[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • உன்னுடன் வரும் எனது பொழுது
Page 1 of 1

உன்னுடன் வரும் எனது பொழுது

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 6th, 2017, 4:02 pm
by அ.இராமநாதன்
நம்மை
மழை நனைத்த பொழுது
இன்னும்
நீர்த்திவலைகளாக
மனதில் படிந்திருக்கிறது

.

புத்தக அடுக்குகளிலிருந்து
தலை நீட்டித் தெரியும்
நான்காய் மடிந்த காகிதம்
முழுமையாய் சொல்கிறது
உனது துயரங்களை

.

விம்மியடங்கும் ஓசைகள்
மெலிதாய் எழுகின்றன

.

கடிதம்
புத்தகத்தினுள் வைக்கப்பட்டவுடன்
மழை தொடங்கிவிட்டது

.

இங்கு
வேறு யாருமில்லை
புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட
எனது விரல்களில்
மழைத்துளி பட்டுத் தெறிக்கிறது

மழை நனைத்துக் கொண்டிருக்கிறது
மரங்களை
செடிகளை
பூக்களை
பறவைகளை
கூடவே
உன்னையும்
உன்னுடன் வரும் எனது அன்பையும்
.

நீ
கொண்டு செல்கிறாய்
நம்மை நனைத்த மழையையும்
அந்த பொழுதையும் .

————————-

………..சக்தி ஜோதி
எனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து