[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நிழல்கள் தொடாத நிஜங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
இங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.

நிழல்கள் தொடாத நிஜங்கள்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 24th, 2014, 1:54 am

அடியேய் என்னடி இன்னுமா தூங்குற? எழுந்திரு இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வர்ராங்க இன்னும் தூங்ககுற? என்று அம்மாவின் குரல் அடுப்படியில் இருந்து ஒளித்தது. இங்கு 8 மணியைத் தாண்டி அலாரம் அடித்துக் கொண்டு இருந்தது. மல்லிகா அசந்து தூங்கிக் கொண்டே கடிகாரத்தை நிறுத்தி விட்டு மறுபடியும் உறங்கினாள்.

ஆனால் மல்லிகாவின் அம்மா மறுபடியும் ஏ ராணி மணி 8 ஆகிவிட்டது என்று கூப்பிட்டாள். என்னது மணி 8 ஆகிவிட்டதா என்று அலறி அடித்து எழுந்திருத்தாள் மல்லிகா.

கொஞ்ச நேரத்தில் அவளுக்கு நேற்று தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. மல்லிகா உன்னுடைய காதலன் என்ன சொல்கிறான் என்று ரேகா கேட்டாள்.

ஆமாம் ரேகா நான் கூட உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நீயே கேட்டு விட்டாய். ஏய் இங்க என்ன பெண்கள் மானாடு நடக்குது என்று கேட்டுக் கொண்டே ரவி வந்தான்.

அது வந்து ரவி என்று மல்லிகா தடுமாற. ரவி உம் அப்ப என்ன நண்பன் சொல்றது எல்லாம் பொய் என்று கூறினான்.

இல்லடா ரவி என்னை பெண் பார்க்க வருகிறார்கள். உடனே அப்படிப்போடு யாரு மாட்டுனா! உன்ன கல்யாணம் பண்ணிக்கப் போறவன் பாவம் என்று கேலி செய்தான்.

ரவி சும்மா இருடா! நானே கொளப்பத்துல இருக்கிறேன். ஆமாம்டா ரவி உனக்கு தெரியாத மாதிரி இருக்க. அவள் காதலிக்கும் விசயம் உனக்குத் தெரியும்ல என்று ரேகா கூறினாள்.

அட ஆமா என்ன அந்த காதலன கலட்டி விட்டாச்ச? இல்ல? என்றான். உடனே டேய் நண்பன் பாக்குறேன் இல்லன்னா அடித்து பல்லைக் கலட்டி விடுவேன் என்றாள் மல்லிகா.

ரவி ரேகா நான் ராஜாவிடம் பேசி விட்டேன். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம். அதற்கு உங்கள் உதவி வேண்டும் என்று கூறினாள்.

இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள், ஏய் என்ன சொல்கிறாய். திடீரென்று கூறுகின்றாய் என்று கேட்டார்கள். ஆமாம் நாங்கள் முடிவு செய்து விட்டோம். நம் நண்பர்களிடம் எல்லாம் கூறி நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றாள்.

கொஞ்ச நேரம் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்தார்கள். பிறகு முடிவு செய்து விட்டார்கள். சரி நாங்கள் அலுவலகத்தில் உள்ள நம் நண்பர்களுக்கும் மற்றும் நம் கல்லூரி நண்பர்களுக்கும் கூறி விடுகிறோம்.

நீயும் எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் கூறிவிடு. நாளை காலை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் உங்களுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து விடலாம். சரி இப்ப பொண்ணு பாக்கத்தானே வருகிறார்கள். பொண்ணு பாத்துட்டு போகட்டும் பிறகு பாத்துக்களமே என்று ரவியும் ரேகாவும் கேட்டார்கள்.

இல்லடா! நான் ஒருத்தனை காதலித்து விட்டு இன்னொருத்தனை ஒன்னுமே தெரியாத மாதிரி புதுப்பொண்ணா வந்து என்னல நிக்க முடியாது என்று கூறினாள்.

ஆமாம் இவ பெரிய ஆளுடா என்று கூறினாள் ரேகா. கொஞ்ச நேரத்தில் மற்ற நண்பர்களும் வந்து விட்டார்கள். வந்தவுடன் ரேகாவும் ரவியும் நடந்ததை கூறினார்கள்.

அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் தோழிக்காக வேறு வழியில்லாமல் எல்லோரும் இந்தக் கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.

அப்போது ஏய் மல்லிகா நாங்கள் எல்லாம் தயார். ஆமாம் உன் ராஜாவிடம் சொல்லி விட்டாயா?

அதெல்லாம் சொல்லியாச்சு! என்றாள் வெட்கத்துடன் மல்லிகா. நாளைக்கு அவரோட நண்பர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவதாக கூறி இருக்கிறார். டேய் இங்க பாருட அவன் போய் அவரு ஆயிட்டாரு அந்த ராஜா என்று ஒருவன் கிண்டல் செய்ய.

ஆமாம் காதலன் கணவன் ஆகப் போகிறார் இல்ல. அதான் மரியாதை கூடுது என்று இன்னொரு நண்பன் கூறினான். சரி சரி எல்லோரும் அமைதியாக இருங்கள் அவ வெட்கத்துல இப்பவே கரைந்து போகப் போகிறாள். நாளைக்கு அவளுக்கு கல்யாணத்திற்கு பிறகு கணவனுடன் கரைந்து போக கொஞ்சம் விட்டு வையுங்கள் என்றாள் ரேகா.

அது சரி நாளைக்குத்தான் உன் ராஜாவை நாங்கள் பார்க்கப் போகிறோம். இத்தனை நாளா எங்களுக்கு காட்டமயே காதலிச்சு இருக்க பாக்களாம் நாளைக்கு ஆள் எப்படி இருப்பாரேன்று என்று ரவி கூற அனைவரும் ஆமாம் ஆமாம் என்று சிரித்தார்கள்.

இருந்தாலும் நீ ரொம்ப அலுத்தக்காரிதான் நாளைக்கு கல்யாணம் என்று இன்று மதியம் எங்களிடம் உதவி கேட்கிறபாரு நீ பெரிய ஆளுதான் என்றான் நண்பன் மகேஷ். உங்க வீட்ட எப்படி சமாளிக்கப் போற என்றான் மகேஷ்.

நான் நாளைக்கு காலையில கோயிலுக்கு போயிட்டு வருவதாக கூறிவிட்டு திருமண பதிவு அலுவலகத்திற்கு வந்து விடுகிறேன். நீங்களும் அங்கு வந்து விடுங்கள் அவரும் அங்கு வருவதாக கூறி விட்டார் என்றாள் மல்லிகா.

எல்லாம் பயங்கரமான திட்டம் போல் உள்ளது. எல்லவற்றையும் முடிவு பண்ணி விட்டு தான் இங்கு வந்து எங்களிடம் கூறுகிறயா என்று ரேகா கேட்டாள். அப்பா நீங்க யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். நேற்றுவரை அவரின் பக்கமும் பல பிரச்சனைகள். எனவே தான் இது எல்லாம் முடிவு செய்து விட்டு சொல்லாலம் என்று நினைத்து இருந்தேன் என்றாள் மல்லிகா.

ராஜாவின் குடும்பத்தினர் மிகப் பெரிய குடும்பம். அவர்கள் சொந்தக்காரர்கள் அரசியலில் எல்லாம் இருக்கிறார்கள். அதனால் நாளை திருமணம் முடியும் வரை திகிலாகத்தான் இருக்கும். இருந்தாலும் உங்கள் முன்னால் தைரியமாக நிற்கின்றான் என்றாள் மல்லிகா.

ஏய் மல்லிகா இந்த பொய்யெல்லாம் இங்கு கூறதே என்றாள் சிரித்துக் கொண்டே ரேகா. சரி சரி விடு. டேய் எல்லோரும் இங்கு கேளுங்கள். நாளைக்கு மல்லிகாவின் திருமணத்திற்கு நாம் எல்லோரும் ஆளுக்கொரு பொருப்பை எடுத்துக் கொள்வோம்.

டேய் நம் மத்த நண்பர்களுக்கும் சொல்லிடுங்க. நாளைக்கு கல்யாணச் செலவு மொத்தமும் நம்முடையது என்று எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். பிறகு அனைவரும் அலுவலகத்தில் வேலை முடிந்ததும் அவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். இன்று அலுவலகத்திற்கு காதல் கல்யாணத்தின் கதை தான் ஓடியது. அவர்கள் நேரம் இன்று அலுவலக மேற்பார்வையாளரும் விடுமுறை.

வீட்டிற்கு வந்ததும் இரவில் நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தைப் பற்றி அம்மா பேசிக் கொண்டு இருந்தாள் மல்லிகாவின் அம்மா. ஆனால் மல்லிகா தன் காதலனின் நினைவுகளில் மூழ்கி விட்டிருந்தாள். அவள் நினைவுகளில் ராஜாவை முதல் முதல் பார்த்தது தான் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று அலுவலகத்திற்கு செல்வதற்க்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். இது அவள் அலுவலகத்திற்கு சேர்ந்த முதல் நாள். இந்த பேருந்து நிலையத்திற்கும் முதல் நாள். அவளுடைய ஏரியாவாக இருந்தாள். அவளுக்கு பழக்கமான இடம் அதனால் எல்லோரையும் தெரியும்.

ஆனால் இது புது இடம் என்பதால் அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று இருந்தால். அப்போது அவளின் பின்பு இருந்து தன்னை யாரோ பார்பது போல் இருந்தது. உடனே அவளுக்கு அருகில் விழுந்த நிழலைப் பார்த்தால் அது ஒரு ஆணிண் உருவம். ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாளும் இவளை அந்த ஆணலகன் நிழல் தொடர்ந்தது. ஆனால் இவள் நிழலை மட்டும் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டாள்.

ஒரு நாள் அந்த நிழலில் இருந்த ஆண்மகன் அவள் அருகில் வந்தான். வணக்கம் உங்களை தினமும் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். அதான் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது என்று கூறினான்.

மல்லிகா மெதுவாக திரும்பிப் பார்த்தாள். ஆனால் அவன் அவள் திரும்பும் பொழுது கொஞ்சம் திரும்பி நின்று இருந்தான். அவளால் அவன் முகத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை. அவன் அவளை எந்த விதத்திலும் நோகடிக்கும் என்னமும் இல்லாமல் அமைதியாக நின்று இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அடுத்த நாளும் அவன் வந்து நின்றான் அவள் அருகில். இப்போது கொஞ்சம் தயக்கம் குறைந்தவளாக இருந்தாள் மல்லிகா. அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணம் வரத் தொடங்கியது. அவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள். உடனே தயங்கி தயங்கி வணக்கம் என்று கூறினாள். பதிலுக்கு அவனும் வணக்கம் என்றான்.

என்ன இன்று புதிதாக நீங்கள் வணக்கம் எல்லாம் கூறுகிறீர்கள் என்றான். ஒன்றுமில்லை சும்மாதான். அப்புறம் நீங்கள் தினமும் இங்கு இருந்துதான் அலுவலகம் செல்வீர்களா என்று கேட்டாள். ஆமாம் என்றான் அவன். இப்படி பேசி பேசி அவர்கள் காதலும் வளர்ந்து இன்று திருட்டு திருமணம் வரை வளர்ந்து விட்டது. இப்படி பழைய நினைவுகளில் நேரம் கழிந்து தூங்கியதால் அவளுக்கு காலையில் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது.

அவசர அவசரமாக குளித்து விட்டு சாப்பிடாமல் கூட வெளியே கிளம்பினாள். ஏய் ஏய் நில்லு என்ன எந்திருச்சது தாமதம். ஆனால் சொல்லமா கொள்ளமா வெளியில கிளம்பி போற. இன்னிக்கு உன்னை அலுவலகத்திற்கு விடுப்பு போடச் சொன்னேன் இல்ல. ஆனால் நீ எங்க இப்படி கிளம்பி போற? மாப்பிள வீட்டுக்காரங்க வர்ற நேரம் ஆயிடுச்சு. அப்ப வேற மிகவும் குழப்பத்துல இருக்காறு என்று கூறினாள்.

அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடுறேன். அப்பாக்கிட்டு சொல்லதா இப்ப வந்துடுறேன். அப்படிச் சொல்லு இன்னிக்காவது கோயிலுக்கு போயிட்டு வரணும்னு தோணுச்சே. ஆனால் பொறுடி யாராவது கூட வரட்டும் என்றாள் வெகுளித்தனமாக.

மல்லிகா அம்மாவையே கண்களங்கியவாறு பார்த்துக் கொண்டு இருந்தாள். என்னடி இப்ப என்ன கல்யாணம நடக்கப் போகுது. பொண்ணுதான பாக்க வர்றங்க இதுக்கு போயி அழுதுகிட்டு என்றாள்.

ஆமாம் என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டு அம்மாவின் காலில் விழுந்தாள் மல்லிகா. ஏய் கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்கு அழுதுகிட்டு காலில் விழுந்துகிட்டு என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்தாள் மல்லிகா. பிறகு அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் என்று அம்மாவின் விரல்களில் இருந்து விடுதலை பெற்று சென்றாள் மல்லிகா.

இங்க இருக்கிற கோயிலுக்கு போயிட்டு வந்து மாப்பிள்ளையை பாக்கிறதுக்கு இவள் இப்படி சின்ன குழந்தை மாதிரி பன்றாளே என்று சிரித்துக் கொண்டே அம்மா உள்ளே சென்றாள் மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குள் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்க்காக.

மல்லிகா நேராக ஆட்டோ நிற்கும் இடத்திற்கு வந்து ஆட்டோவில் ஏறி ரிஸ்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டால். அங்கு அவளின் நண்பர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.

அப்போது ராஜாவின் சொந்தகாரர் ஒருவர் பார்த்து விட்டார் அவர் உடனே அவரின் அப்பாவுக்கு போன் செய்து விட்டார். இது அவர்களுக்கு தெரியவில்லை. இது தெரிந்தவுடன் ராஜாவின் தந்தை ஆட்களுடன் கிளம்பிவிட்டார். அவள் ஆட்டோவில் ஏறி கோயில் இருக்கும் பக்கம் போகமால் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் பக்கம் போகும் போது மல்லிகாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சொந்தகாரர் ஒருவர் பார்த்துவிட்டார். மல்லிகா என்று சத்தம் போட்டு கூப்பிட்டார். ஆனால் அவளுக்கு ஆட்டோ போன சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை.

உடனே அவர் மல்லிகாவின் வீட்டிற்கு போன் செய்தார். அவள் அம்மாவிடம் ஏம்மா உன் பொண்ணு ஆட்டோவில் எங்கோ போய் கொண்டு இருக்கிறாள் என்று கூறினார். அதற்கு அவள் அம்மா இல்லண்ணா அவள் கோயிலுக்கு போகிறாள் என்று கூறினாள்.

இல்லமா அவள் வேற எங்கயோ போற மாதிரி இருக்குது என்றார். உடனே அவள் அம்மாவுக்கு பயம் தொற்றிக் கொள்ள. அண்ணா அவள் எங்கு செல்கிறாள் என்று பாருங்கள் என்று கூறினாள். உடனே அவர் வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து அவள் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார். அவள் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகில் செல்லும் போதே அவள் தாயாருக்கு போன் செய்து கூறி விட்டார்.

அதே நேரத்தில் ராஜாவும் அவன் நண்பர்களும் வந்து இவளுக்கு போன் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் போன் லைன் கிடைக்கவில்லை. அப்போது தான் தெரிந்தது எல்லாரும் ஒரே நேரத்தில் போன் செய்து கொண்டு இருக்கிறோம் என்பது.

டேய் யாராவது ஒருத்தர் முயற்சி பண்ணுங்கடா என்று ரவி கூற. ராஜா போன் செய்தான். மல்லிகா போனை எடுத்தாள். மல்லிகா எங்க இருக்க. ராஜா இதோ திரும்பிப் பார் ஆட்டோ உள்ளே வருகிறது பார் என்றாள். திரும்பிப் பார்த்தான் அங்கு மல்லிகா ஆட்டோவில் இருந்து ஒரு தேவதை போல் இறங்கி வந்தாள் மல்லிகா.

மல்லிகா வருவதற்கு முன்பே அவரின் தோழர்களும் ராஜாவும் மற்றவர்களும் அறிமுகமாகி இருந்தார்கள். சரி ராஜா பொண்ணை ரசிச்சது போதும் வாங்க உள்ள யாராவது பார்த்து விடப் போகிறார்கள். சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம் என்று ரவி கூற எல்லோரும் உள்ளே சென்றார்கள்.

மல்லிகாவின் வீட்டிலிருந்தும் ராஜாவின் வீட்டிலிருந்தும் வந்து கொண்டிருப்பது தெரியாமல் இவர்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் திருமணம் செய்ய அதிகாரி அழைத்தார். ராஜாவும் மல்லிகாவும் மாலை மாற்றி கொண்டார்கள். கையெழுத்துப் போடுங்கள் என்று அதிகாரி கூற ராஜா கையெழுத்துப் போட்டான். மல்லிகா பேனவை வாங்கி கையெழுத்துப் போடப் போனாள் அப்போது அடியேய் அடியேய் என்று சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தாள் அவள் அம்மா.

மறுபடியும் அடியேய் எழுந்திருடி எவ்வளவு நேரமா உன்ன கூப்படுறது. எழுந்திரு எவ்வளவு நேரம் ஆச்சு. எந்திருச்சுப்பாரு மணி 8 ஆயிடுச்சு. அலுவலகத்திற்கு நேரம் ஆகவில்லையா என்று கேட்டாள்.

அவசர அவசரமாக முழித்தாள் மல்லிகா. சுற்றியும் முற்றியும் பார்த்தாள். ஏய் என்னடி சுற்றி முற்றியும் இப்படி வெறிச்சுப் பாக்குற. இது நம்ம வீடு தாண்டி என்றாள். அப்போது தான் மல்லிகாவுக்கு புரிந்தது நாம் கண்டது அத்தனையும் கனவு என்று.

எல்லாத்துக்கும் அவன் தான் காரணம். அவனிடம் இன்று என் காதலை சொல்லி விட வேண்டும் என்று வாய்விட்டு கூறிக் கொண்டே குளித்து முடித்தாள். சாப்பிட உட்கார்ந்ததும் அவளின் அம்மா என்னடி இட்லி சாப்பிடுறியா இல்ல தோசை சாப்பிடுறியான்னு கேட்டாள். மல்லிகா நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னாள். என்ன சொன்ன என்று அம்மா கேட்க. இல்லமா எனக்கு பசியில்லை. நான் அப்புறமா அலுவலக கேண்டீன்ல ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டாள். இங்கு அவளின் அம்மா சாப்பிட்டுப் போகச் சொல்லி கத்திக் கொண்டு இருந்தார்கள். மல்லிகாவின் காதில் அது விழவில்லை.

ஆம் மல்லிகா அவள் தினமும் நிற்கும் பஸ் நிலையத்தில் அவளின் பின்னால் நின்று பார்க்கும் ஆண் அழகனின் நிழல் தன் பின்னால் தினமும் நின்று பார்க்கும். அவள் அந்த நிழலைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்கத் தொடங்கி விட்டாள்.

பின்னால் இருந்து தினமு; அவளை ரசிக்கும் அந்த அழகான நிழலுக்கு சொந்தக்காரன் வந்து தன் காதலை சொல்லுவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அவள் ஏமாந்து விட்டாள். ஆனால் அவளால் காதலை மறைத்து வைக்க முடியவில்லை அதை இன்று கூறிவிடலாம் என்று வந்து விட்டாள்.

பஸ்நிலையத்தில் வந்து இன்றும் அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து அந்த நிழலையே தலைகுனிந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பேசவில்லை. உடனே மல்லிகா மெதுவாக பேசத் தொடங்கினாள். இன்று பஸ்நிலையத்தில் யாரும் இல்லை அவளும் அவள் காதலிக்கும் நிழல் மட்டுமே இருந்தது. சரியென்று இவளாக பேச ஆரம்பித்தாள். நீங்கள் யாருன்னு தெரியல. ஆனால் நீஙகள் தொடர்ந்து எனக்கு பக்கத்துல நின்னு என்னப்பாக்குறத இந்த ஒரு வருடமா நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

நீங்களும் என்னப்பாக்கிறத நிறுத்தல. எனக்கே தெரியாமா உங்கமேல விருப்பம் வந்திடுச்சு. நீங்க வந்து பேசுவீங்கனு நெனச்ச வந்து பேச மாட்டிங்கீறிங்க. அதான் என் மனசுல இருக்க விருப்பத்த உங்களுக்கு தெரிவிக்கிறேன். நான் உங்கள காதலிக்கிறேன் என்று கூறினாள்.

மல்லிகா பேசிய பிறகும் அவன் ஏதும் பேசமால் இருப்பதால். ஏன் இப்பவது ஏதாவது பேசலாம்லன்னு சொல்லிக்கிட்டே திரும்பிப் பார்த்தாள். அங்கு நின்ற உருவத்தைப் பார்த்து சிலையென உறைந்து போனாள்.

ஆமாம் அங்கு நின்று இருந்தது ஒரு ஆண் அல்ல. ஒரு ஆண் மகனின் சிலை. இவள் தலை குனிந்து நிழலை மட்டுமே பார்த்தாள். இன்று தலைநிமிர்ந்து பார்த்ததும் அந்த நிழலுக்கு சொந்தம் ஒரு அழகான ஆண்மகனின் சிலை என்றாதும் இவள் சிலையென உறைந்து போனாள்.

கற்பனை – எழுத்து – இயக்கம்
இரா. செய்கணேசு. – 1998
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to சிறுகதைகள் (Short Stories)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: Majestic-12 [Bot] and 64 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron