயந்து விட்டேன்.

பிறகு சுதாரித்துகொண்டு உள்ளே சென்ற மைதிலி காபி போட்டு சித்துவுக்கு கொடுத்துவிட்டு, சிவராமனுக்கும் தனக்கும் காபி எடுத்து வந்தாள்.

எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா? நாம் நாளை கிளம்பறோம்.

ழுமு. நம்ம புரோக்கிறாம்படி நாளை கிளம்பறோம்.

வண்டி செங்கல்பட்டு தாண்டி மாமண்டூரில் நின்றது. அங்கிருந்து 3 கி.மீ. நடந்து போக வேண்டும். வரப்பு வழியாகத்தான் போக வேண்டும். ஜனங்கள் நெரிசலாக போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சைக்கிளில் போறது கூட சிரமந்தான். நடந்து தான் செல்லவேண்டும். சிவராமனும், மைதிலியும் ஜன நெரிசலில் கலந்தார்கள். முக்கால் மணி நேரம் நடந்தார்கள்.

அந்த வயல்வெளிகள், சுற்றுப்புறசூழல், ஜனநடமாட்டம், நீண்ட நடை அவர்களை ஓரளவு சாந்தப்படுத்தியது.

அதோ ஆசிரமம் தெரிகிறது அருகில் தெரிந்த ஒரு குடிசையைக் காண்பித்தாள் மைதிலி.

எவ்வளவு பெரிய இடம் சுமார் 100 பிளாட்டுக்கு மேல் தேரும் போல, மைதிலி கிசுகிசுத்தாள்.

சும்மா வா, நீயும் நானும் இங்கே ரியல் எஸ்டேட் பண்ண வரவில்லை, சிவராமன் கடுகடுத்தான்.

எனக்கு மட்டும் பிரச்சனை இல்லையா, இவ்வளவு பெரிய இடத்தைப் பார்த்தவுடன் அந்த ஞபகம் வந்துடுத்து, என்றால் மைதிலி.

இந்த ஆசிரமத்தின் அருகாமை அவளுக்கு அப்படி ஒரு மனநிலையை அளித்ததா, இல்லை அவளுடைய பிரச்சினைக்கு ஒருவாறு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டதா, சிவராமன் குழம்பினான்.

நல்லவேளை மெட்றாஸிலிருந்தே பழம் வாங்கி வந்து விட்டோம், இல்லை என்றால் இங்கு ஒண்ணும் கிடைக்காது, சிவராமன் பேச்சின் திசையை மாற்றினான்.

இப்பத்தானே மெட்றாஸிலிருந்து வர ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் கடைகள், ஹோட்டல்கள் எல்லாம் கட்டுவாங்க, மைதிலி தெடர்ந்தாள்.

சாமிக்கு அதெல்லாம் பிடிக்காது, ஒண்ணு, ரெண்டு பேர் கடை போடறேன்னு சென்னதுக்கு சாமியாரு முடியாதுன்னு ஸ்டிரிக்டா கூடாதுன்னு சொல்லிட்டாரு, யாரோ ஒருவர் பேச்சில் கலந்து கொண்டார்.

இருபதுக்கு ஜம்பது அடி ஒரு அறை, 6 அடி உயரத்துக்கு செங்கல் சுவர்கள், அதற்கு மேல் விழல் போட்ட கூறை, சுவரெல்லாம் சுத்தமாக சுண்ணாம்பு அடிக்கப்பெற்று எல்லா கடவுள்களின் படங்களும் மாட்டப்பட்டிருந்தன. தாங்கி நிற்கும் மரக்கால்களில் திருநீருக் கொப்பறைகள், மயான அமைதியுமில்லை, அதிக சப்தமுமில்லை, ஒருவாரு சுகமாக இருந்தது, இரண்டு டியூப்லைட் மற்றும் ஒரு பேன் தொங்கிக் கொண்டு இருந்தது.

யாரோ பக்தி பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். பத்து, இருபது பேர்கள் அங்கு உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு இனிமை இல்லை, சுத்தமும் இல்லை, ஆனால் பக்தி ஆர்வம் குறையவில்லை. அங்குள்ளவர்கள் எங்களைப்போல் வந்தவர்கள் மாதிரி தோன்றியது.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. சாமியாரும் காணவில்லை, கூட்டமும் அவ்வளவாக இல்லை, சுமார் இருபது, முப்பது பேர்கள் மட்டுமே இருப்பார்கள். ஏதோ போனோம் சாமியாரைப் பார்த்தோம் சென்னைக்கு உடனே திரும்பி விடலாம், எல்லாம் 4 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்ற எண்ணம் தவறு என்று தெரிய வந்தது.

அதோ பாருங்க ஒருத்தர் போறார் அவர் ஆசிரம ஆள் மாதிரி இருக்கு போய் பார்த்துட்டு வாங்க, ஏதாவது வி~யம் தெரியும்.

சார், தம்பி எப்படி அழைப்பது என்று முடிவு செய்ய முடியாமல் ஓடிப்பிடித்தேன்.

அவர் நின்றார், வயது 24, 25 தான் இருக்கும் என்ன சார், நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? பணிவு கலந்த விசாரனை, சுகமாக இருந்தது.

நானும் எனது மனைவியும் சென்னையிலிருந்து வருகிறோம், சாமியார் எப்போது வருவார்? எப்போது குறி சொல்வார்?கலகலவென்று சிரிப்பு தான் பதிலாக அவனிடமிருந்து வந்தது. யார் சொன்னார்கள் சாமியார் குறி சொல்வதாக? எங்கேயாவது எழுதிப் போட்டிருக்கா?

சிவராமனுக்கு ஏதோ மாதிரி ஆகி விட்டது. குறி சொல்வதாகக் கேள்விப்பட்டோம்.

சாமியார் குறி சொல்வதில்லை, அவன் போகத் தலைப்பட்டான்.

சாமியாரைப் பார்க்கலாமா? அவரிடம் குறைகள் சொல்லலாமா? சிவராமன் மெல்ல தயங்கி இழுத்தான்.

அவர் வருவார் பார்க்கலாம். எப்போ வருவார், என்ன செய்வார் என்று யாரும் சொல்ல முடியாது, இன்னும் சொல்லப்போனால் கடிகாரம் கூட கிடையாது. சாமியாருக்கு யாராவது நேரம் பற்றி பேசினாலே கோபம் வரும், அவன் போய் விட்டான்.

சிவராமனுக்கு சப்பென்று போய்விட்டது. மைதிலியிடம் போனான், நடந்ததை சொன்னான்.

இப்போ யாரைக் கேட்கிறது? நம்ம ஊர்ல ஒவ்வொரு சாமியார் ஒவ்வொரு விதத்திலே பேமஸ் டயப்படி செய்கிற சாமியார், நேரமே பார்க்காத சாமியார். ஆனால் எல்லோர்கிட்டயும் கூட்டம் இருக்கு, சிவராமன் நொந்து போய் பேச ஆரம்பித்தான்.

சும்மா சாமியைப் பத்தி பேசாதீங்க, பக்கத்து வீட்டுக்காரர்கள் ரொம்ப பெருமையா சொன்னாங்க.
ஒன்று நிச்சயம், நம்ம pசழபசயஅ படி போக முடியாது, கவலைப்படாதே, பார்த்து விட்டே போகலாம் விடிய விடிய பஸ் இருக்கு. இப்போ தமிழ்நாட்டில் இருக்கற மாதிரி பஸ் வசதி வேறெங்கும் இல்லை.

சுற்றி சுற்றி வந்தார்கள். ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.

திடீரென சுருசுருப்பு அடைவது தெரிந்தது.

சாமியார் வர்ரார் சாமியார் வர்ரார் இங்குமங்கும் உட்கார்ந்திருந்த நின்றிருந்த மக்கள் எல்லோரும் திண்ணையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சாதாரண 4 முழ காவித்துண்டு இடுப்பில், மார்பை சுற்றி இன்னொரு காவித்துண்டு பராமரிப்பே இல்லாத தலை முடி கரு கரு வென்ற தாடி. நெற்றி முழவதும் விபூதி.

முகத்தில் ஒரு ஒளி, ஒரு அமைதி, தெய்வீகக் களை.

சாமியாரின் முகத்தை கண்ட சிவராமன் மனதில் ஒரு அலாதி அமைதி தோன்றியது. முகத்தில் நல்ல சாமியார் ஒருவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி தெளிவாக தெரிந்தது.

மைதிலி சாமியார் ரொம்ப லக்~ணமாக இருக்கிறார் நமது பிரச்சனைக்கு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது உனக்கு என்ன தோன்றுகிறது.

எனக்கும் தான், சிறு வயது சாமியாராக இருந்தாலும் தெய்வீக அமைதிஇ முகம் முழுவதும் ஒரு சிரிப்பு. ஆனந்த சிரிப்பு என்பார்களே. அது இது தானோ? என்ன சிரிப்பு.

சாமியார் மெதுவாக நடந்து ஆசிரமம் முழுவதும் நிதானமாக நடந்தார். நடையில் வேகமில்லை.

சிவராமன் கடிகாரத்தைப் பார்த்தான் நேரம் 6:35 மணி ஆயிற்று. இன்னும் ஒரு மணி நேரத்தில் முடிந்தாலும் 8:00 மணி பஸ்ஸை நிச்சயம் பிடித்து விடலாம். சென்னைக்கு 10:30 மணிக்கு போய் விடலாம் மைதிலியிடம் கிசுகிசுத்தான்.

வேலை முடியட்டுங்க, இங்கேயே படுத்துவிட்டு காலையில் கூட போய் விடலாம் நாளை ஞாயிற்றுக்கிழமை தான். பேசாம சாமியை பாருங்க. மனம் ஒப்பி மனதில் வேறு எந்த நினைப்பும் இல்லாமல் முழு மனதுடன் வேண்டிக்கொள்ளுங்கள், நம்ம பிரச்சனைக்கு முடிவு பக்கத்திலே இருக்கிறது என் உள் மனது சொல்லுது நீங்களும் வேண்டிக்குங்க என்னையும் தொந்தரவு செய்யாதீங்க.

அவள் மனதில் வெளிப்பட்ட திருப்தியை அவனால் உணரமுடிந்தது அதுவே அவன் மனதை லேசாக்கியது. அவள் சொன்னதோடு மட்டும் நிற்காமல் ஒருமித்த மனதுடன் வாய் முணுமுணுப்பது வெளியிலேயே தெரிந்தது.

சாமியார் வந்தார், திண்ணையில் உட்கார்ந்தார். ஒரு சீடர் பக்கத்திலுள்ள வயடிடந கயn ஜ ஆன் செய்தார், அது மேலே உள்ள கம்பத்திலிருந்து சுழன்று சுழன்று காற்றை மிதமாக வழங்கிக் கொண்டிருந்தது.

யாரோ ஓரிருவர் என்ன சொன்னார்கள் என்று சரியாக புரியவில்லை சாமியார் கலகலவென்று சிரித்தது மட்டும் தெளிவாகக் கேட்டது.

சரியாகவே கேட்க மாட்டேங்கிறது, சற்று முன்னால் போய் உட்காரலாம்.

சிவராமனும் மைதிலியும் சற்று முன்தள்ளி சாமியாரின் பக்கமாக முன்னேறி உட்கார்ந்தார்கள்.

அப்போது ஒரு தம்பதிகள் ஆறு வயது குழந்தையை கொண்டு வந்தார்கள், அது மனநிலை குன்றிய குழந்தை என்று சொல்லிட விளங்கியது.

மைதிலி “அதோ பாருங்கள், நம்ம சித்து மாதிரி, பாவம் மனது ரொம்ப க~;டமாயிருக்கு.

அந்த குழந்தை ஒன்றும் புரியாமல் சாமியார் அருகில் போய் நின்றது. சாமியார் திடீரென இறங்கி வந்து குழந்தையை வணங்கினார். அதற்கு ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்தார். அதுவும் பழத்தை வாங்கி கொண்டு ரயில் மாதிரி ஊதிக் கொண்டு சென்றது.

கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா சாமியார் கேள்வி விடுத்தார்.

பதிலில்லை. சாமியார், கடவுள் என்றால் யார்? அவருக்கு என்ன குணம்?

மறுபடியும் மௌனம். எல்லாவற்றையும் கடந்தவர். விருப்பு வெறுப்பு அற்றவர், நல்லது கெட்டது தெரியாதவர்.

இப்போ வந்த பையன் கடவுள் மாதிரி தான். அவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது நல்லது கெட்டது தெரியாது. ஆண், பெண் வித்தியாசம் தெரியாது. அவனும் ஒரு வகையில் கடவுள் தான். அவன் செய்யும் செயல்களுக்கு பாவம், புண்ணியம் ஏதும் கிடையாது. இவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது. அவர்கள் நமக்கு குழந்தையாய் பிறந்தால் அதுவும் ஒரு வித கருணைதான். நேரடியாக கடவுளை ஆராதனை செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி தான். அவனை நமக்கு கிடைத்த தண்டனையாக பார்க்கக் கூடாது. அவன் கொடுத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். குழந்தையை தெய்வம் போல் பாவிக்க வேண்டும். அப்படி பார்த்தால் அந்த தியாகத்தை விட பெரிய தியாகம் ஒன்றும் இல்லை என்று தெரியும். அதில் கிடைக்கும் ஆத்ம சுகம் சொல்லி விட முடியாது.

குழந்தையின் பெற்றோர்கள் அவனை ஓடிச்சென்று மிகுந்த பரிவுடன் அணைத்துக் கொண்டார்கள்.

சரி, போகலாம். மைதிலி சிவராமனை அழைத்தாள்.

நம்ம சாமியாரைப் பார்க்கவே இல்லை, சிவராமன் இழுத்தான்.

எதற்கு வந்தோமோ அதுதான் முடிந்து விட்டதே. சாமியார் நமக்கு பதில் சொல்லி விட்டாரே. மைதிலியின் முகத்தில் ஏற்பட்ட தெளிவு அவனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுத்தது.

இருங்கள். நானே சாமியாரிடம் கேட்கிறேன்.

அயல் நாட்டில் எல்லாம் இந்த மாதிரி கேஸை ஆநசஉல முடைடiபெ னு டில ளநஉவழைn சொல்லி போட்டுள்ளார்களே.

மைதிலி எல்லார் பார்வையும் தன் மேல் பட கூசினாள்.

சாமியார் குரல் வந்த பக்கம் திரும்பினார் யாரம்மா நீ.

நான் மெட்ராஸிலிருந்து வந்திருக்கேன்.

நீ சொன்னதை திருப்பி ஒரு தரம் சொல்லு.

மைதிலியால் சொல்ல முடியவில்லை. மற்றவர்கள் பார்வை உள்ளிருந்த சோகம் வார்த்தைகளை வெளிவர விடவில்லை. கண்கள் மட்டும் பொல பொலவென்று கண்ணீரை உதித்தன.

சாமியார் சமாதானப்படுத்திவிட்டு அமரச்சொன்னார்.

உங்கள்ளே எத்தனையோ பேருக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. பிரச்சனைகளுக்காக எவ்வளவோ பேர் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருக்கீங்க, அவங்க மட்டும் எழுந்து நில்லுங்க.

ஒருவரும் எழவில்லை.

பிரச்சினைக்காக பயந்து தற்கொலை செய்து கொள்ள ஒருவரும் விரும்பவில்லை. பிரச்சினைகளை சொல்லக்கூடாது. பிரச்சினைகளை சமாளிக்க பழக்கப்பட்டுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளை சமாளிக்கும் போது அதில் ஈடுபாடும் ஈஸ்வரபக்தியும் இருந்தால் அதுவே இறைபணியாகும். இப்போது நாம் பிரச்சினைகளையே கொன்றுவிட்டால் அடுத்த பிறவியில் மீதியை அனுபவிக்கவே வேண்டும். இறைவன் தீர்ப்பில் குறை இருக்காது. ஈஸ்வரன் கொடுத்த வரமாக நினைத்து வழிபட்டால் நமக்கு மனதிற்கு அமைதியும் இறைவனுக்கு சேவை செய்த மனநிறைவும் கிடைக்கும்.

விவேகானந்தரை அமெரிக்காவில் உங்கள் தேசத்தில் இவ்வளவு தெய்வங்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு விவேகானந்தர் இவ்வளவும் போதாது. இன்னும் தேவை, ஒருவருக்கு எதில் மனம் லயக்கிறதோ, எதன் மேல் முழு கவனமும் கொஞ்சம் கூட சிதறாமல் வைக்க முடியுமோ அதெல்லாம் தெய்வங்களாகும் என்றார்.

நம் குழந்தை, தெய்வ குணங்களோடு விருப்பு, வெறுப்பு இன்றி, ஆண், பெண், பேதமின்றி நல்லது, கெட்டது பார்க்காமல் இருந்தால் அது ஏன் தெய்வமாகக் கூடாது, நிச்சயம் அது தெய்வம் தான். அயல் நாட்டுக்காரர்கள் ஆராய்ந்து பார்த்து “கண்டதே கோபம்” என்றிருப் பவர்கள். அவர்கள் நம்மைப் பார்த்து திருந்தவே வேண்டுமேயன்றி, நாம் அவர்களைப் பார்த்து தவறான பாதையில் போகக் கூடாது.

கூட்டத்தை விளக்கிக் கொண்டு மைதிலி சாமியாரிடம் அருகில் சென்று நெடுஞ்சாண் கிடையால் விழுந்தாள்.

கண்கள் கண்ணீரைக் கொட்டின, வார்தைகள் வரவில்லை.

சாமியார் கை உயர்த்தி ஆசீர்வதித்தார். ஒரு ஆப்பிள் பழமொன்றையும் கொடுத்தார். கவலைப் படாதே, இறைவன் அருள் உனக்குண்டு, என்று ஆசி வழங்கினார்.

மைதிலி பேச முயற்ச்சித்தாள், பேச்சு வரவில்லை, நேரே சிவராமன் அருகில் சென்று அவள் தோள் பற்றி வெளியே கூட்டி வந்தான்.

மைதிலியின் முகம் தெளிவாகவும், பிரகாசமாகவும் இருந்தது. அதைக் கண்டு சிவராமன் முகமும் மலர்ந்தது.

பஸ்ஸில் ஏகப்பட்ட கூட்டம். பேசக்கூட முடியவில்லை. ஆனால் மைதிலியிடம் ஏதும் கேட்க வில்லை, எப்படி கேட்பது, எப்படி அவள் செயல்படுவாள் என்று ஒன்றும் புரியாத நிலையில் அவளை அப்படியே விட்டு விடுவதுதான் சிறந்தது என்று விட்டுவிட்டான்.

சிவராமன் கேட்கட்டும் என்று மைதிலியும், மைதிலி சொல்லட்டும் என்று சிவராமனும் போட்டி போட்டுக் கொண்டு மௌனம் காத்தார்கள்.

நேரே பஸ் பிடித்து சென்னை வரும்போது மணி 9:30 ஜ தாண்டி இருந்தது.

மறு நாள் காலை.

காலை எழுந்தாள் மைதிலி, சித்துவை சுற்றி போட்டிருந்த குழாய்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருந்தன.

சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் மைதிலியின் மலர்ந்த முகத்தைப் பார்த்து நிம்மதி அடைந்தான்.

குளித்துவிட்டு ஈர தலையுடன் சிரித்த முகத்துடன் சித்துவுக்கு பிளாஸ்டிக் மக்கினால் தண்ணீர் ஊற்றி உடலை தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள், பவுடர் போட்டு அவனை அலங்கரித்து வைத்திருந்தாள், 10 வரு~ம் கழித்து அவனை அந்த நிலையில் பார்த்து மிகவும் சந்தோ~மடைந்தான் சிவராமன். டேப்பில் ருதிரம் காஸெட் ஓடிக்கொண்டிருந்தது.

மைதிலி முகத்தில் முழு ஈடுபாடு தெரிந்தது. சிவராமன் ‘என்ன மைதிலி நான் ஆபிஸ் போகட்டுமா என்றான்.

அதற்கு மைதிலி, வேண்டாம். இன்று லீவு போடுங்கள். எல்லோரும் தெய்வத்தையும், நிம்மதியையும் தேடி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் இவ்வளவு எளிதில் நம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கிற அருமையை இன்று தான் தெரிந்து கொண்டேன், நீங்களும் உணர்வீர்கள்.

தெய்வமும், தெய்வீகமும் அங்கு நிறைந்திருந்தது.

- 2013 டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. வாரமலர் (05-01-14).

எஸ்.வெங்கட்ராமன்
வயது: 70, நெய்வேலியில் இன்ஜினியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். தற்சமயம், சுய தொழில் செய்து வருகிறார். அடுக்குமாடி தானியங்கி கார் நிறுத்துவதற்கான, புதுமுறையை கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றுள்ளார். இவர் எழுதிய, முதல் சிறுகதை இது.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to சிறுகதைகள் (Short Stories)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron